June 16

Date:16 Jun, 2017

June 16

We Shine Daily News

தமிழ்

 ஜூன் 16

தேசிய செய்திகள் :

 

 • கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் 40000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று தெரிவித்துள்ளார்.

 

 • குடியரசுத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்குதல் கடந்த 14ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில் கடந்த 2 நாட்களில் 7 பேர் மனுத்தாக்குதல் செய்துள்ளனர்.

 

 • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.12 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

 

 • சர்வதேச யோகா தினத்தை பேரியக்கமாக மாற்றுங்கள் என்று உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பண்டைய இந்திய மரபான யோகாவுக்கு சர்வதேச அங்கீகாரத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு யோகி ஆதித்யநாத் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

 • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய இரு வேறு தாக்குதலில் போலீசார் இருவர் உயிரிழந்தனர்.

 

 • கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ தடை விதிக்கும் மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிரான வழக்கில் இரு வாரங்களில் பதில் அளிக்குமாறு கோரி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

 • சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்த பிறகு, அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றின் கட்டுமானம் மீதான வரி குறையும் எனவே அவற்றின் விலையை குறைக்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 • கர்நாடகாவை சேர்ந்த வாலிபரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் அவர் இந்தியாவில் ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆள் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்வதாக புதின் கூறியதாக பாகிஸ்தான் கூறியதை இந்தியா, ரஷ்யா நிராகரித்து விட்டது.

 

 • பெங்களுருவில் முதல் கட்டமாக முடிக்கப்பட்டுள்ள 42கிமீ மெட்ரோ ரயில் சேவை முழுமையாக முடிந்துள்ளதை தொடர்ந்து நான்கு திசையிலும் சேவை கிடைத்துள்ளது. அதற்கான துவக்க விழா நாளை நடக்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அதை தொடங்கி வைக்கிறார்.

 

 • பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்” நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு, மனு நீதி பவுண்டேஷன் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

 • அரசின் பல்வேறு துறைகளில் போலி ஜாதிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து பணியில் சேர்ந்தவர்களை பணிநீக்கம் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • குஜராத்தின் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி நேற்று காலமானார்.

 

 • கர்நாடகாவில் 5லட்சம் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

 

பன்னாட்டு செய்திகள் :

 

 

 • எப்15 ரகத்தைச் சேர்ந்த 72 போர் விமானங்களைக் கத்தாருக்கு விற்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

 

 • ஜப்பானிய மிகச்சிறந்த நாவலாசிரியர் ஹாரூகி முராகாமி 10 ஆண்டுகள் கழித்து தன்னுடைய புதிய சிறுகதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

 

 • சோமாலியா தலைநகர் மோகதிசுவில் அல்-ஷாப் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

 • அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் ஆப்கானில் பதுங்கியிருந்த டோரா போரா மலைப் பகுதியை ஐஎஸ் இயக்கம் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • ஐ.நா நீதித்துறை அமைப்பான சர்வதேச தீர்ப்பாயத்தில் உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் இந்திய சட்ட வல்லுநர் நீரு சதா வெற்றி பெற்றுள்ளார்.

 

 • வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்புபவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

 

 • அமெரிக்காவிடம் இருந்து எப்-15 ரக போர் விமானங்களை வாங்கும் வகையில் கத்தார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ரூ.80000 கோடி மதிப்பிலான போர் விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கத்தார் கையெழுத்திட்டுள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

 

 

 • இந்தோனேசியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டித் தொடரில் உலகின் நம்பர் 1 வீரர் சாங் வெய் என்பவரை வீழ்த்தி இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் காலிறுதிக்கு முன்னேறினார்.

 

 • உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்றில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

 

 • ஜெர்மனியின் ஸ்டர்கட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் 302ம் நிலை வீரரான ஜெர்மனியின் டாமி ஹாஸ் 5ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை தோற்கடித்தார்.

 

 • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வங்காளதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

 

 • இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது 175வது இன்னிங்சில் 8000 ரன்களை கடந்து கோலி சாதனை படைத்துள்ளார். மேலும் இந்தியா தரப்பில் 8000 ரன்களை கடக்க சவுரவ் கங்குலி 200 இன்னிங்சும், சச்சின் டெண்டுல்கர் 210 இன்னிங்சும் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

 • இந்தோனேஷியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினர்.

 

 • சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் இந்திய வீரர்களில் கங்குலியின் சாதனையை முறியடித்து ஷிகர் தவான் முதல் இடத்தில் உள்ளார். மேலும் உலக அளவில் தவான் 4வது இடத்தில் உள்ளார்.

 

 • சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று பள்ளி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

 

 • ரிகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி தோல்வி கண்டது.

 

 • மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 ஆட்டத்தில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 • நார்வேயின் ஸ்டவாங்கர் நகரில் நடைபெற்று வரும் நார்வே செஸ் போட்டியின் 7வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவுடன் டிரா செய்துள்ளார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 

 

 • மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இதை செப்டம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மத்திய நிதி அமைச்சகத்திடம் கேட்டுக் கொள்டுள்ளது.

 

 • பெட்ரோல், டீசல் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடுமாறு பிரிட்டிஷ் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்துள்ளார்.

 

 • கேரள மாநில அரசு கேரள வங்கியைத் தொடங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான நபார் டின் முன்னாள் தலைமை பொது மேலாளர் வி.ஆர்.ரவிந்திரநாத் தலைமையில் ஒரு செயல் குழுவை அம்மாநில அரசு நியமித்துள்ளது.

 

 • சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது.

 

 • இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.64.66 காசுகளாக உள்ளது.

 

 • இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 66 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 66.32 புள்ளிகள் உயர்ந்து 31142.05 புள்ளிகளாக உள்ளது.