July 16

Date:16 Jul, 2017

July 16

                        

                                            We Shine Daily News

                                                         தமிழ்

                                                    ஜூலை 16

                                                                                    தேசிய செய்திகள்

 

 • உலக இளைஞர்கள் திறன் மேம்பாடு தினம் ஜூலை 15ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உத்திரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகளில் 70 லட்சம் வேiலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்தார்.

 

 •  காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் ஆசிய பசிபிக் பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தென் இந்தியாவில் வரும் 2030 ஆம் ஆண்டுகளில் நெல் விளைச்சல் வீழ்ச்சியடையும் எனவும் புதிய ஆற்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

 

 •  மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்;புகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்த இணைப்புகளையும் சேர்த்து இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 2.5 கோடியாக உயர்ந்துள்ளது.

 

 •  சரக்கு – சேவை வரிவிதிப்பின் கீழ் வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தகர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 

 •  எதிர்காலத்தில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவுக்கும் ஒரு கடவுச்சீட்டு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் கூறினார்.

 

 •  மத்திய அமைச்சரவைச் செயலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த அரசு அதிகாரி நரேஷ் சந்திர சேக்ஸேனா (82) ஐஏஎஸ் மறைந்து விட்டார். இவர் வௌ;வேறு துறைகளில் முக்கியப் பதவிகளை வகித்தவர். ஒன்பது பிரதமர்களுடன் பணியாற்றியிருக்கிறார்.

 

 •  நாட்டின் 14வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடக்கிறது. தேர்தல் முடிவு 20ம் தேதி வெளியாகும்.

 

 •  கனடா நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணாண லில்லி சிங் யூனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 •  சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு தொடர்பான வழக்குகளில் மாநில அரசின் சார்பில் ஆஜராகி வாதாடுவதற்காக எம்.யோகேஷ் கன்னா, கே.வி.விஜயகுமார், டிஆர்பி. சிவகுமார் ஆகிய 3 பேர் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

பன்னாட்டு   செய்திகள்

 • உலக அளவில் அதிக முகநூல் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துக்களது. ஏறத்தாழ 24.1 கோடி பேர் இந்தியாவில் முகநூலைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரை அமெரிக்காவே முகநூல் பயன்பாட்டில் முன்னிலையில் இருந்து வந்து குறிப்பிடத்தக்கது.

 

 • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி) கடந்த 1961-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் 35க்கும் மேற்பட்டப நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாக கொண்டுள்ளது இந்த அமைப்பு. அரசின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை அடிப்படையில் இந்த அமைப்பு நடத்திய ஆய்வில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 3 வது இடம் கிடைத்துள்ளது.

 

 • வடகொரியாவிடம் முன்பு இருந்ததாகக் கருதியதை விட அதிகளவில் புளுட்டோனியம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் ஆதரவில் செயல்படும் அணு ஆயுதக் கண்காணிப்பு அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

 

 • ரஷியா 73 செயற்கைக்கோள்களை சனிக்கிழமை (ஜூலை 15) மதியம் 12.13 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சுமார் 8 மணி நேர பயணத்துக்குப் பிறகு அனைத்து செயற்கைக் கோள்களும் முன்னர் தீர்மானிக்கப்பட்ட அதனதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

 

 • அமெரிக்க எம்பிக்கள் 621.5 பில்லியன் டாலர் பாதுகாப்பு கொள்கை மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னெடுக்க முன்மொழிகிறது.

 

 • சோங்கிங் மாகாண கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக அரசியல் நட்சத்திரம் சென் மைனர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

 • விண்வெளி வீரர்கள் மற்றும் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோனாடிக்ஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் 12ம் தேதி நடைபெற்றது. இதில் நாசா போதிய நிதி ஆதாரம் இல்லாததால் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப முடியாது என ஒப்புக் கொண்டுள்ளது.

 

 • துருக்கியில் ராணுவ வீரர்கள், காவல் துறையினர் உள்பட 7563 பேரைப் பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.

 

 விளையாட்டு      செய்திகள்

 • லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 •  பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சுந்தர்சிங் குர்ஜார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் 2017 பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்தவர் என்ற பெருமையை பெறுகிறார்.

 

 •  5வது சீசன் புரோ கபடிப் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ.8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 •  தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவள்ளுவர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 •  இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதற்கு பிசிசிஐ நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

 •  மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

 

 •  விக்டோரியா ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் சாந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

  பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் தொழில் துவங்குவதற்கும் உரிய ஆலோசனைகளை வழங்க ‘ஐ.எப்.எம்’ என்ற தனிஅமைப்பு ஏற்படுத்தப்படும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 •  மூக்கு கண்ணாடி கடைகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மத்திய சுகாதாரம அமைச்சகம் தனிகுழுவை அமைத்துள்ளது.

 

 •  ஐசிஐசிஐ லோம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 19 சதவீத பங்குகளை பொதுப்பங்கு வெளியீடு வாயிலாக விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையமாக செபியிடம் விண்ணப்பித்துள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

 

 • மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 32000 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்டி வரலாறு சாதனை படைத்தது.

 

 •  இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 1.4 சதவீதம் உயர்ந்து ரூ 3843 கோடியாக இருக்கிறது.

 

 •  பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் இருக்க வேண்டும் என 2014ம் ஆண்டில் பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி விதியை உருவாக்கியது.

Call Now