July – 19

Date:20 Jul, 2017

July – 19

                                                                                                                                                                                                   

                                         We Shine Daily News

                                                      தமிழ்

                                                 ஜூலை 19

                                               தேசிய செய்திகள்

 

 • இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவை மாற்றி அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 

 •  குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கய்யா நாயுடு தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். அவர் வகித்து வந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை ஜவுளித் துறை அமைச்சராக உள்ள ஸ்மிருதி இராணியிடமும், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராப உள்ள நரேந்திர சிங் தோமரிடமும் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

 

 •  புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புழக்கத்தில் உள்ள பழைய 20 ரூபாய் நோட்டுக்களும் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

 •  நாகலாந்தின் புதிய முதல்வராக ஜெலியாங் பதவியேற்றுக் கொண்டார். இவர் 12வது முதல்வர் ஆவார்.

 

 •  கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மன்கிபாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியால் அகில இந்திய ரேடியோவிற்கு ரூ 10 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

 

 •  கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக கோட்டயத்தில் விமான நிலையம் அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

 

 •  ஒடிஸா மாநிலத்தின் மிக நீளமான பாலத்தை முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்தார். சுமார் 2.81 கிமீ நீளமுள்ள இந்த பாலம் தலைநகர் புவனேசுவரத்தை கட்டாக் நகருடன் இணைக்கிறது. தலைநகரை கட்டாக்குடன் இணைக்கும் 2வது பாலம் இது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என இப்பாலத்துக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் ரூ 114 கோடியில் 6 ஆண்டுகளில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

 

                                                                                    பன்னாட்டு   செய்திகள்

 • பாகிஸ்தானில் இந்திய தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி பாகிஸ்தான் நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 •  குறுகிய கால பணிகளுக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச் – 2பி விசாக்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அமெரிக்கா அதிகரித்தது.

 

 •  டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளட இணைந்த மலோரோஸியா என்ற புதிய நாடு உருவாக்கப்படுகிறது. அந்த நாட்டுக்கான புதிய அரசியல் சாசனம் விரைவில் இயற்றப்படும் என டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தலைவர் அலெக்ஸாண்டர் ஸகர்சென்கோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 •  இந்திய – பிரிட்டன் உள்துறைச் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தை பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிறைவடைந்தது.

 

 •  சீனாவை சேர்ந்த ஹ_னான் பல்கலைக்கழக அறிவியல் அகாடமி, பனி சிறுத்தை சரணாலயம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் பூமி வெப்பமடைவதால் எவரெஸ்ட் பனிமலை உருகிவருகிறது. இதனால் கடல்நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் அமெரிக்காவும், சீனாவும், இந்தியாவும் இருக்கின்றன.

 

 •  முன்னாள் உத்தா மாகாண ஆளுநரான ஜோன் ஹண்ட்ஸ்மேனை ரஷ்யாவிற்கான தூதராக டிரம்ப் நியமித்துள்ளார். ஹண்ட்ஸ்மேன் 2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை சீனாவிற்கான அமெரிக்க தூதராக பணியாற்றியுள்ளார்.

 

 •  உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் சந்தை நிலவரம் நிலையாக இருக்க வைப்பதே சவூதியின் இலக்கு என சவுதி தெரிவித்துள்ளது. சமீபத்தில் நைஜுரியாவும், லிபியாவும் தங்களது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளன. அந்த இரு நாடுகளுடனும் பிற நாடுகளுடனும் ஒத்துழைத்து தங்களது உற்பத்தியை மேற்கொள்ளப் போவதாக சவுதி தெரிவித்துள்ளது.

 

 •  மெரிக்காவின் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஈரான், சிரியா மற்றும் சூடான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

 

                                                                                               விளையாட்டு செய்திகள்

 • 2016 -17 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.

 

 •  தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நடப்புச் சாம்பியனான தூத்துக்குடியின் ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி விளையாட ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 •  இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் இந்திய ரிசர்வ் வங்கியின் நாகபுரி கிளை உதவி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 •  சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் கபடி அணியின் விளம்பர தூதராக கமல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

 •  சர்வதேச அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் தொடர்ந்து 5 முறை ஜெனிதா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

 •  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 3ம் இடமும், இலங்கை பந்து வீச்சாளரான ஹெராத் 2ம் இடமும் பிடித்துள்ளனர்.

                                                                    பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ. 117 கோடி லாபம் ஈட்டியது.

 

 •  தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் 1200க்கும் மேற்பட்ட சட்டங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது.

 

 •  ஹெச்எப்சி ஸ்டாண்டர்ட் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பொதுப்பங்கு வெளியிட அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

 

 •  வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள்கள் துறையைச் சார்ந்த ஹிந்துஸ்தான் யுனிலீவரின் முதல் காலாண்டு லாபம் 9சதவீதம் அதிகரித்தது.

 

 •  பேட்டரியால் இயங்கும் பேருந்துகளை தமிழக அரசுக்கு குறைந்த விலையில் அளிக்க முடியும் என அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயலதிகாரியுமான வினோத் கே. தாசரி தெரிவித்தார்.

Current Affairs

 • The Indian chamber of commerce in association with the west Bengal Government will host Horasis Asia meeting a Global Business in November.

 

 • Smirti Irani replaces Venkaiah Naidu as new Information and Broadcasting minister.

 

 • The US and Australia have jointly test fired a hypersonic missile –  HIFIRE capable of moving at a speed eight times higher than sound.

 

 • Lord Mervyn Davies appointed as the Chairman of UK India Business council

 

 • NASA Research centre turns 100 years old.

 

 • India launches solar project to electricity remote village of Agaween in Egypt 

Call Now