July 9

Date:09 Jul, 2017

July 9

                                            We Shine Daily News

                                                         தமிழ்

                                                    ஜூலை 09

                                              தேசிய செய்திகள் :

 • யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டியின் 41வது கூட்டம் போலந்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரம் என்ற பெருமையை அகமதாபாத் பெற்றுள்ளது. துருக்கி, போர்ச்சுக்கல், தென்கொரியா, ஜிம்பாப்வே, க்யூபா உள்ளிட்ட 20 நாடுகளின் பரிந்துரையின் போரில் மத ஒருங்கிணைப்பிற்கு எடுத்துக் காட்டாக திகழும் அகமதாபாத் நகரம் உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் 287வது நகரமாக இடம் பெற்றுள்ளது.

 

 •  5 நாள் அரசு முறை சுற்று பயணமாக வெளிநாடு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை இந்தியா திரும்பினார்.

 

 •  ராணுவத்தில் எதிரிகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் போர் வாகனங்களை ரூ. 2400 கோடி செலவில் அதி நவீனமயமாக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ‘கேரியர் கமேண்ட் போஸ்ட் வெய்க்கிள்’ எனப்படும் மற்றொரு வகையான தாக்குதல் வாகனங்களை ரூ.406 கோடி செலவில் புதிதாக கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

 

 •  சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ 51000 வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

 

 •  ஜம்மு காஷ்மீர் மாநிலதத்pல் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) முறை ஜூலை 8 முதல் அமலுக்கு வந்துள்ளது.

 

 •  உத்தரப் பிரதேச மாநிலத்தில் சொந்தமாக வீடு இல்லாத 10 லட்சம் பேருக்கு 2019ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.

 

 •  காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ஜூலை 8 மதியம் 3.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.

 

 •  ‘வைஸ்ராய் ஹவுஸ்’ என்ற ஆங்கில படத்தின் ஒலிப்பதிவுக்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலக ஒலிப்பதிவு விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

 

 •  பர்கான் வானி நினைவு தினம் ஜுலை 8 (நேற்று) அன்ற அனுசரிக்கப்பட்டதையொட்டி காஷ்மீரில் முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதள சேவை மீண்டும் தொடங்கியது.

 

                                                                                              பன்னாட்டு செய்திகள் :

 

 • எகிப்தில் பல்வேறு இடங்களில் ஜூலை 7 அன்று நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

 

 •  சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நாவின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தென்கொரியா ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க படைகளும் கூட்டாக போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

 

 •  உலகம் முழுவதும் அணுசக்தி ஆயுதங்களை தடை செய்ய இன்று உறுப்பு நாடுகளுடன் ஐ.நாவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 192 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா சபையின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் ஒப்புதலோடு இந்த வார இறுதியில் அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான 10 பக்க ஒப்பந்தம் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டது.

 

 •  பருவகால மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தை கடைபிடிக்க போவதாக ஜி-20 உறுப்பு மாநாடுகள் தெரிவித்தன. இதனால் அமெரிக்கா தனித்து விடப்பட்டுள்ளது. பாரிஸ் பருவகால மாநாடு புவி வெப்பமடைதலை சராசரியாக 2 டிகிரி செல்ஷியஸ்க்கு கீழாக வைத்திருக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. இதை 2015 ஆம் ஆண்டில் 195 நாடுகள் இணைந்து ஏற்படுத்தின. அடுத்த ஜி20 மாநாடுகள் 2018ஆம் ஆண்டில் அர்ஜெண்டினாவிலும், 2019ஆம் ஆண்டில் ஜப்பானிலும், 2020ம் ஆண்டில்; சவூதி அரேபியாவிலும் சந்திக்கவுள்ளன.

 

 •  துருக்கி தெற்கு எல்லைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வாங்குவதற்கு துருக்கி அதிபர் எர்டோகன் எதிர்ப்பு தெரிவித்தார்.

 

 •  ஈராக் நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல் டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த மொசூல் நகரை ஈரான் ராணுவம் நேற்று முற்றிலுமாக மீட்டது.

 

 •  ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் தொடங்கியது. இம்மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூவுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வருமாறு ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 

                                                                                        விளையாட்டு செய்திகள் :

 

 • இலங்கைக்கு எதிரான 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

 •  ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான மாருதி சுசுகி விருது வழங்கப்பட்டது.

 

 •  தெற்கு ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் ஹரிந்தர் சாந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 •  ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெற்று வரும் 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 3000 மீ ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்தியாவின் சுதாசிங் தங்கப் பதக்கம் வென்றார்.

 

 •  இலங்கையின் அம்பணத் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி இலங்கை அணியைத் தோற்கடித்தது.

 

 •  தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அருண் கார்த்திக் வரும் சீசனில் கேரள கிரிக்கெட் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்படுகிறார். அருண் கார்த்திக் கடந்த ஆண்டில் அசாம் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

                                                                            பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகளை மட்டும் வாங்க இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

 •  ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பொருள்களின் விலை விவரத்தை அறிந்து கொள்ள உதவும் செயலியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று அறிமுகப்படுத்தியுள்ளார். ‘GST Rates Finder’ என்ற பெயரிலான இந்த செயலியில் அனைத்து பொருள்களுக்கும் எவ்வளவு வரி என்ற விவரம் உள்ளது.

 

 • ‘நிறுவனங்களும் வணிகர்களும்’ தங்கள் பொருட்களின் புதிய விலை குறித்து மக்கள் அறியும் வண்ணம் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 •  அன்னிய நிதி நிறுவனங்கள் ‘பி-நோட்’ மூலம் ‘டெரிவேட்டிவ்’ பிரிவில் முதலீடு செய்ய ‘செபி’ தடை விதித்துள்ளது.

 

 •  எத்தகைய தடைகள் வந்தாலும் சிறிதும் தயக்கமின்றி தீவிரமாக வாராக்கடனை வசூலிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

 •  ஐ.டி.எப்.சி வங்கி மற்றும் ஸ்ரீராம் கேபிடல் ஆகியவற்றை இணைப்பதற்கு நிர்வாகக் குழு கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இணைப்புக்கான வழிமுறைகளை வகுப்பதற்காக 90 நாள்கள் அவகாசத்தை நிர்வாகக் குழுக்கள் வழங்கியுள்ளன.

  Current Affairs

  Union Food Processing Minister Harsimrat Kaur Badal laid the foundation stone of Punjab’s first Maize based food park at Rehana Jattan village of Punjab

  India’s  first university only for Dalit students to come up in Hyderabad by 2018

  Govt launches IPR awareness scheme for MSME’s startup’s

  122 countries adopt global treaty banning nuclear weapons.

  India, Bangladesh to construct bridge along Mizoram border.

  Oracle opens its first digital hub in Bangalore

  Hyderabad headquartered water health wins Unilever Global Development Award

  Tata steel bags PM’s trophy for best Integrated Steel Plant.

  WHO appoints Saima Wazed as good will ambassador

  Center has launched a GST Rate finder app to accurate tax rate under GST regime.

  Harider Sandhu won South Australian Squash Open title.

   

   

Call Now