January 09

Date:09 Jan, 2018

January 09

 

We Shine Daily News

ஜனவரி 9

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • ஈரானில் ஆரம்ப சுகாதார கல்வி நிலையங்களில் ஆங்கிலம் கற்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • மடகாஸ்கர்(தீவு) நாட்டில் ‘அவா’ புயல் தாக்கியது

 

 • தென் கொரியாவில் உறைந்து போன ஏரியில் மீன் பிடிக்கும் பாரம்பரியத் திருவிழா தொடங்கியுள்ளது

 

 • பாலியல் வன்கொடுமை செய்பவர்க்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் வகையில் சோமாலிலாந்து அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது

 

 • அமெரிக்காவில் வசிக்கும் ‘எல்சல்வடார்’ நாட்டு மக்களின் குடியுரிமை மற்றும் பணிபுரிதல் உரிமைகளை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்

 

 

தேசிய செய்திகள்

 

 

 • டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் ‘காமன் மொபிலிட்டி கார்டு’(பயண கார்டு) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

 • காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றப் பின் ராகுல் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் – மனமா(பஹ்ரைன்)

 

 • பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ரத்து செய்யப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் நேபாளம் நாட்டில் இன்றும் நடைமுறையில் உள்ளது

 

 • சிறு சேமிப்புத் திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது

 

 • மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள், இரயில் பாதை பராமரிப்பு, உள்கட்டமைப்பு பணிகள் ஆளில்லா விமானங்கள்(டிரோன்கள்) மூலம் கண்காணிக்கப்படும் என்று இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தர வரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது

 

 • சர்வதேச செஸ் ஜுனியர் பிரிவில் இந்திய கேன்டிடேட் மாஸ்டர் ‘குகேஷ்’ சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

 

 • பெண்களுக்கான சேலஞ்சர் டிராபி தொடரில் இந்தியா ‘புளு’ அணி சாம்பியன் பட்டம் வென்றது

 

 • இந்திய வீரர் ‘யூசுப் பதான்’ 5 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • மிகச் சிறிய அளவில் உள்ள தக்காளியை(செர்ரி தக்காளி) இஸ்ரேல் விசவாய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்

 

 • உலகில் வெப்பம் மிகுந்த சஹாரா பாலைவனத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது

 

 • ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, ஜனவரி 12ம் தேதி 31 செயற்கைக் கோள்களுடன் ‘பி.எஸ்.எல்.வி-சி 40’ என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது

 

புதிய நியமனம்

 

 • சிக்கிம் மாநில விளம்பரத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்

 

 

விருதுகள்

 

 

 • 75வது கோல்டன் கோல்ப் விருதுகள் (2018) – அமெரிக்கா 

 

 • சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதுகோகோ படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

 

 • சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது – அஜிஸ் அன்சாரி (தமிழ் நாடு வம்சாவழி) (தி மாஸ்டர் ஆஃப் நன் என்ற சீரியல்) வழங்கப்பட்டுள்ளது

 

 • சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருது – இன் தி ஃபேட் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

 

 • சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்அலெக்சான்ட்ரா டெஸ்பேல்க்கு ‘தி சேப் ஆப் வாட்டர்’ என்ற படத்திற்காக வழங்கப்பட்டது

 

 • சிறந்த பாடலுக்கான விருது – ‘திஸ் இஸ் மீ’(தி கிரெட்டெஸ்ட் ஷோமேன்) என்ற பாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது

 

 • சிறந்த இயக்குனருக்கான விருதுகுயில்லர்மோ டெல் டோரோவுக்கு(தி ஷேப் ஆப் வாட்டர் என்ற படத்திற்காக) வழங்கப்பட்டுள்ளது

 

 • சிறந்த படத்திற்கான விருதுலேடி பேர்ட் என்ற படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

 

 • டிராபமா பிரிவில் சிறந்த படத்திற்கான விருது – திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் என்ற படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

 

 • டிராமா பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது – கேரி ஓல்ட்மேன்க்கு (டார்கஸ்ட் ஹவர் – படத்திற்கு) வழங்கப்பட்டுள்ளது

 

 • டிராமா பிரிவில் சிறந்த நடிகைக்கான விருது – பிரான்சிஸ் மேக் டோர்மண்ட்க்கு(திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் – நாடகத்திற்காக) வழங்கப்பட்டுள்ளது

 

 • படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதுஜேம்ஸ் பிரான்கோவுக்கு (தி டிசாஸ்டர் ஆர்ட்டிஸ்ட் படத்திற்காக) வழங்கப்பட்டுள்ளது

 

 • படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருதுகோரிஸ் ரோனான் என்பவருக்கு ‘லேடி பேர்ட்’ படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது

 

 

முக்கிய தினங்கள்

 

 • ஜனவரி 09 – தியாகி சோமயாஜுலு (நெல்லை அண்ணா) நினைவு தினம்

 

வர்த்தக செய்திகள்

 

 

 • கைரேகை ஸ்கேனர் வசதியுடன் கூடிய சாம்சங் மடிகணினி(Samsung Notebook Spin) அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

 

 • அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய பங்கு சந்தை பட்டியலில் எஸ்.எம்.இ பிரிவில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள்(1000) இணைய உள்ளது

 

 • ஐசிஐசிஐ வங்கி தற்போது டிஜிட்டல் பரிவர்த்தணையை மேலும் அதிகரிக்கும் வகையில் ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் உடன் இணைந்துள்ளது 

 

 

ஒப்பந்தம்

 

 

 • இந்தியா மற்றும் சவூதி அரேபியா இடையே ஆண்கள் துணை இல்லாமல் இந்திய முஸ்லீம் பெண்கள் ஹஜ் பயணத்தை மேற்கொள்ளவும், கடல் வழி ஹஜ் பயணத்திற்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகின

 

 • கடலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளைக் கண்டறிந்து அழிக்கும் திறனுடைய அதிநவீன கப்பல்களை ரூ.32,000 கோடி செலவில் தென் கொரியாவுடன் இணைந்து தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது

 

 

­

Call Now