JULY 10

Date:10 Jul, 2017

JULY 10

                                            We Shine Daily News

                                                         தமிழ்

                                                    ஜூலை 10

                                              தேசிய செய்திகள் :

 • டெல்லியில் நடந்த விழாவில் கல்வித்துறையை மின்னணு மயமாக்கும் திட்டத்தை ஜனாதிபதி தொடங்கிவைத்தார். கல்வி உபகரணங்கள் இலவசம் கல்வியை நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் தொலைதூர பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • ஜிஎஸ்டி வரி அமைப்பு ஜவுளிகளுக்கு 5 சதவீதம் வரியை விதித்துள்ளதை எதிர்த்து வர்த்தகர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்ததை நாளை முதல் மேற்கொள்ள உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 • ஜிஎஸ்டி அமலாகிய பின்னர் சத்திஸ்கர் மாநிலம் சரக்கு போக்குவரத்து மையமாக மாறும் வாய்ப்பிருப்பதாக நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

 

 • தில்லியில் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையெடுத்து முக்கிய நகரங்களில் பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு மாநில அரசை மத்திய உள்துறை கேட்டு கொண்டுள்ளது.

 

 • புது தில்லி இரயில் நிலையத்தில் மாதந்தோறும் சராசரியாக 600 ‘இரயில்வே குழந்தைகள் அடைக்கலம் ஆவதாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

 

 • இரயில்களில் 3 வது நிலை குளிர் வசதி பெட்டிகளில் (3ஏசி) மாற்றுத் திறனாளிகளுக்கு கீழ் வரிசைப் படுக்கைகளில் இட ஓதுக்கீடு செய்ய இந்திய இரயில்வே முடிவு செய்துள்ளது.

 

 • நாடு முழுவதும் நக்ஸலைட் தீவிரவாதிகள் கடந்த 20 ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்களில் 2700 பாதுகாப்புப் படையினர் உள்பட 12000 பேர் கொல்லப்பட்டு விட்டனர் என்ற புள்ளி விவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • ஆயுதங்களை ஆடம்பரத்திற்காகவும் அந்தஸ்தின் அடையாளமாகவும் வைத்திருக்க யாருக்கும் உரிமை இல்லை என்று தில்லி உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் கோரி விண்ணப்பித்த விண்ணப்பங்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

                                                                                          பன்னாட்டு செய்திகள் :

 

 • அமெரிக்க இராணுவத்தில் சேருவதற்காக தவறான தகவல்களை தந்ததாக கூறி இந்திய வம்சாவழியை சேர்ந்த சிவம் பட்டேல் என்ற வாலிபர் அமெரிக்க போலிசாரால் கைது செய்யப்பட்டார்  இவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்த்துடன் சேர முயற்சி செய்தவர் என்பதும் அந்நாட்டின் உளவுத் துறையால் கண்டறியப்பட்டது என தகவல்கள் வெளியாகின.

 

 • அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கொண்டு வந்துள்ள போர் நிறுத்தம் தெற்கு சிரியாவில் துவங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றப்பின் அமலுக்கு வந்துள்ள முதல் போர் நிறுத்தம் இதுவாகும். இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான பேர் இப்போரினால் இறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 • அரபிக்கடலில் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இந்திய மீனவர்களை பாகிஸ்தானும் பாகிஸ்தான் மீனவர்களை இந்தியாவும் அவ்வப்போது கைது செய்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் சிறையிலிருந்து 78 இந்திய மீனவர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டின் உள்துறை செயலாளர் நசீம் சித்திக் கூறியுள்ளார்.

 

 • உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனையை மேற்காள்ளும் வட கொரியாவின் செயலுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட சீன அரசு முடிவு செய்துள்ளது.

 

 • டோக்கியோவில் நடைப்பெறவுள்ள 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அகதிகள் அணி ஒன்றை பங்கேற்க வைக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 • போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் நாட்டு எல்லைப் பகுதியில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் கூறி இந்தியத் துணைத் தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 • பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே புதிய வர்த்தக உடன்படிக்கை விரைவில் ஏற்படும் என்று பிரிட்ன் பிரதமர் தெரசாமே மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் தெரிவித்துள்ளார்.

