January 31

Date:31 Jan, 2017

January 31

We Shine Daily News

 

jkpo;

[dthp 31

We shine News 1

தமிழக சட்ட சபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். ‘மிருகவதை தடுப்பு சட்ட மசோதா 2017’ என்று பெயரிடப்பட்ட சட்ட மசோதா மூலம் ஜல்லிக்கட்டு முடிவுக்கு வந்தது.

We shine News 2

சர்வதேச – இந்திய தோல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் (ஜனவரி- 31) இன்று தொடங்க உள்ளது. இது சென்னை வர்த்தக மையத்தில் 32- வது சர்வதேச இந்திய தோல் பொருட்கள் கண்காட்சி ஆகும். பிப்ரவரி-3 ம் தேதி முதல் நடக்க உள்ளது.

We shine News 3

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் – ஐ இங்கிலாந்துக்கு வருமாறு எலிசபெத் ராணி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு இங்கிலாந்து மக்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் இந்த அழைப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தி சுமார் 10 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

We shine News 4

அடுத்த 3 ஒலிம்பிக் போட்டிகளுக்கான செயல்திட்டத்தை வகுக்கும் பணியில் மத்திய விளையாட்டு அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.   இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா, பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

We shine News 5

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை நெறிப்படுத்தி நடத்தும் பிசிசிஐ கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகப் பொறுப்புக்கு 4 பேர் கொண்ட புதிய குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.   பிசிசிஐ அமைப்பின் நிர்வாகக் குழுவின் புதிய தலைவராக வினோத் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியாக இருந்தவர்.

We shine News 6

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவ மாணவி ஐரிஸ் மிட்டேனர் (23) பிரபஞ்ச அழகியாக பட்டம் சூட்டப்பட்டார். இவர் பிரான்ஸின் லில்லி நகரைச் சேர்ந்தவர்.   பிரபஞ்ச அழகிக்கான போட்டிகள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 86 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

We shine News 7

பார்வையற்றோருக்கான உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் புதுடெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் உள்ளிட்ட 10 அணிகள் இப்போட்டியில் கலந்து கொள்கின்றன. டெல்லி, மும்பை, ஐதராபாத், இந்தூர் உள்பட 12 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதி ஆட்டம் பிப்ரவரி -12ல் நடைபெற உள்ளது.