January 22

Date:31 Jan, 2017

January 22

We Shine Daily News

 

jkpo;

[dthp 22

We shine News 1

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் ஒபாமா கேர் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் நிதிச்சுமையை குறைக்க வேண்டுமென தனது முதல் உத்தரவித்தை பிறப்பித்தார்.

We shine News 2

பிரதமர் நரேந்திர மோடி அன்றாட நிகழ்வுகள் மற்றும் தனது சந்திப்புகள் பற்றிய தகவலை சமூக வலைத்தளங்கள் மூலம் உடனுக்குடன் தெரிவித்து வருகிறார்.   சமூக வலைத்தளத்தில் அதிகமானோர் பின்தொடரும் நாட்டுத்தலைவர்களின் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முதலிடம் வகித்து வந்தார். ஒபாமா ஓய்வு பெற்றதை தொடர்ந்து அதிகம் பேர் பின்தொடரும் நாட்டு தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்தார். அவரை 2 கோடியே 65 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

We shine News 3

ஆசிய விளையாட்டு மற்றும் சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுக்கு ரூ 78 லட்சம் ஊக்கத் தொகையை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.

We shine News 4

உடல்நல குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார். தமிழக சட்ட சபையில் அவரது படத்திறப்பு விழாவை பிரமாண்ட முறையில் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

We shine News 5

சிலி நாட்டில் பெரிய அளவில் காட்டுத்தீ பரவியதில் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு நாசமாகியது. இதனால் தொழிற்சாலைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

We shine News 6

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான அனுராக் தாக்குர் ஹிமாசல பிரதேச ஒலிம்பிக் சங்க தலைவராகவும் மூத்த துணை தலைவராக வீரேந்தர் கன்வாரும் பொதுச் செயலாளராக ராஜேஷ் பண்டாரியும் தேர்வு செய்யப்பட்டார்.