 

 • அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கு வழிவகுக்கும் உலகின் முதல் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான ஐ.நா.தீர்மானத்தை ஆதரித்து 120 க்கும் மேற்பட்ட நாடுகள் வாக்களித்துள்ளன.இதன் மூலம் இத்தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இருப்பினும் இந்தியா அமெரிக்கா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இத்தீர்மானத்தை புறக்கணிப்பு செய்தனர்.

 

                                                                                     விளையாட்டு செய்திகள் :

 

 • ஆசிய தடகள போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் தமிழக வீரர் லெட்மணன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • இந்தியாவிற்கு எதிரான முதல்டி-20 போட்டியில் மே.இந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

 • பிரிட்டனில் நேற்று நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதிக் கொண்டனர்.3 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு இதல் முதல் தோல்வியாகும்.

 

 • இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி படுதோல்வியை சந்தித்தது.

 

 • சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்.ஐ.எச்.) சார்பில் 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெறவுள்ள தொழில்முறை (புரோ) ஹாக்கி லீக் போட்டியிலிருந்து விலகுவதாக ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

 

 • இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயருக்குப் பதிலாக ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

 

 • 800 மீPட்டர் சாம்பியன்ஷிப் போட்டிகள் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான கடைசி நாளான நேற்று நடந்த 800மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை அர்ச்சனா யாதவ் தங்கம் வென்றார்.

 

                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • டிஜிட்டல் பரிவர்த்தனையின் வளர்ச்சி பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்களில் அதிக கவனம் செலுத்துவதாக தேசிய பேமென்ட்ஸ் நிறுவனத்தின் (என்.பி.சி.ஐ) தலைவர் கூறியுள்ளார்.

 

 • ஜிஎஸ்டி அமலாகும் போது உரங்கள் மீதான வரி ரத்து செய்யப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில்; அதற்கு மாறாக 5 சதவீதம் வரி விதிப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க திண்டுகல் மாவட்ட செயலர் கூறியுள்ளார்.

 

 • ஏர் இந்தியா நிறுவனத்தை பகுதி பகுதியாக பிரித்து விற்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. தற்போது ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில்; இயங்கி வருவதால் பகுதி பகுதியாக பிரித்து விற்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

 

 • நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு ஜுன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இன்னும் சில நாட்களில் காலாண்டு முடிவுகள் வெளிவரத் தொடங்கும். ஐ.டி நிறுவனத்தின் இத்தகைய காலாண்டு வெளியிடு சிறப்பாக இருக்காது என அத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.

 

 • சர்க்கர நாற்காலி மட்டுமன்றி மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வரி இப்பொருட்களின் மீதான விலையைக் குறைப்பதற்காகதான் என தகவல்கள் வெளியாகின.

 

 • ஜிஎஸ்டி பலன்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லும் விதமாக (எப்.எம்.சி.ஜி.) துறையைச் சேர்ந்த கோல்கேட் பாமோலிவ் இந்தியா நிறுவனம் பற்பசை மற்றும் பல் துலக்கும் பிரஷ்களின் விலையை 8-9 சதவீதம் குறைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 • சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தில் உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் விவசாய உற்பத்திப் பொருளாகவும் தொழிற்சாலை கச்சாப் பொருளாகவும் இருக்கும் ரப்பருக்கு வரி விதிப்பு சாதகமா பாதகமா என புரியாமல் பெரும்பாலான வணிகர்களும் விவசாயிகளும் தவிப்பில் உள்ளதாக ரப்பர் துறையினர் கூறுகின்றனர்.

Current Affairs

 • Prisident Pranab Mukherjee launches four digital initiations over e-education
 •  

  Swayam swayam prabha, National Digitel library, National Academic Depository to push e-education in the country

 •  

  First International Aviation Security seminar organized by National security Guard in Haryana

 •  

  India is planning to Invite leaders of ASEAN countries for 2018 Republic Day celebration.

 •  

  First Edition of wings 2017-“Sab Uden, Sab Juden” Exploding regional connectivity in New Delhi

 •  

  Delhi government launched free surgery in private hospitals at government’s cost

 •  

  Two day Regional conference on good governance and Replication of best held in Nainital,uttarakhand.

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Call Now