January 21

Date:31 Jan, 2017

January 21

We Shine Daily News

 

jkpo;

[dthp  21

We shine News 1

டெல்லியில் நடைபெற உள்ள குடியரசுதின விழாவில் கடற்படையின் முக்கிய நீர்மூழ்கி கப்பல்களான ஐ.என்.எஸ்.கல்வாரி, ஐ.என்.எஸ். காந்தேரி, ஐ.என்.எஸ். சென்னை ஆகியவற்றின் கம்பீர அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

We shine News 2

நேபாளம், வங்கதேசம், பூடான், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து தொடர்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.   மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் இந்திய ரயில்வே துறைக்கும், யுனெஸ்கோ அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

We shine News 3

வக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தந்தி டிவிக்கு சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 25ம் தேதி இந்த விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குகிறார்.

We shine News 4

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷீக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பை தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   41வது அதிபர் ஜார்ஜ் புஷ் 1988 -1992 வரை 4ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார். அதற்கு முன் 8 ஆண்டுகாலம் அதிபர் ரொனால்ட் ரீகனின் கீழ் துணைஅதிபராக பதவி வகித்தார்.

We shine News 5

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு (சிஐஏ) வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.  2011, மே 2ல் பின்லேடன், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் அமெரிக்க ராணுவத்தின் ‘நேவி சீல்ஸ்’ படைப் பிரிவினர் அதிரடி தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றனர்.

We shine News 6

கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணத்தை வைத்திருப்பவர்கள் தங்களிடம் உள்ள தொகையில் 50% வரியாக செலுத்த வேண்டும் மீதமுள்ள தொகையில் நான்கில் ஒரு பங்கு தொகை 4ஆண்டுகளுக்கு வட்டியில்லா தொகையாக வங்கியில் இருப்பு வைக்கப்பட வேண்டும். இந்த திட்டத்துக்கு பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்று பெயர்.

Call Now