September 27

Date:27 Sep, 2017

September 27

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 27

                                          தேசிய செய்திகள்

 

 

  • (செப்டம்பர் 26) – முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்   அவர்களின் (85வது) பிறந்த நாள்.

 

  • பாட்னாவை(பீகார்) சேர்ந்த ராஜ்குமார் (98 வயது) என்ற முதியவர் நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

 

  • ஆசிய அளவில் சிறப்பு வாய்ந்த முதல் 25 அருங்காட்சியகங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 அருங்காட்சியங்களும் இடம்பெற்றுள்ளன. அவை விக்டோரியா மெமோரியல் ஹால்(கொல்கத்தா), சிட்டி பேலஸ்(ஜெய்ப்பூர்), பகோர் கி ஹவேலி(உதய்பூர்), யோதஸ்தால்(போபால்), ஹால் ஆஃப் ஃபேம்(ஜம்மு காஷ்மீர்).

 

  • சர்வதேச தொழில்துறையில் சிறந்து விளங்கும் பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி, சந்தா கோச்சார், ஷிகா சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

 

  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓஎன்ஜிசி) தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் சசி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • இந்தியாவில் 2020ம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களுக்கான 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

  • டெல்லியில் (செப்டம்பர் 26) நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மாநாட்டில் பங்குபெற்ற தமிழகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கத்தில் மாநில அரசு செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

 

  • தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்குகிறது. அதற்கான வரைவு பட்டியலை அக்டோபர் 2ம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிடுகிறது.

 

  • தமிழ்நாடு செரிமான நல அறக்கட்டளை சார்பில் ‘குடல் அழற்சி சர்வதேச மாநாடு’ சென்னை கிண்டியில் செப்டம்பர் 30ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

 

  • தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவராக ஏ.எம். விக்கிரமராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

  • சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட முதன் முறையாக உரிமை வழங்கப்படவுள்ளது

 

  • அமெரிக்க அரசு 8 வடகொரிய வங்கிகள் மற்றும் 26 வங்கி அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது. வடகொரியாவுடனான பிரச்சனையை தீர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என அமெரிக்க நிதித்துறைச்செயலர் ஸ்டீவன் மினுசின் தெரிவித்துள்ளார்

 

  • சமூக வலை தளங்களான பேஸ்புக், டிவிட்டரைத் தொடர்ந்து, செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ் – அப்புக்கும் சீனாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 

  • உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றான பைன் தீவில் (அண்டார்டிகா) உள்ள பனிப்பாறையில் சுமார் 266 சதுர கிலோ மீட்டர் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிப்பாறை அண்டார்டிகாவில் மிகவும் வேகமாக உருகும் பனிப்பாறையாகும்

 

  • இந்தியாவிலிருந்து தக்காளி ஏற்றி செல்லும் கண்டெய்னர் லாரிகள் பாகிஸ்தான் எல்லையில் நுழைய அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. மேலும் உள்ளுர் சந்தையில் கடும் தட்டுப்பாடு இருந்த போதிலும் இந்தியாவிலிருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட மாட்டாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

  • ஐ.நா.வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க ஆதரவாக அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கோரிக்கைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளது.

 

  • ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுவோர் மீது ஐ.நா. கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

 

  • பிலிப்பின்ஸ் நிறுவனங்களில் பணிப்புரியும் பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது

 

  • செப்டம்பர் 27ம் தேதி கூகுள் நிறுவனத்தின் 19வது பிறந்த நாள்.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

  • கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளை ஐசிசி அறிமுகபடுத்துகிறது. இந்த புதிய விதிமுறைகள் செப்டம்பர் 28க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவித்து உள்ளது. இந்த முறைப்படி கிரிக்கெட் களத்தில் மோசமாக நடந்து கொள்ளும் வீரர் கால்பந்து பாணியில் வெளியேற்றப்படுவார். 

 

  • 17வது ஜுனியர் உலக கோப்பை கால்பந்துபோட்டி அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை கொல்கத்தா, கொச்சி, டெல்லி, மும்பை, கவுகாத்தி, கோவா அகிய 6 நகரங்களில் நடக்கிறது. 

 

  • 57வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா தங்கப்பதக்கம் வென்றார்.

 

  • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை திரைப்படம் ஆக உருவாகிறது.

