May 3

Date:03 May, 2017

May 3

We Shine Daily News

jkpo;

Nk 3

தேசிய செய்திகள் :

 • ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை யாரும் எளிதில் எடுத்துவிட முடியாத வகையில் புதிய சட்டத்திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • உத்திரப்பிரேதசத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் முறையாகப் பள்ளிக்கு வருவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகளை தடுக்க அனைத்து அரசு பள்ளிகளின் சுவர்களிலும் ஆசிரியர்களின் படங்களை ஒட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் படத்தில் உள்ள ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருகிறார்களா எனவும் அவர்கள் எவ்வாறு பாடம் நடத்துகிறார்கள் எனவும் மாணவர்களிடம் விசாரித்து அறிய கல்வித் துறை அதிகாரிகளை அவர் அறிவுறுத்தியள்ளார்.

 

 • திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம்பசிவ ராவ் என்பவர் கடந்த இரண்டரை ஆண்டாக பொறுப்பேற்று வந்தார். இவர் ஆந்திர மாநில வருவாய் துறை முதன்மை செயலராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில் குமார் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பணியிடங்களில் பயிற்சி அளிப்பது தற்போது கல்வி நிறுவனங்களின் சொந்த முடிவாக உள்ளது. மேலும் கெமிக்கல், மெக்கானிக்கல், சிவில் போன்ற ஒரு சில பாடப்பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே பணியிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பணியிடப் பயிற்சியை அனைத்து பொறியியல் மாணவர்களுக்கும் கட்டாயமாக்க வேண்டும் என ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது.

 

 • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கோடை காலத்தில் சுற்றுலாப்பயணிகள் வருகையை அதிகரிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் படகு திருவிழா தொடங்கியுள்ளது.

 

 • தரையில் இருந்து கிளம்பிச் சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் 3ம் வரிசை பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் நேற்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடத்தியது. ராணுவம் நடத்திய அந்த ஏவுகணை சோதனை வெற்றியை அடைந்தது.

பன்னாட்டு செய்திகள் :

 • தென்கொரியாவில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு சாதனத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 • தென்கொரியாவின் சியோங்ஜூ பகுதியில் அமெரிக்கா அமைத்துள்ள வான் பாதுகாப்பு ஏவுகணை தளவாடம் செயல்பாட்டுக்கு வந்தது. எதிரியின் சிறு ரக மற்றும் நடுத்தர ரக ஏவுகணைகளை நடுவானில் தடுக்கும் திறன் இந்த வான் பாதுகாப்பு தளவாடத்துக்கு உள்ளது.

 

 • அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் தென்கிழக்குப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிகளில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 • துபாயில் உடனடியாக விசா பெற்ற முதல் இந்தியருக்கு, துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

 

 • இஸ்ரேல் நேற்று முன்தினம் தனது 69வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடியது. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 வயதான சிமிட்டா என்ற பார்வைத் திறனற்ற பாடகி, 133 பேருடன் சேர்ந்து சுதந்திர தீபத்தை ஏற்றி வைக்கும் கவுரவத்தை பெற்றார்.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐசிசி-யின் டி20 தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2007ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி 6 புள்ளிகளை இழந்து 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

 • இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, ஜிம்பாப்வே மகளிர் அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர், தென் ஆப்பிரிக்காவின் பாட்செப்ஸ்ட்ரும் நகரில் மே 7ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற 3 அணிகளுடன் தலா 2 முறை ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் மோதவுள்ளன.

 

 • ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் சிவ தாபா, சுமித் சங்வான் ஆகியோர் தங்களது எடைப் பிரிவில் கால்இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

 

 • கால்பந்து வீரர்கள் ஜீஜீ லால்பெக்லுவா, குர்பிரீத் சாந்து, வீராங்கனை ஒய்னம் பெம்பெம் தேவி ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் வழங்க அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) பரிந்துரை செய்துள்ளது.

 

 • உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய பாக்சிங் சாம்பியன்ஷிப் தொடரின் கால்இறுதியில் விளையாட இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், கவுரவ் பிதூரி, அமித் பான்கல் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • ஐசிஐசிஐ வங்கி 100 நாட்களில் 100 டிஜிட்டல் கிராமங்களை உருவாக்கியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 500 கிராமங்களுக்கு தொழில்நுட்ப சேவைகளை கொண்டு செல்ல உள்ளோம் என்று வங்கியின் தலைவர் சாந்தா கொச்சார் கூறினார்.

 

 • இந்தியன் வங்கி ‘ஐபி ஹோம் என்ரிச்’ என்ற புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பழைய வீட்டை புதுப்பிக்கவும், பழுதுபார்க்கவும் வீட்டை அடமானம் வைக்காமல் கடன் வழங்கும் புதிய திட்டத்தை இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • பிஎஸ் 3 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தடை விதித்த மூன்று நாட்களுக்குள் வழங்கிய சலுகைகளால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது என ஐசிஆர்ஏ தர நிறுவனம் கூறியுள்ளது.

 

 • ஸான்டெர் குழுமத்துடன் ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் ரூ.2290 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது ரியல் எஸ்டேட் துறையில் நடந்துள்ள பெரிய ஒப்பந்தமாகும்.

 

 • இன்றைய வர்த்தக சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10காசுகள் உயர்ந்து ரூ.64.11 காசுகளாக உள்ளது.

Call Now