January 30

Date:31 Jan, 2017

January 30

We Shine Daily News

 

jkpo;

[dthp 30

We shine News 1

நாட்டில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட 99% மக்கள் ஆதார் எண் பெற்றுள்ளனர் என மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். ஆதார் பதிவேட்டில் சேர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 111 கோடியை கடந்துள்ளது.

We shine News 2

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கம் தொடர்பான விரிவான மற்றும் முழுமையான கொள்கையை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ஒய்.வி.ரெட்டி தெரிவித்தார்.

We shine News 3

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் ரபேல் நடாலை ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். பெடரர் வெல்லும் 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். ஆஸ்திரேலிய ஓபனில் பெடரர் வெல்லும் 5வது பட்டமாகும்.

We shine News 4

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் ராஜேஷ் சாவந்த் (45) நேற்று மரணமடைந்தார்.

We shine News 5

மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரையை சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு பிப்ரவரி 12 வரை அமலில் இருக்கும். பேரணி, மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

We shine News 6

உலகப் பயணம் மேற்கொள்ள விரும்புவர்களுக்காக பொட்டிக் ட்ரீம் மேக்கர் என்ற நிறுவனம் 20 நாட்களில 20 நகரங்களைப் பார்க்கக் கூடிய ஒரு ஆடம்பர சுற்றுலாவை ஏற்படுத்தியுள்ளது. இதில் உங்களுடன் உறவினர்கள், நண்பர்கள் என 49 பேர் பயணம் செய்யலாம். சுற்றுலா கட்டணம் 94.5 கோடி ரூபாய்.