February 16

Date:16 Feb, 2017

February 16

We Shine Daily News

jkpo;

gpg;uthp 16

தேசிய செய்திகள் :

16-2-17 india

  • பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய வங்கிகளை ஒண்றிணைக்கும் தி;ட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

 

  • ஜார்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டத்தில் 7 நக்சல்கள் காவல்துறைக் கண்காணிப்பாளர்; அலுவலகத்தில் சரணடைந்தனர்.

 

  • ஹரியாணா மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் 18 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

  • தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான எம்.என்.கிருஷ்ணமணி (68) பெங்களுருவில் பிப்ரவரி – 15ல் காலமானார். இவர் 2016ல் குடியரசுத்தலைவரிடம் ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றுள்ளார்.

 

  • காஷ்மீரில் பாகிஸ்தான், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடிகளை பயன்படுத்துவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவத் தலைமைத் தளபதி விபின்ராவத் எச்சரித்துள்ளார்.

 

  • செல்லிடப்பேசி வாயிலாக வருமானவரி செலுத்தவும், பான் எண் வேண்டி விண்ணப்பிப்பதற்கும் பிரத்யேக செயலி ஒன்றை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலியின் வாயிலாக விண்ணப்பிப்பவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் பான் எண் வழங்கப்படும்.

 

  • பிரதமரின் வீட்டுவசதித் திட்ட இணையதளப் பக்கத்தில் இருந்து பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர், வெங்கய்யா நாயுடு ஆகியோரின் படங்களை நீக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

  • வெள்ளிக் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான செயற்கைக்கோளை அனுப்புவதே அடுத்த இலக்கு என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

 

  • பிரமோஸ் ரக ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ என்னும் ராணுவஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு உருவாக்கி சோதித்து வருகிறது.

 

  • ‘சார்க்’ கூட்டமைப்பு நாடுகளுக்கான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ‘ஜி.எஸ்.எல்.வி.மார்க் -2’ ராக்கெட் மூலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

 

  • ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி-37 ராக்கெட்டை விண்ணில் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்துள்ளது.

 

  • பிகார் மாநிலத்தில் +2 பொதுத்தேர்வுகள் பிப்ரவரி -14ல் தொடங்கின. இந்நிலையில் தேர்வில் முறைகேடு செய்த 204 பேர் நீக்கப்பட்டனர்.

 

பன்னாட்டு செய்திகள் :

16-2-17 world

  • ஐ.நா. அமைதிப்படையின் புதிய தலைவராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூன்-பியர் லாக்ரோயிக்ஸை (56) ஐ.நா.பொதுச்செயலர் ஆன்டோனியோ குட்டெரஸ் நியமித்துள்ளார்.

 

  • மேற்கு மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் வரும் நவம்பர் மாதம் 19ம்தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக அதிபர் அல்மாஸ்பெக் அடாம்பேயே வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

 

  • தைவான் நாட்டைச் சேர்ந்த எம்.பி.குவான் பிலிங் தலைமையிலான நாடாளுமன்ற குழுவினர் இந்தியா வந்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

  • மேற்குவங்காள மாநிலம் மால்டா மாவட்டத்திலுள்ள கலியாசக் பிளாக், சுரியந்த்பூர் பகுதியில் ரூ.2லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுக்களை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

 

  • சீனாவில் ஹ_பெய் மாகாண கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக திகழ்ந்து வந்த ஜூ பென்சுனுக்கு ஊழல் வழக்கில் 15ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

  • அமெரிக்காவில் ‘எச் 1 பி’ விசா மோசடியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஹிரால் பட்டேல் (34) என்ற பெண் நெவாக் மத்திய கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

 

விளையாட்டுச் செய்திகள் :

16-2-spoorts

  • உலகின் மின்னல் வேக மனிதராக வர்ணிக்கப்படும் தடகளவீரர் உசேன்போல்ட், 2017ம் ஆண்டுக்கான ‘சிறந்த விளையாட்டு வீரர்’ விருதும், ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை சைமன்பில்ஸ் ‘சிறந்த விளையாட்டு வீராங்கனை’ விருதும் வென்றுள்ளனர்.

 

  • சாம்பியன்லீக் கால்பந்தாட்ட போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பாரீஸ் செயின்ட் ஜெர்மெயின் அணி பார்சிலோனா அணியை வீழ்த்தியது.

 

  • தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ‘கொலோசியம் -2017’ என்கிற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்தது.
    காருண்யா பல்கலைக்கழகம் 2வது இடமும், சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரி 3வது இடமும் பிடித்தது.

 

  • பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் தகுதிசுற்று போட்டியில் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியது.

 

  • ஐபிஎல் டி20 தொடரின் 10வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல்-5ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

 

  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிவீரர்கள் நேற்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

  • மெம்பிஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பார்படாஸ் வீரர் டேரியன்கிங் பெர்னார்டு டாமிக்கை வீழ்த்தி சாதனை படைத்தார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

16-2-17 eco

 

  • இந்தியாவில் காப்பீடு வளர்ச்சி நடப்பாண்டு இறுதிக்குள் 4%க்கு அதிகமாக இருக்கும் என அசேசேம் அமைப்பின் அறிக்கை கூறியுள்ளது.

 

  • இன்போசிஸ் நிறுவன விவகாரம் குறித்து பொதுவெளியில் மற்றும் ஊடகங்களில் இனி பேசப்போவதில்லை என இன்போசிஸ் நிறுவன தலைவர் ஆர். சேஷசாயி தெரிவித்தார்.

 

  • எப்.எம்.சி.ஜி துறையை சேர்ந்த நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நிகரலாபம் 8.6% சரிந்து ரூ.167 கோடியாக உள்ளது.

 

  • லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை 3 ஆண்டுக்குள் பட்டியலிட மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

 

  • நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியா 5062 கோடி டாலர் மதிப்புக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.

 

  • இந்திய காமர்ஸ் துறையின் மதிப்பு தற்போது 600- 800 கோடி டாலர் வரை உள்ளது. வரும் 2021ம் ஆண்டு 5000- 5500 கோடி டாலராக இருக்கும் என இந்திய ரீடெய்ல் சங்கம் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குழும ஆய்வில் தெரியவந்துள்ளது.