 

  • 57வது தேசிய ஓபன் தடகள போட்டியில் குண்டு எறிதலில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த தேஜிந்தர் பால் சிங் தங்கம் வென்றார். 

 

  • 57வது தேசிய ஓபன் தடகள போட்டியில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் ரயில்வே அணியைச் சேர்ந்த சரிதா பி.சிங் தங்கம் வென்றார். 

 

  • சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற பி மண்டல அளவிலான வாலிபால் தொடரில் எத்திராஜ் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.

 

  • சென்னையில் நடைபெற்று வரும் 57வது தேசிய தடகள போட்டியில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் கேரளாவைச் சேர்ந்த ஜினு மரியா மானுவேல் தங்கம் வென்றார்.

 

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

  • நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்ட 2வது (ஆகஸ்ட்) மாதம் ரூ.90,699 கோடி வரி வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

  • பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு செலவு இந்த ஆண்டு ரூ.14,000 கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

  • மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மற்றும் போர்ட்போலியோ மேனஜ்மெண்ட் நிறுவனங்கள் கமாடிட்டி பங்குகளில் வர்த்தகம் செய்ய செபி அனுமதி வழங்க உள்ளது.

 

  • ரிலையன்ஸ் கேபிடல், மருத்துவ காப்பீட்டுக்கென தனி நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது

 

  • ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் அணிந்த ‘பாக்சர் ஷார்ட்ஸ்கள்’ ரூ.3.5 லட்சத்திற்கு நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது.

 

  • மாருதி சுசுகி, வேகன் ஆர் காரின் மொத்த விற்பனை இந்தியாவில் 20 லட்சத்தை தாண்டி சாதனைப் படைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

  • நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம் டேட்ஸன் ‘ரெடி – கோ கோல்டு’ புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

 

 

 

Current Affairs

 

 

National News

 

 

  • The government has celebrated ‘Bharat Ke Kaushalzaade’ on the occasion for 3 years completion of Antyodaya Diwas

 

  • Rajnath Singh unveils ‘PENCIL’ (platform for effective enforcement for No error Child Labour)

 

  • Vice President M. Venkaiah Naidu today inaugurated the “Swachhta Hi Seva” and Shouchalayakkagi Samara (A crusade for toilets) program in Karnataka. 

 

  • Karnataka government has launched “vision-2025” project aimed at evolving a draft policy for development of state in next seven years.

 

  • Divyang Sarathi mobile application to empower the ‘Divyangjans’ by providing easier and convenience access of information pertaining to the schemes.

 

  • World Tourism Day – Sep 27.     Theme: ‘Sustainable Tourism’ – a tool for Development

 

  • Israel to boost ‘White Revolution’ in Haryana by benefits from the techniques and experience of Israel.

 

  • ISRO’s Mars Orbiter Mission (MOM) completes three years in orbit.

 

  • INS Tarasa (T94) Commissioned into Indian Navy at Naval Dockyard

 

  • New ground – water Treatment plants in Tripura, Agartala. 

 

 

 

International News

 

 

  • Apple and Google, Microsoft top list of the 100 most valuable brands

 

  • Russia launched the world’s biggest and most powerful icebreaker ship designed to transport cargo via the Northern Sea Route in the Arctic Ocean. 

 

 

Banking

 

  • State Bank of India lowered the minimum Average Monthly Balance in the savings amount to Rs.3000 from Rs.5000.

 

 

 

Business and  Economy

 

 

  • E – Commerce major Flipkart has acquired mobiles and IT products repair service company F1 into solutions for an undisclosed amount

 

  • The Asian Development Bank has lowered the growth forecast

 

  • The Kandla port trust has been renamed Deendayal Port Trust

 

 

Sports

 

 

  • Govindan Lakshmanan won the men’s 5000 Metro race on the opening of the 5th National open Athletics championship at New Delhi

 

  • In the 5000m women’s race L. Surya has won Gold

 

 

 

Awards

 

 

  • Madhur Bhandarkar and actress Hanra Malini will be felicitated at the 4th Indian film Festival of Russia for their contribution to Indian Cinema

 

  • Two Indians – Chanda Kochhar and Shikha Sharma made it to the ranking of most Powerful women in business list

 

  • Patanjali CEO Acharya Balkrishna among top 10 richest Indians with Rs.70000 cr wealth

 

  • Mukesh Ambani retains the richest Indian title for the Sixth year

Call Now