July 30

Date:30 Jul, 2017

July 30

                                                                                                                                                                                             

                                             We Shine Daily News

                                                                                தமிழ்

                                                                         ஜூலை 30

                                                                  தேசிய செய்திகள்

                                                                                                

 • இந்திய உயர்கல்வி தொடர்பான 2 நாள் தேசிய கருத்தரங்கு தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. கல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, ஆராய்ச்சியை இனி கட்டாயமாக்குவதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 •  பிகாரில் 2 நாட்களுக்கு முன்பு பதவியேற்ற முதல்வர் நிதீஷ் குமார் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 14 பேர் பாஜக வைச் சேர்ந்த 12 பேரும், புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

 

 •  இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜூக்கு ரூ 1 கோடி பரிசுத் தொகையும், ஹைதராபாத்தில் வீட்டு மனைப்பட்டாவும் வழங்கப்படும் என தெலங்கானா முதல்வர் கே.சந்திர சேகர ராவ் அறிவித்துள்ளார்.

 

 •  நாடு முழுவதும் உள்ள சாலைகள் அனைத்தும் சிமெண்ட் கான்க்ரீட் சாலைகளாக மாற்றப்படும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார்.

 

 •  சரக்கு – சேவை வரிவிதிப்பு நடைமுறையின் கீழ் புதிதாக பதிவு செய்ய 12 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் விண்ணப்பித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவற்றில் 10 லட்சம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவற்றை பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

 •  உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணை அடிப்படை சோதனைகளில் தோல்வி அடைந்திருப்பதை சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலையில், சிஏஐயின் இந்த அறிக்கை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

                                                                                                         பன்னாட்டு   செய்திகள்

                                                                                               

 • இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுக மேம்பாடு, பயன்பாடு தொடர்பாக இலங்கை – சீனா இடையே 99 ஆண்டு காலத்துக்கான உடன்படிக்கை ஜூலை 29ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி துறைமுகத்தில் 70 சதவீதப் பங்கு சீன அரசுக்கு சொந்தமான வணிகத் துறைமுக நிறுவனத்துக்கு அளிக்கப்படும். துறைமுக பயன்பாடு மேம்பாட்டுக்கு சீனா 110 கோடி டாலர் முதலீடு செய்யவுள்ளது.

 

 •  பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் ராஜினாமாவை அடுத்து இடைக்கால பிரதமராக அப்பாசி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 •  தென்சீனக் கடல் பகுதி எண்ணெய், இயற்கை எரிவாயு வளமிக்க பகுதி ஆகும். இந்த தென்சீனக் கடல்பகுதியில் சோதனை ரீதியில் எரியக் கூடிய பனி என்று அழைக்கப்படக் கூடிய மீத்தேன் ஹைட்ரேட்டில் இருந்து இயற்கை எரிவாயுவை சீனா சோதனை ரீதியில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

 

 •  தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பயங்கரவாதத்தை உலக நாடுகள் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தக் கூடாது என ஐ.நாவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

 

 •  லண்டனில் உள்ள செயிண்ட் சார்ஜ் மருத்துவமனையில் உயிர்காக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியால் கண்காணிக்கப் பட்டு வந்த இரட்டைக் குழந்தைகளை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 37 வயதான சூரி என்ற பெண் பெற்றெடுத்துள்ளார்.

 

 •  தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக ‘பாண்டேசன் அல்கராமா’ எனும் தொண்டு நிறுவனம் செயல்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்தது. இது தொடர்பான விவாதம் ஐ.நா. பொருளாதார சமூக அமைப்பில் கடந்த 26ம் தேதி நடந்தது.

 

 •  கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல இரண்டாவது ஏவுகணைச் சோதனை முக்கிய அமெரிக்க நகரங்களையும் இலக்காக்கும் திறன் கொண்டது என வடகொரிய அதிபர் கிம் ஜோங் தெரிவித்துள்ளார்.

 

                                                                                              விளையாட்டு செய்திகள்

                                                                                     

 • தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணியைத் தோற்கடித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி.

 

 •  5ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 2ஆவது நாளில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டபாங் டெல்லி அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியைத் தோற்கடித்தது.

 

 •  இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி கண்டது.

 

 •  முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியை வென்றது.

 

 •  புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் ரஷ்ய வீரர் ஆண்டன் சப்கோவ் புதிய சாதனை படைத்துள்ளார். 200மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் இவர் பந்தய தூரத்தை 2 நிமிடங்கள் 6.96 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

 

 •  91ஆவது எம்சிசி –முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தியன் ரயில்வே, பஞ்சாப் தேசிய வங்கி, ஓஎன்ஜிசி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

 

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

                                                                                                   

 • நிறுவனங்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக நிறுவனங்கள் உருவாக்கும் துணை நிறுவனங்கள் விஷயத்தில் அதைக் கண்காணிக்க விதிமுறைகளைக் கடுமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

 

 •  நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி முதல் காலாண்டில் ரூ2604.73 கோடி லாபம் ஈட்டியது.

 

 •  ஐடிசி நிறுவனம் மருத்துவமனைகளை கட்ட முடிவு செய்துள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

 •  சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பின் கீழ் இதுவரை 12 லட்சம் வணிக நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

 

 •  அடிப்படைக் கட்டமைப்புகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் என எல்ரூடி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஆர்.சங்கர் ராமன் தெரிவித்துள்ளார்.

 

 •  நிறுவன திருத்த சட்டம் 2016க்கு ஒப்புதல் பெற மக்களவையில் கடந்த வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த திருத்த மசோதா விரைவில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Current Affairs

 

 • Maharashtra’s women commission to ink pack with United Nations Development programme has been signed for rescue and rehabilitation.

 

 • Delhi Metro is the first Metro system to become completely green.

 

 • Indian overseas Bank has offered the Bharat Bill payment system which is introduced by the National payment corporation of India.

 

 • Shahid khagan Abbasi declared as Interim .Pakistan prime minister.

 

 • Defense Research and Development Organization (DRDO) has developed an unmanned, remotely operated tank named ‘Muntra’

 

 • International Tiger Day – July 29. 

Call Now