May 2

Date:03 May, 2017

May 2

We Shine Daily News

jkpo;

Nk 2

தேசிய செய்திகள் :

 • ஜூலை 1ம் தேதி முதல் பான் எண் பெறுவதற்கும், ஆதார் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. போலிகளை தடுப்பதற்காகவே நிரந்தர கணக்கு எண் (பான்) பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • காயமடைந்த மற்றும் நோயுற்ற பசுக்களைக் காக்கும் நோக்கத்தில் உத்திரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை அம்மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா மே.1 அன்று கொடியசைத்துத் துவங்கி வைத்தார்.

 

 • ஹெச் 1 பி விசா சிக்கலால் அவுட் சோர்ஸிங் முறையில் இந்தியாவிலிருந்து பொறியாளர்களை அனுப்புவதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவிலேயே நிறுவனங்கள் தொடங்கி அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் இன்போசிஸ் நிறுவனம் முன்னிரிமை வழங்கி வருகின்றன.

 

 • உலக வெப்பமயமாதல் மற்றும் பசுமை இல்லா வாயுக்கள் காரணமாக உலக அளவில் கடலின் வெப்பநிலை உயர்ந்து கடல்களின் மட்டம் உயர்ந்து கடல்களின் மட்டம் உயர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக சில கடல்களின் மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பதிவாகியுள்ளது. ஆனால் இந்தியப் பெருங்கடலை பொறுத்தவரை இது சற்று வேறுபட்டு காணப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 • பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

 

 • மத்திய ரயில்வேயின் கேட்டரிங் துறையின் உணவுக் கிடங்கில் வைக்கப்படும் தயிர் உள்பட பல தரப்பட்ட உணவுகள் பல மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

 

 • ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாட்டியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் சிக்கிய படைப்பிரிவைச் சேர்ந்த 2 வீரர்கள் பலியாகினர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டன.

பன்னாட்டு செய்திகள் :

 • வடகொரியாவை கடுமையாக விமர்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிரடி திருப்பமாக அந்நாட்டு அதிபர் கிம்ஜோங்கை சந்திக்க இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

 

 • பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள பாலாடைக் கட்டி போன்ற தீங்கற்ற பொருட்களில் ஆன்ட்டி-பயாடிக்குகளை வேலை செய்ய விடாமல் தடுக்கும் வகையில் புதுவகை மரபணுக்கூறு இருப்பதாக சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • அணு குண்டுகளை கைவிட வடிவமைக்கப்பட்ட ராக்வெல் பி1-பி என்னும் அமெரிக்காவின் போர் விமானம் உலகப் போருக்கு ஒத்திகை பார்க்கும் விதமாக வடகொரியா வான் பறப்பில் பறந்ததாக வடகொரியா அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

 

 • உலகிலேயே இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் அதிக வயதானவராக கருதப்பட்ட 146 வயது சோடிமெட்ஜா மத்திய ஜாவாவில் உள்ள தனது கிராமத்தில் மரணமடைந்தார்.

 

 • ஜப்பானிய கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கார்ல் வின்சன் உள்ளிட்ட அமெரிக்க போர் கப்பல்களுக்கு வடகொரியாவால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பு அளிப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் இசுமோ என்னும் போர்க்கப்பலை அனுப்பியது. இது ஜப்பானின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஆகும்.

 

 • வடகொரியாவுடன் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகலாம் என சீனாவில் அந்நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் அபாய சங்கு தொடர்ந்து ஊதப்பட்டு வருகிறது.

விளையாட்டுச் செய்திகள் :

 • சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி லண்டனில் நடைபெற உள்ள நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்று 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

 

 • அஸ்லான்ஷா ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது 3வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதுகிறது.

 

 • ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுருவை வீழ்த்தி 8வது வெற்றியை அடைந்தது.

 

 • சிலி ஓபன் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சான்டியாகோவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சவுமியஜித் கோஷ் சக நாட்டு வீரர் அந்தோணி அமல்ராஜை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் சர்வதேச டேபிள் டென்னிஸ் சங்க உலக டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • ரிலையன்ஸ் கேபிடல் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் ரிலையன்ஸ் குரோத் பண்ட் பிரிவில் ஓப்பன் எண்டட் ஈக்விட்டி திட்டத்தின் நிகர சொத்து மதிப்பு (என்ஏவி) ரூ.1,000-ஐ எட்டியிருக்கிறது. “இந்த மியூச்சுவல் பண்ட் திட்டம் தொடங்கப்பட்ட போது ரூ.1லட்சம் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு இன்றைய நிலையில் ரூ.1 கோடியாக இருக்கும்” என ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் சிஇஓ சுந்தீப் சிக்கா தெரிவித்துள்ளார்.

 

 • நுகர்வோர் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களை 5 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து விரட்டுவோம் என்று பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.

 

 • எஸ்பிஐ வங்கி டேர்ம் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, பல்வேறு பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் 0.50 சதவீதம் வரை குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகித முறை புதிதாக மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கும், புதுப்பிக்கப்படும் டெபாசிட்டுகளுக்கும் ஏப்ரல் 29ம் தேதியிலிருந்து நடைமுறைபடுத்தப்படும் என வங்கி அறிவித்துள்ளது.

 

 • மொபைல் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படுகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து கூறுகின்றனர். இதனால் வீட்டுக்கு அருகில் உள்ள மொபைல் டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவு பற்றி பொதுமக்களே தெரிந்து கொள்ள இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

 • இந்திய தொழிலகக் கூட்டமைப்புக்க (சிஐஐ) புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர். இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தலைவராக, அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் என்டர்பிரைஸஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவரான ஷோபனா காமினேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிர்வாகத் துணைத் தலைவரான உதய் கோட்டக், சிஐஐ கூட்டமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் நியமனத் தலைவராக பார்தி எண்டர்பிரைஸஸின் துணைத் தலைவரான ராகேஷ் பார்தி மித்தல் தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று சிஐஐ தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • இந்தியாவில் வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸகி நிறுவனம் சென்ற ஏப்ரலில் 1,51,215 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 1,26,569 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 19.5 சதவீதம் அதிகமாகும்.

Call Now