January 25

Date:31 Jan, 2017

January 25

We Shine Daily News

 

jkpo;

[dthp 25

We shine News 1

சட்டீஸ்காரின் பீஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் மோப்ப நாய் புளுடோ உயிரிழந்தது.  ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த புளுடோ சமீபத்தில் பீஜப்பூரில் பட்டாலியனில் சேர்க்கப்பட்டது.

We shine News 2

பாகிஸ்தான் ‘அப்பீல்’ என்ற பாலிஸ்டிக் ரக ஏவுகணையை வடிவமைத்து ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்து இலக்கை துல்லியமாக தாக்கியது. இது அணு ஆயுதங்கள் உள்பட பல்வேறு ஆயுதங்களை சுமந்து சென்று 2200 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கை தாக்க கூடிய வல்லமை உடையது.

We shine News 3

எவரெஸ்ட் மலையின் உயரத்தை இந்திய சர்வே அமைப்பு மீண்டும் அளவீடு செய்வதாக இந்திய சர்வே அமைப்பின் தலைவர் சுவர்ண சுப்பாராவ் கூறினார். 1855ல் சர்வே படி எவரெஸ்ட் மலையின் உயரம் 29 ஆயிரத்து 28 அடி. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மலை சுருங்கி வருகிறது என்ற சந்தேகத்தின் காரணமாகவும் அறிவியல் ஆய்வுகள், அடுக்குகளின் இயக்கம் ஆகியவற்றை அறிய உதவும் காரணத்தாலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

We shine News 4

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்ட 5000 சிசிடிவி கேமராக்களில் 700 கேமராக்கள் செயல்பட வில்லை என உளவுத்துறை தெரிவித்துள்ளது.

We shine News 5

நாடு முழுவதும் கிராம புறங்களில் வீடு கட்வதற்கு ரூ.2லட்சம் வரையில் பெறும் கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கும் புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.   வீட்டு வசதியை ஏற்படுத்தும் வகையிலும் இத்துறையில் வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

We shine News 6

 பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்றழைக்கப்படும் டிபிபி ஒப்பந்த திட்டத்தில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. இதற்கான ஆணையில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். இது அவரது தேர்தல் பிரச்சார உறுதி மொழி ஆகும். முன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஒபாமாவை ஆசிய கொள்கையின் அச்சாணியாக இந்த 12 நாடுகள் வர்;த்தக ஒப்பந்தம் விளங்கியது.

We shine News 7

பண்பாட்டு அறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவனுக்கு கோவை உலகத்தமிழ் பண்பாட்டு மையத்தின் சர்பில் தமிழறிஞர் விருதும் ரூ 1லட்சம் பொற்கிழியும் வழங்கப்பட்டது.