January 27

Date:31 Jan, 2017

January 27

We Shine Daily News

 

jkpo;

[dthp 27

We shine News 1

மத்திய பிரதேசத்தில் பாலித்தீன் பைகளுக்கு மே 1 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சின் சௌகான் தெரிவித்தார்.

We shine News 2

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தி அமெரிக்கன் இன்டரஸ்ட்” பத்திரிக்கை உலகின் சக்தி வாய்ந்த முதல் 8 நாடுகளின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிடுகிறது.   இப்பத்திரிக்கையில் 2017ம் ஆண்டுக்கான உலகின் முதல் 8 வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

We shine News 3

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசுத் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இந்திய தூதர் கவுதம் பாவ்வாலே மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

We shine News 4

டெல்லி ராஜபாதையில் பிரம்மாண்டமாக குடியரசு தின விழா நடைபெற்றது. இந்தியாவின் ராணுவ வலிமையையும் கலாச்சார பெருமையையும் பறை சாற்றும் விதத்தில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. முப்படை அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பில் முதன்முதலாக கருப்புப் பூனைப் படையான தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) பங்கு பெற்றது.

We shine News 5

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் கடாகின்(67) டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 2009-லிருந்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக பணியாற்றி வருகிறார். 1999 முதல் 2004 வரை இந்தியாவினுடைய தூதராக பணியாற்றியுள்ளார்.  இந்திய –ரஷ்ய உறவு மேம்படுவதில் முக்கிய பங்காற்றியவர் கடாகின் ஆவார்.

We shine News 6

ஐ.எஸ் இயக்க பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு “வாட்டர் போர்டிங்” சித்ரவதை முறையை கொண்டுவர தீவிரமாக பரிசீலிப்பதாக டிரம்ப் கூறினார். அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்தினர் பெண்டகன் ராணுவ தலைமையகம் மீதும் நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தியதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளை விசாரிக்க அன்றைய ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யூ புஷ் “வாட்டர் போர்டிங்” என்ற சித்ரவதை முறை பின்பற்றினார். இதற்கு ஒபாமா தடை விதித்தார்.

Call Now