May 4

Date:04 May, 2017

May 4

We Shine Daily News

jkpo;

மே 4

தேசிய செய்திகள் :

 • உத்திரப்பிரதேசத்தில் மாநிலம் ஜலாவுன் மாவட்டத்துக்குட்பட்ட மடோரா கிராமத்தில் பொது இடங்களில் செல்போன் பயன்படுத்தினால் ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்திரப்பிரதேசப் பஞ்சாயத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 • நான்காவது முறையாக நடத்தப்பட்ட பிரம்மோஸ்-3 ஏவுகணை சோதனை தனது துல்லியமான திறனை வெளிப்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தானியங்கி இயக்கி (மொபைல் லாஞ்சர்) மூலம் இயக்கப்பட்ட ஏவுகணை துல்லியமாகச் சென்று இலக்கைத் தாக்கியது.

 

 • விமான பயணத்துக்காக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கிறபோது, ஆதார் எண் தெரிவிக்க வேண்டும் மற்றும் விமான நிலையத்தின் நுழைவுமுனைகளில் வைக்கப்பட்டுள்ள எந்திரம் மூலம் பயணிகள் தங்களது கையை ‘ஸ்கேன்’ செய்ய வேண்டும் என்று புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் இப்போது சோதனைரீதியில் ஐதராபாத் விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் கொண்டுவரப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரி கூறினார்.

 

 • பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் சர்க்கரைக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. இந்த மானியத்தை ரத்து செய்ய கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் அதிருப்தி அடைந்த சில மாநில அரசுகள், ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ (பரம ஏழைகள்) திட்ட பயனாளிகளுக்கு மட்டுமாவது மானியத்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கூறியது. இந்நிலையில், அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுக்கு சர்க்கரைக்கான மானியத்தை மீண்டும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • தமிழ்நாடு கவர்னராக இருந்த கே.ரோசய்யா, கடந்த ஆண்டு ஆகஸ்டு 30ம் தேதி ஓய்வு பெற்றார். அதையடுத்து, மராட்டிய மாநில கவர்னர் சி.வித்யசாகர் ராவ், தமிழ்நாடு கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கவர்னர் இல்லாத தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • தெற்காசிய நாடுகள் பயன்பெறுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஜிசாட்-9 செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படுவதை ஒட்டி ராக்கெட்டை ஏவுவதற்கான 28 மணி நேர கவுண்டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது. தெற்காசிய நாடுகளுக்கு சேவையளிக்கும் வகையில் ஜிசாட்-9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு செய்திகள் :

 • சிரிய போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ட்ரம்ப் மற்றும் புதின் இடையே ஆரோக்கியமான உரையாடல் நடத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

 • உலகப்போர் ஏற்படாமல் தடுக்க பேச்சுவார்த்தைக்காக வடகொரியாவுக்கு அமெரிக்கா இறுதி அழைப்பு விடுத்துள்ளது.

 

 • அமெரிக்கா ராணுவத்தில் போர் தொடர்பான புகைப்படங்களை எடுக்கும் பிரிவில் இருந்தவர் பெண் போட்டோகிராபர் ஹில்டா கிளைடோன் (வயது 22). இவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவப்படைகள் பயிற்சியின் போது மோட்டார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். அவர் தான் உயிரிழந்த குண்டுவெடிப்பையும் தன்னுடைய கேமராவில் புகைப்படம் எடுத்துள்ளார். இப்போது அந்த புகைப்படத்தை அந்நாட்டு ராணுவ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

 

 • பருவநிலை மாற்றத்திலிருந்து தப்பித்து உயிர் வாழ அடுத்த 100 ஆண்டுகளில் உலகத்தை விட்டு மக்கள் வெளியேறி விட வேண்டும். வேற்றுகிரகத்துக்கு சென்று தான் வாழ வேண்டும் என உலகின் மிக மூத்த விஞ்ஞானியான இங்கிலாந்தின் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.

 

 • இந்திய புராண தொலைக்காட்சித் தொடர்களுக்கு சீனாவில் பெரும் வரவேற்பு இருப்பதாக அந்நாட்டின் அரசு நாளிதழ் தெரிவித்துள்ளது.

 

 • உலகில் நடக்கும் பல்வேறு விஷயங்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆஸ்திரேலியாவின் திங் டேங் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி குறிப்பில், வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கப்பலில் கடத்துகிறது என்று திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 • அமெரிக்காவில் அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 அமெரிக்கர்களை ஐ.டி பணியில் அமர்த்த இன்ஃபோசிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய முடிவானது அதிபர் டிரம்ப் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

 • இந்திய பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க விசாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அங்கு இறங்கியவுடன் விசா வழங்கும் சலுகை அமல்படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறி உள்ள இந்திய வீரர்களான விகாஸ் கிருஷ்ணன், சிவா தபா, சுமித் சங்வான், அமித் பன்கல் ஆகியோர் வரும் ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

 

 • லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 9வது அகில இந்திய ஹாக்கி போட்டி, கோவில்பட்டியில் நாளை (மே 5) தொடங்குகிறது. இந்த தொடரில் கோவில்பட்டி லட்சுமி விளையாட்டு அகாடமி உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.

