JULY 3

Date:03 Jul, 2017

JULY 3

                                          We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஜூலை 03

                                                                                                   தேசிய செய்திகள் :

 

 • காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து கர்நாடகாவில் விவசாயிகள் 3 வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 • பயணிகளின் வசதிற்காக குறைந்த விலையில் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட இரயில்களை இயக்க இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

 

 • வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆதார் எண் பதிவு மையங்கள் அரசு கட்டிடங்களில் செயல்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) உத்தரவிட்டுள்ளது.

 

 • ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகளின் தகவல்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு தெரிவித்துள்ளது.

 

 • மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள காரன்கானா கிராமத்தில் மகாகாளி அணைப்பகுதி உள்ளது. அணையை சுற்றி பார்க்க சென்ற மாணவிகள் செல்பி மயக்கத்தால் அணையின் உள்ளே இறங்கி செல்பி எடுக்கப் போய் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.இவர்கள் மூவரும் நர்சிங் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவருகிறது.

 

 • சாதாரண இந்தியர்களை அறிந்து கொள்வதற்காக  நூறு கோடி துடிப்புகள் என்ற இணையதளத்தை முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் தொடங்கி நடத்தி வந்தார். சில காரணங்களால் இந்த இணையதளம் முடங்கி கிடந்தது.தற்போது மறுபடியும் செயல்படுத்தப்பட்டது.

 

 • ஜிஎஸ்டி அமல் படுத்தப்பட்டிருப்பதால் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

 

                                                                                                             பன்னாட்டு செய்திகள் :

 

 • அதி நவீன கார்டியன் ஆளில்லா விமானங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்க அயலுறவுத் துறை உரிமம் வழங்கியுள்ளது.

 

 • சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போர் பற்றிய தரவரிசையில் இந்தியா 88-வது இடத்திற்கு பின்தங்கி சென்றுவுள்ளது.

 

 • 127 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரைபடத்தை காட்டி இந்திய பகுதியை சொந்தம் கொண்டாடுகிறது சீன அரசு.

 

 • ஜெர்மன் சர்வதிகாரி என வருணிக்கப்படும் அடால்ப் ஹிட்லர் தீட்டிய ஓவியங்கள் பிரிட்டனில் ஏலத்துக்கு வரவுள்ளன. அதில் ‘ஏ.ஹிட்லா’; என்று அவரின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

 • ப்ரிட்டனின் கட்டுபாட்டில் இருந்த ஹாங்காங் கடந்த 1997 ஜுலை 1ம் தேதி பிரித்து சீனாவிடம் கொடுக்கப்பட்டது. 2014 ம் ஆண்டில் இருந்து சீனாவின் ஆட்சிக்கு எதிராக ஹாங்காங் மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில் சீன எல்லையை கடந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேடிடும் என்று ஹாங்காங் மக்களுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 • சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன் கோளின் (ஜுபிடர்) வளிமண்டலத்தில் ஒளி மற்றும் இருள் மேகங்கள் சூழ்ந்து இருக்கும் அரிய புகைப்படத்தை நாசாவின் ஜெமினி தொலைநோக்கி எடுத்துள்ளது. இக்கோளைப்பற்றிய ஆய்வுகளை ஜுனோ விண்கலம் தொடர்ந்து நாசாவிற்கு அனுப்பிவருகிறது.

 

 • தேசிய கீதம் பாடும் போது உற்சாகத்துடன் பாட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் படி சட்டம் ஒன்றை பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 

 

                                                                                                     விளையாட்டு செய்திகள் :

 

 • கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டியில் சிலியை வீழ்த்தி ஜெர்மணி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் பாட்மிட்ன் தொடரில் இந்திய வீரர்களுக்கு பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

 

 • சென்னை மாவட்ட    பி   டிவிசன்  லீக் கைப்பந்து போட்டி எழும்பூர் மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைப்பெற்று வருகிறது.

 

 • மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி.

 

 • கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது.

 

 • 2017-2018 ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான அம்பயர்கள் அறிவிப்பு வெளியானது. இந்தியாவில் இருந்து சுந்தரம் ரவி மட்டும் இடம் பெற்றுள்ளார்.

 

 • ஜிம்பாவேக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

 

                                                                                    பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • ஜிஎஸ்டியால் கட்டுமானத்தில் உள்ள திட்டங்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் விலை உயரும்.

 

 • நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி அல்லது ஜிஎஸ்டி என்கிற சீரான வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துவிட்டது.வரி விலை இன்னும் விரியும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

 

 • டிராக்டர்ஸ் அண்ட் பார்ம் எக்யூப்மெண்ட் (டாபே) டிராக்டர் உதிரிபாகங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்டது.

 

 • ஆப்பிள் கூகுளுக்கு போட்டியாக களமிறங்குகின்றன கார் நிறுவனங்கள்.

 

 • ஹீண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை 5.6 சதவீதம் சரிந்தது.

 

 • சரக்கு மற்றும் சேவை வரியால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயரும் என இந்திய தொழில் கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

                                                                                    ENGLISH CURRENT AFFAIRS

                                                                                                       JULY 3

 • Mumbai’s vikrikar Bhavan is the headquarters of Maharastra government’s erstwhile sales Tak department renamed as GST Bhavan

 

 • 65 MOU’s signed at textiles India 2017 in the presence of union textile minister Smt Smriti Irani

 

 • Writer Preeti Shenoy bags Indian of the year award.

 

 • Telangana IPS officer Mahese Muralidhar Bhagwat gets award for Trafficking in Persons (TIP) gets report heroes award by the US state deportment

 

 • NASA developing first asteroid deflection mission that will deflect a near earth asteroid

 

 • Ms Dhoni becomes first Indian batsman to hit 200 sixes in ODI’s

 

 • World sports Journalist Day-July-2

 

 • Godrej group chairmen Adi Godrej and Dow chemical CEO Andrew liveries have been awarded Global Leadership awards of us India British council.

 

Call Now