January 29

Date:31 Jan, 2017

January 29

We Shine Daily News

 

jkpo;

[dthp 29

We shine News 1

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் சிஐஐ மாநாடு 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த 2 நாட்களில் மொத்தம் 665 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த 8 அமைச்சர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.   ரூ 10.5 லட்சம் கோடி முதலீடு செய்து தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இதனால் 22 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

We shine News 2

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக ‘கியூபா’, ‘பிபாயோ’, ‘அனிமல் ஈக்வாலிட்டி’ ஆகிய விலங்குகள் நல அமைப்புகளின் சார்பில் சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.

We shine News 3

மாற்றுத் திறனாளிகளுக்கு உலக அளவில் பயன்படுத்ததக்க வகையிலான பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்கப்படும் என மத்திய சமூகநிதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்தார்.  தில்லியில் மத்திய அரசின் சார்பில் 1544 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 1.80 கோடி மதிப்பிலான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

We shine News 4

உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்து வசிப்பவர்களுக்கு தற்போதைக்கு வாக்குரிமை சாத்தியமில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

We shine News 5

மின்சார சிக்கனத்தை வழங்கக் கூடிய ‘எல்.இ.டி’ விளக்குகளை பொதுமக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் எரிசக்தியை மிச்சப்படுத்த ‘மலிவு விலை எல்இடி பல்புகள் மூலம் உன்னத வாழ்வு’ (உஜாலா) என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் படி மத்திய அரசுக்கு சொந்தமான ‘எனர்ஜி எஃபிஷியன்ஸி சர்வீஸஸ்’ நிறுவனம் ‘எல்.இ.டி’ விளக்குகளை தயாரித்து மாநில அரசு அமைப்புகள் மூலம் மலிவு விலையில் வினியோகித்து வருகிறது.

We shine News 6

வங்கதேசத்திற்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக தமிழக வீரர் அபிநவ் முகுந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விளையாட்டு பிப்ரவரி 9ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராஜூவ்காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது.

We shine News 7

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் 48 வயதான ஸ்டூவர்ட் லா நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற 15ம் தேதி பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார்.

Call Now