January 28

Date:31 Jan, 2017

January 28

We Shine Daily News

 

jkpo;

[dthp 28

We shine News 1

இந்திய ராணுவத்தின் அசாம் ரெஜிமெண்டில் பணியாற்றி காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிர்நீத்த ராணுவ அதிகாரி ஹாங்பன் ததாவுக்கு மரணத்துக்கு பிந்தைய அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

We shine News 2

வியாபாரிகளிடம் தங்கள் ஆதார் எண்ணை அளித்து பயோ மெட்ரிக்ஸ் மூலம் உறுதி அளித்து பணத்தை செலுத்திக் கொள்வதும் பெற்றுக் கொள்வதுமான பரிவர்த்தகைக்கான புதிய திட்டத்துக்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.  இது வரை 14 வங்கிகள் இந்த திட்டத்திலுள்ளது.

We shine News 3

தில்லியில் மாநகராட்சிகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் உள்ள 6023 ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 2000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக கிழக்கு தில்லி மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

We shine News 4

ராணுவ வீரர்கள் தங்களது குறைகளை தீர்க்க வாட்ஸ் அப் எண்ணை ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் அறிமுகப்படுத்தினார்.

We shine News 5

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டில் பொருத்தக் கூடிய கிரையோ ஜெனிக் மேல்;நிலை என்ஜினின் முதல்கட்ட தகுதி நிலை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

We shine News 6

முன்னாள் சர்வதேச டென்னிஸ் வீரரும் ஹாலிவுட் பட தயாரிப்பாளருமான தமிழகத்தை சேர்ந்த அசோக் அமிர்தராஜ் இந்தியாவின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Call Now