July 23

Date:23 Jul, 2017

July 23

                                                                                                                                                                                                   

                                                 We Shine Daily News

                                                                             தமிழ்

                                                                       ஜூலை 22

                                                                  தேசிய செய்திகள்

 • 5 மற்றும் 8 வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறை மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விரைவில் ரத்து செய்யப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

 

 •  நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சிவாஜிராவ் பாட்டீல் (92) ஜூலை 22ல் காலமானார். கடந்த 1992 முதல் 1998 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்த சிவாஜிராவ் பாட்டீல் மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை உறுப்பினராகவும், மாநில அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

 

 •  நாகலாந்து மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்ற டி.ஆர்.ஜீலியாங் தனது அமைச்சரவையை ஜூலை 22ல் விரிவாக்கம் செய்தார். அதன்படி, புதிதாக 10 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

 

 •  மத்திய அரசுத் துறைகளில் உயர் பொறுப்புகள் வகித்து வரும் ஐஏஎஸ் அதிகாரிகள் 35 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சம் ஜூலை 22ல் பிறப்பித்தது.

 

 •  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போபர்ஸ் ரக ‘தனுஷ்’ பீரங்கிகளுக்கு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாக ஏமாற்றி சீனாவிலிருந்து வாங்கிய உதிரி பாகங்களை சப்ளை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 •  எதிரி நாடுகளுடன் போர் மூண்டால் இந்திய ராணுவத்தின் வெடிபொருட்கள் பத்தே நாட்களில் காலியாகி விடும் என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 •  நாடாளுமன்ற கூட்டத்தொடர்களின் போது எம்.பிக்கள் குறைந்தபட்சம் 100 நாள்களாவது பங்கேற்பதை உறுதிசெய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

 

                                                                                            பன்னாட்டு   செய்திகள்

 

 • 99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தோன்ற உள்ளது. சூரிய கிரகணம் நிகழும் போது சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும். இதனை வெறும் கண்களால் பார்க்க கூடாது. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித்தடுப்புக் கண்ணாடிகளாhல் மட்டுமே காண வேண்டும். சூரியனின் மைய பகுதியை முழுமையாக நிலா மறைக்கிறது. இந்த சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் இந்த கிரகணத்தை பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.

 

 •  ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைக் குறிப்பிடும் போது முன்னுக்குப் பின் முரணான சொற்களைப் பயன்படுத்துவதை அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

 

 •  அமெரிக்க அதிபரின் செய்தித் தொடர்புப் பிரிவுக்கு அந்தோணி ஸ்காரமூச்சி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பொறுப்பேற்கிறார்.

 

 •  பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த சுமார் ரூ2300 கோடி (350 மில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை நிறுத்தி வைப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

 

 •  இந்தியாவின் நகரங்களில் அதிவேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 100 பொலிவுறு நகரங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் பயன்பாட்டுத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படா விட்டால் இந்தியாவின் ‘பொலிவுறு நகரங்கள்’ திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என பிரிட்டனின் லிங்கன் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 •  அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் செர்கி கிஸ்லியாக் தனது பதவி காலத்தை நிறைவு செய்தார்.

 

 •  பதற்றத்தை தணிக்க நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா – சீனாவை ஊக்குவிக்கிறோம் என அமெரிக்காவின் பெண்டகன் கூறியுள்ளது.

 

                                                                                                விளையாட்டு செய்திகள்

 • உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் அபய் சிங் தோல்வியடைந்தார்.

 

 •  உலக மகளிர் ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 8ஆவது இடத்தைப் பிடித்தது.

 

 •  முன்னாள் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் பீட்டர் ரோஹன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மரணமடைந்தார்.

 

 •  இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திமாலுக்குப் பதிலாக இலங்கை அணியின் கேப்டனாக ரங்கனா ஹெராத் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 •  கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற பிரெஸிடென்ட் கோப்பைக்கான ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் விஷ்ணுவரதன் – ஜப்பானின் டோஷிஹைடு மட்சுய் சாம்பியன் பட்டம் வென்றது.

 

 •  மொனாக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியின் 100 மீ ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தங்கம் வென்றார். பந்தய தூரத்தை அவர் 9.95 விநாடிகளில் கடந்தார். அமெரிக்காவின் இசியா யங் 9.98 விநாடிகளுடன் 2வது இடத்தைப் பிடித்தார்.

 

                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 • 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக ஒரு பங்கினை போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அறிவிக்கப் பட்டிருக்கும் மிகப்பெரிய போனஸ் பங்கு அறிவிப்பு இதுவாகும்.

 

 •  நடப்பு நிதியாண்டு ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் தங்கம் இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

 

 •  வங்கிகளின் வாராக் கடன் அளவு ரூ 7 லட்சம் கோடியாக உள்ளது. வங்கிகளின் வாராக் கடன் அளவைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா வலியுறுத்தியுள்ளார்.

 

 •  பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 21.16 சதவீதம் உயர்ந்து ரூ 372.40 கோடியாக உள்ளது.

 

 •  காதி முத்திரையைப் பயன்படுத்தி பொருள்களை விற்க வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜவுளி உற்பத்தி நிறுவனமான அரவிந்த் மற்றும் கதர் கிராமத் தொழில் நிறுவன வாரியம் ஆகியவை கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தப்படி அரவிந்த் நிறுவனம் தயாரிக்கும் டெனிம் காதி மற்றும் இதர காதி தயாரிப்புகளில் கே.வி.ஐ.சி. முத்திரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 •  விலையில்லா 4ஜி வசதி கொண்ட ‘ஜியோபோன்’ செல்லிடப்பேசியை ரிலையன்ஸ் அனைவருக்கும் வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். இந்த செல்லிடப்பேசியை பெற விரும்புவோர் வைப்புத்தொகையாக ரூ 1500 செலுத்த வேண்டும்.

 

 •  என்எல்சி இந்தியா நிறுவனம் சிறந்த நிதி மேலாண்மைக்கான தேசிய விருதைப் பெற்றது.

  Current Affairs

 • Klien Rijiju inaugurated RIWATCH Research Institution of world Ancient, Traditional, culture and Heritage museum at Ruing in  Arunachal Pradesh
 •  

  5th North, East connectivity summit – 2015 to be held in Arunachal Pradesh

 •  

  International  meet on social justice held at Bangalore

 •  

  India ranks 132 in commitment to reducing Inequality Index

 •  

  Meghalaya CM launches “Mission Football” at JN sports complex in shillong. Mission Foot ball focus on creating sports parks, football entertainment park

 •  

  National Congress party Kerala president Uzaroor Vijayan passed away

 •  

  Radio Broadcasting in India completed 90 years on 23 July.

   

   

   

Call Now