January 20

Date:31 Jan, 2017

January 20

We Shine Daily News

 

jkpo;

[dthp 20

We shine News 1

பிஹார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தில் நிஷ்சய் யாத்ரா (தீர்வுக்காண பயணம்) என்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அடுத்த நிதியாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஹாரில் எந்தவொரு மதுபான தொழிற்சாலைக்கும் உரிமம் வழங்கப்பட மாட்டாது.  தற்போது இயங்கி வரும் தொழிற்சாலைகளும் 2017-18ம் நிதியாண்டில் உரிமத்தைப் புதுப்பிக்க முடியாது என கூறினார். மாநில அமைச்சரவையில் கலால் தீர்வைச் சட்டம், 2016ன் கீழ் இம்முடிவு மேற்கொள்ளப்படுகிறது.

We shine News 2

தமிழக அரசு தயாரித்துள்ள ஜல்லிக்கட்டு அவசரசட்டத்துக்கு (மிருக வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து)  மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. தமிழக அரசு அனுப்பி வைத்த அவசர சட்டத்தின் அம்சங்கள் சரிபார்க்கப்பட்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியதும் தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர்ராவ் கையெழுத்துக்காக அக்கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.

We shine News 3

கலப்பட உணவுப்பொருள், பானங்களைத் தயாரிப்போர் மற்றும் விற்போருக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டுமென சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ந்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி) 272 மற்றும் 273 பிரிவுகளின் படியும் கலப்பட உணவுப்பொருள் சட்டம் (1954) ன் கீழும் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

We shine News 4

அழிந்து வரும் பூச்சி இனம் ஒன்றுக்கு நியோபால்பா டொனால்ட்ரம்பி என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பெயரை ஒட்டாவை சேர்ந்த பரிணாம உயிரியல் விஞ்ஞானி வாஸ்ரிக் நஸாரி வைத்துள்ளார். இந்த புதிய வகைப் பூச்சியின் தலையில் மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் செதில்கள் உள்ளன.

We shine News 5

பிளிப்கார்ட் நிறுவனம் தங்களது டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு தேவைகளுக்காக ‘புராஜக்ட் நஞ்சுண்டா’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தில் அவசர காலங்களில் டெலிவரி ஊழியர்கள் அருகிலுள்ள டெலிவரி மையங்களில் உதவிகளை கோரலாம். இந்த திட்டத்துக்கு பெங்களுர் விஜயநகரில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட களப்பணியாளர் நஞ்சுண்ட சுவாமி பெயரைச் சூட்டியுள்ளது.

We shine News 6

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎஃப்எஃப்) தலைவர் பிரஃபுல் படேல் சர்வதேச கால்பந்து சங்கங்கள் சம்மேளனத்தின் (ஃபிஃபா) நிதிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.