January 24

Date:31 Jan, 2017

January 24

We Shine Daily News

 

jkpo;

[dthp 24

We shine News 1

ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்துக்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும் அதில் எங்களது கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மொத்தம் 69 கேவியட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

We shine News 2

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் போன் அட்டைகள் வழங்கப்படும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

We shine News 3

ராஸ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அரசு ஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை எதிர்ப்பதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கருத்து தெரிவித்தார்.  தற்போது உள்ள அரசு ஒதுக்கீட்டை ரத்து செய்ய யார் முயற்சித்தாலும் அதை எங்கள் உயிரை கொடுத்து எதிர்ப்போம் எனவும் ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.

We shine News 4

மத்திய வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கரின் பதவிக்காலம் வரும் 28ம் தேதி நிறைவடைகிறது. தற்போது ஓராண்டுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

We shine News 5

தூத்துக்குடி வ.உ.சி துறைமுக மைதானத்தில் நடைபெற்ற அகில இந்திய பெரிய துறைமுக அணிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

We shine News 6

இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசரமாக தேவைப்படுகிறது என வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன் தெரிவித்தார்.

Call Now