JULY 2

Date:02 Jul, 2017

JULY 2

                                          We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஜூலை 02

                                                                                                   தேசிய செய்திகள் :

 

 • ஆதார் பான் எண் (நிரந்தர கணக்கு எண்) ஆகியவற்றை இணைப்பதற்கு ஒருபக்க பாரத்தை பூர்த்தி செய்து அனுப்பும் புதிய நடைமுறையை வருமான வரித்துறை அறிமுகப்படித்தியுன்ளது.

 

 • காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் மண்டியா மாவட்டத்தில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

 • சரக்கு சேவை மற்றும் ஜி.எஸ்டி வரி விதிப்பு முறையால் இந்தியாவின் பொருளாதாரத்தி;ல் முன்னேற்றம் ஏற்படும் என்று உத்தரகண்ட் மாநில பா.ஜ.க. முன்னாள் எம்.பி தருண் விஜய் தெரிவித்துள்ளர்.

 

 • பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்குவது 45 சதவீதம் குறைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

 • காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்களை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும்படி பிரிவினைவாதிகள் தூண்டிவிடுவதாக அஜ்மீர் தர்கா தலைமை மதகுரு ஜெய்னுல் அபேதின் அலிகான் குற்றஞ்சாட்டுகிறார்.

 

 • இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைககளின் படிப்பிற்கு (தொடக்கக்கல்வி முதல் இளங்களை பாடம் வரைக்கும்) ரூ.12.22 லட்சம் செலவு செய்கிறார்கள் என்பது எச்எஸ்பிசி நடத்திய கல்வி மதிப்பு என்ற ஆய்வின் மூலம் தெரியவருகிறது.

 

 • 2022 ஆம் ஆண்டு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாடு தன்னிறைவு பெற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

                                                                                                             பன்னாட்டு செய்திகள் :

 

 • அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்து சென்று அந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த பிற நாட்டவர்களுக்கு அந்த நாட்டின் சுதந்திர தினத்தன்று “மாபெரும் இடம் பெயர்ந்தோர் விருது” வழங்கி சிறப்பிக்கஉள்ளனர். மொத்தம் 39 தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இதில் இரண்டு பேர் இந்திய வம்சாவழியினர் ஆவார்கள்.

 

 • தெற்கு அமெரிக்கா நாடான சிலியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே ஆப்ரேஷன் செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாயின. இக்காட்சி அங்குள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

 • மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கியை கைக்கொள்ளலாம். இதனால் கல்லூரி வளாகத்தில் ஏற்படும் துப்பாக்கி சூட்டை தடுக்கலாம் என்று அமெரிக்காவின் சிகாகோ மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

 • உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி அணு ஆயுதம் தயாரித்து சோதனை மேற்கொள்ளும் வட கொரியா மீது காட்டிய பொறுமையை அமெரிக்கா இழந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

 

 • எல்லை தாண்டி மீன்பிடித்தால் தமிழக படகு உரிமையாளர்க்கு ரூ.20 இலட்சம் அபராதம் விதிக்கப்படலாம் என்று இலங்கை மீன்வளத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

 

 • ஐ.நா அமைதி மேம்பாட்டு நிதியத்துக்கு இந்தியா மேலும் 5 இலட்சம் டாலர்(சுமார் 32 கோடி) நிதி வழங்கியுள்ளது.இத்தகைய பங்களிப்பு உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • சிக்கிம் மாநில எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்திய இராணுவத்தை திரும்ப பெறப்பட்ட பிறகே அந்நாட்டுடன் பேச்சவார்த்தை என்று சீனா அரசு தெரிவித்துள்ளது.

 

 

                                                                                                     விளையாட்டு செய்திகள் :

 

 

 • மே.இ.தீவுகளுக்கு எதிரான 3–வது ஒருநாள் போட்டியில் தோனியின் அரைசதத்தினாலும் ஸ்பின்னர்களினாலும் இந்திய அணி 251 ரன்கள் இலக்கே வெற்றியாக மாறியது என்று தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியா ஏ அணியின் பயிற்சியாளரான ராகுல் ராவிட் ஊதியம் ரூ.2.5 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்ந்துள்ளது.

 

 • புவனேஷ்வரில் நடைபெற உள்ள ஆசிய தடகள போட்டியில் 95 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்ள போவதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

 

 • மெக்சிகோவின் பலவீனமான துடுப்பு உத்தியை சரியாக பயன்படுத்திய ஜெர்மணி கான்பெடரேஷன் கோப்பை அரையிறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியில் சிலி அணியை சந்திக்க உள்ளது.

 

 • மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்மிரிதி மந்தனா அதிரடி சதத்தால் மேற்கிந்திய தீவுகளை வீழத்தி வெற்றி பெற்றது இந்திய அணி.

 

 • இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி.

 

 • மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் இன்று(02—7-2017) மோதி கொள்கின்றன.

 

                                                                                    பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 

 

 • உணவு தானியங்கள் பால் தயிர் முட்டை இதர பால் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலைகள் குறைக்கப்படுகின்றன.
 • சரக்கு சேவை வரி அமல்படுத்தப்பட்டு இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் சில குறிப்பிட்ட உதிரிபாகங்களுக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

 

 • நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள மின்சாரம் உரம் சிமென்ட் கச்சா எண்ணெய் நிலக்கரி உள்ளிட்ட 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சியில் 3.6 சதவீதம் சரிவு ஏற்ப்படுள்ளது.

 

 • மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவீதமாக குறைத்துள்ளது.

 

 • நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸ{கியின் இந்தியாவின் கார் விற்பனை சென்ற ஜுன் மாதத்தில் 7.6 சதவீதம் அதிகரித்தது.

 

 • சி.எஸ்.எஸ் நிறுவனத்தின் முதல் நாள்; வர்த்தகம் நேற்று தொடங்கியது. முதல் நாள் வர்த்தகத்திலே 75 சதவீதம் வih உயர்வடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • லாபம் இல்லாமல் ஏர் இந்தியாவை வாங்க மாட்டோம் என்று பணியாளர்களுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சிஇஒ ஆதித்யா கோஷ் வாக்குறுதி அளித்துள்ளார்.

 

Call Now