June 12

Date:12 Jun, 2017

June 12

We Shine Daily News

jkpo;

 ஜூன் 12

 

தேசிய செய்திகள் :

 • ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

 • டெல்லியில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரூ.100 மற்றும் அதற்கு குறைவான மதிப்பிலான சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜி.எஸ்.டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்சுலின் உள்ளிட்ட 66 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

 

 • ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிவேகமாக செல்லக்கூடிய புல்லெட் ரயில் திட்டத்தை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்காக சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 25 ஈ5 ஷிங்காசென் வகை புல்லெட் ரயில்களை ஜப்பானிடம் இருந்து வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

 

 • தமிழகத்தை சேர்ந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாக கூறி, அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இந்நிலையில் தலைமறைவில் இருக்கும் கர்ணனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

 

 • அதிக செலவில்லாமல் கல்வி கற்க உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட ‘ஸ்வயம்’ தளம் மூலம் ஆன்லைனில் 2000 பாட வகுப்புகள் வழங்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

 

 • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவை வாங்க ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

 

 • மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய முகுல் ரோத்கியின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அவரது பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கடந்த 3ம் தேதி அரசாணை வெளியிட்டது. ஆனால் இந்த பதவி நீட்டிப்பை ஏற்க அவர் மறுத்துள்ளார்.

 

 • குறு, சிறு நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நியாயவிலை கடை நடத்த அனுமதி வழங்கப்படும் என்ற சட்டத்தை ரத்து செய்ய முதல்வர் சித்தராமையா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 • மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் நல மேம்பாட்டுக்காக கேரள அரசு அறிவித்துள்ள “அனுயாத்ரா” திட்டத்தின் பிரதிநிதிகளாக, மனநல பாதிப்பு கொண்ட 23 குழந்தைகளை கேரள அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

பன்னாட்டு செய்திகள் :

 • நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை தேர்வு செய்வதற்கு “நீட்” தேர்வை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • சமூக வளர்ச்சி அலுவலராக கியோஞ்சர் நகரைச் சேர்ந்த சாதனா கின்னார் என்ற திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நாட்டிலேயே முதல் முறையாக ஒரு திருநங்கை இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக கல்வியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • பாதுகாப்புத் துறையில் ‘மேக் இன் இந்தியாவை’ அமல்படுத்த கொள்கை வரைமுறைகளை மத்திய அரசு சமீபத்தில் உருவாக்கியது. இதன்படி, ராணுவ தளவாடங்களான நீர்மூழ்கி கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டில் தனியாருடன் அரசு கைகோர்த்து தயாரிக்க உள்ளது. இந்நிலையில் புராஜக்ட்-75(1) என்ற பெயரில் ரூ.60000 கோடி மதிப்பீட்டில் நீர்மூழ்கி கப்பல் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • தன் நாட்டின் மீதான தடையைத் தொடர்ந்து பிரச்சனையை அதிகரிக்கக்கூடிய வழிகளை தவிர்த்து, தடை விதித்திருக்கும் நாட்டு குடிமக்கள் தொடர்ந்து கத்தாரில் தங்கலாம் என கத்தார் அரசு அறிவித்துள்ளது.

 

 • பிரான்ஸ் நாட்டில் 577 இடங்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு நேற்று முதல் சுற்று நடந்தது. இதில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகளை பெறுகிற வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • சவுதி அரேபியா மற்றும் அதன் கூட்டு நாடுகளால் தூதரக உறவு துண்டிக்கப்பட்டுள்ள கததார் நாட்டுக்கு ஈரான் 5 விமானங்களில் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

 

 • அமெரிக்காவில் 2கி.மீ நீளத்திற்கு பீட்சா தயாரித்து அமெரிக்க சமையல் கலைஞர்கள் சாதனை படைத்துள்ளனர். மேலும் உலகின் நீளமான பீட்சர் என்ற பெயரில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்த பீட்சா இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுச் செய்திகள் :

 • 68வது ஜூனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஸிப் கால்பந்து போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 6963 என்ற புள்ளி கணக்கில் உத்திரப்பிரதேசத்தை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியது.

 

 • ஐசிசி தொடர்களில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்களில் இந்தியாவின் ஷிகர் தவான் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் அவர் 16 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 

 • பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஹாக்கி போட்டிகள் ஸ்காட்லாந்துக்கு மாற்றப்பட்டன. மேலும் பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் கோரிக்கையை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ஏற்று கொண்டுள்ளது.

 

 • உலகின் அதிவேக மனிதராக 8 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த உசேன் போல்;ட், லண்டனில் நடைபெற்ற கடைசி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் அபாரமாக வென்றார். மகத்தான சாதனை வீரராக முத்திரை பதித்த ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் (30 வயது) சர்வதேச போட்டிகளில் இருந்து வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற உள்ளார்.

 

 • பார்முலா 1 கார் பந்தயங்களின் தகுதிச் சுற்றில் 65 முறை முதலிடம் பிடித்து அயர்டன் சென்னா படைத்த சாதனையை மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன்(இங்கிலாந்து) சமன் செய்துள்ளார்.

 

 • சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 11வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

 

 • விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ரஷ்ய விராங்கனை மரியா ஷரபோவா காயம் காரணமாக விலகியுள்ளார்.

 

 • இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்காக பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு(சிஏசி) கேட்ட ஊதியத்தை பிசிசிஐ மறுத்துள்ளது.

 

 • பிசிசிஐ நிர்வாகக் குழு (சிஓஏ) உறுப்பினர் பதவியிலிருந்து ஐடிஎப்சி நிர்வாக இயக்குநரான விக்ரம் லிமாயே விலகுகிறார்.

 

 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபெல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

 

 • மாற்றுத் திறனாளி டேபிள் டென்னிஸ் வீராங்கனை சுவர்ணா ராஜூக்கு ரயிலில் கீழ் படுக்கை வழங்க மறுத்தது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • பணமதிப்பு நீக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வங்கித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.

 

 • ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பிசிஎல்) நிறுவனத்தை வாங்குவதற்கு ஓஎன்ஜிசி  திட்டமிட்டுள்ளது.

 

 • கடந்த 7 நாட்களில் இந்தியாவுக்கு ரூ.11445 கோடி நிகர அந்நிய முதலீடு வந்துள்ளது.

 

 • கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி சேவை வரியாக 18 சதவீதம் விதித்துள்ளது. இந்நிலையில் விசைத்தறிக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளது.

 

 • ஜிஎஸ்டி வரி விகித நிர்ணயக் கூட்டத்தில் தங்கம் மீதான வரி விகிதம் முடிவானதும், ஜிஎஸ்டி வரியால் நாடு முழுவதும் தங்கம் விலை அதிகரிக்கும் என்று பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.

 

 • மும்பை பங்குச் சந்தையில் ஸ்மால்-கேப் பிரிவிலான நிறுவனங்களின் பங்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் 72 சதவீத வருவாயை அளித்துள்ளது.

 

 • வருமான வரியை எல்லை வரையின்றி, நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் ஆன்லைன் மூலமே மதிப்பீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்த வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.