January 23

Date:31 Jan, 2017

January 23

We Shine Daily News

 

jkpo;

[dthp 23

We shine News 1

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் முறைமுகத்தின் 8வது கப்பல் தளம் சரக்கு பெட்டக முனையாக செயல்பட்டு வருகிறது. இந்த முனையத்தை தக்ஷின் பாரத் கேட்வே டெர்மில் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இம்முனையத்தில்  புதிய சரக்கு பெட்டக கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

We shine News 2

மறு சீரமைப்பு செய்யப்பட்ட கடன்களை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கத் தேவையில்லை என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கல்விக் கடனுக்கான கால அளவில் வங்கிகள் அதிகபட்சம் 3 முறை கால நீட்டிப்பு (அதிக பட்சம் 6 மாதங்கள்) செய்யலாம்.

We shine News 3

ரஷிய நாட்டு உதவியுடன் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
இதன் முதல் திட்டமாக நாகபுரியில் இருந்து செகந்திராபாத் வரையிலான 575 கி.மீ. தொலைவுக்கு இந்த 200 கி.மீ. வேக ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

We shine News 4

சிரியா உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி  பேச்சு வார்த்தை கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் இன்று தொடங்குகிறது.

We shine News 5

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவின் எஸ்ஏஐசி நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி மற்றும் கேசோலினில் இயங்கும் ஹைபிரிட் மாடல் கார்களை சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

We shine News 6

சமீபத்தில் வெளியாகியுள்ள உலக அளவில் “டாப் 100” பணக்கார நகரங்களின் பட்டியலில் இந்தியாவிலுள்ள மும்பை 42வது இடத்திலுள்ளது.