 

 • சாம்பியனஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் கட்ட அரை இறுதியில் ரியல் மாட்ரிட் அணி அட்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது. ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

 

 • கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.29 கோடி உயர்த்தப்பட்டு ரூ.262 கோடி வழங்கப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி புனே சூப்பர் ஜெயன்ட் அணி 7வது வெற்றியை பதிவு செய்தது.

 

 • 19வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான செஸ் போட்டி ஏப்ரல் 29 முதல் தொடங்கியது. இதில் மே 2 ம் தேதி நடைபெற்ற 9வது சுற்றின் முடிவில் மகளிர் பிரிவில் கோவையைச் சேர்ந்த பிரியங்கா என்பவரும், ஆடவர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

 

 • சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு முகாம் வரும் 5,6 ஆகிய தேதிகளில் சென்னை படூரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் காலை 9.30 மணி முதல் நடைபெறுகிறது.

 

 • தென்கொரியாவின் ஜிம்சியோன் நகரில் நடைபெற்று வரும் ஜிம்சியோன் ஏடிபி சேலஞ்சர் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் பைனான்ஸியல் இன்டெகரிட்டி என்னும் நிறுவனம் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 2014ம ஆண்டு வரை 77,000 கோடி டாலர் கறுப்புப் பணம் இந்தியாவுக்குள் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

 • முன்னணி விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், சென்னை பாரிஸ் மற்றும் பெங்களுரு – ஆம்ஸ்டர்டாம் இடையே நேரடி விமான போக்குவரத்தை தொடங்கியது. வரும் அக்டோபர் 29ம் தேதி முதல் இந்த நேரடி விமான சேவை தொடங்கும் என ஜெட் ஏர்வேஸ் அறிவித்திருக்கிறது.

 

 • குறைந்த விலை வீடுகளுக்கான வீட்டுக்கடன் பிரிவில் வங்கிகளுக்கு சிறந்த வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன என்று சிபில் கூறியுள்ளது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடன் வளர்ச்சி விகிதம் 23 சதவீதமாக உள்ளது என்றும் வாராக்கடன் அளவு 1சதவீதத்துக்கும் குறைவான அளவிலேளே உள்ளது என்றும் சிபில் கூறியுள்ளது.

 

 • இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9காசுகள் சரிந்து ரூ.64.24 காசுகளாக உள்ளது.

 

 • கடந்த ஜனவரி முதல் இயற்கை ரப்பர் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப டயரின் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக டயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • ஜூலை 1ம் தேதி முதல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் புதுச்சேரி-ஹைதராபாத் இடையே விமான சேவை இயக்கப்பட உள்ளது.

 

We Shine Daily News

English

May 4

 • Indore and Bhopal cleanest city in the country

                       Indore and Bhopal in mad bye Pradesh have emerged as the cleanest cities        in the country as per a massive cleanlier survey                                commissioned by the union      urban development ministry. “Sawehh surrekshan 2017”

 

 • Massive anti – militancy operation launched in Kashmir’s Shopian district

 

 • Union cabinet approves co-operation between India and Japan on railway safety

                       It highlights on Track safety, Rolling stock safety latest technology related to railway crack safety

 

 • Nitin Gadkari inaugurated the Highway saga and SRISHTI exhibitions

                      It’s conducted as a part of India integrated Transport and Logistic summit 2019”

 

 • India expected to achieve 71% growth in 2017. UN report from ESCAP

                      By the Economic and Social survey of Asia and Pacific 2017 reported

 

 • Humans must colonies another planet in 100yrs to survive Stephen Hawking

                     To escape from asteroid strikes.

                     Over population and drastic effect of climate change.

 

 • Archaeologist discover 4000 yrs old model garden outside Egypt tomb

                     The discovery was made by a Spanish team in Draa Abul Nagaa Necropolis across the Nile from modern day city of Luxer

 

 • Kasinadhuni viswanath uonoured with Dada Saheb Phalke a ward

                     He is the 12th recipient of the phalks award the highest recognition in Indian cinema

 • Pm Modi Iinaugurater Patanjali Research  Institute in Haridwar

 

 • President Pranab Mukherjee presented 64th national film Award

 

 • Railway bridge taller than Eiffer Tower to be built over Chenab River

                     Deslignated with wind speed upto 260km/ hr the bridge will connect Bakkal     (Katra and Kouri (Srinagar)

 

 • CCEA approves central sector scheme “SAMPADA”

                    The Objective of SAMPADA in to supplements agriculture, moderninge processing and decrease agriculture waste.

Call Now