February 01

Date:01 Feb, 2017

February 01

We Shine Daily News

 

jkpo;

gpg;uthp 01

We shine News 1

வடக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த மொராக்கோ குடியரசு 1984ல் வெளியேறியதை அடுத்து 38 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க யூனியன் அமைப்பில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளது.

We shine News 2

‘பிபா’ கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 129வது இடத்துக்கு முன்னேறியது. ஆசிய அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 19வது இடத்திலுள்ளது. சர்வதேச கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ‘பிபா’ வெளியிட்டது. இந்திய அணி விளையாடிய 11 போட்டிகளில் 9ல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் 130 இடங்களுக்குள் இந்தியா வந்தது.    கடைசியாக 2005, டிசம்பரில் வெளியான தரவரிசையில் இந்திய அணி 127வது இடம் பிடித்தது. 

We shine News 3

போர்டு நிறுவனம் காரில் பயணிக்கும் போது குரல்வழி உத்தரவு மூலம் பல சேவைகளை பெறும் ‘சிங்க்’ எனும் நவீன தொழில் நுட்ப சாதனத்தை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்த உள்ளது.

We shine News 4

தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத் (டிஎன்ஜிஏ) தலைவராக தமிழக காவல்துறை டிஜிபி ராதா கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

We shine News 5

உலக அளவில் 7½ மில்லயன் குழந்தைகளுக்கு மேலானோர் இந்த ஆண்டு ஊட்டச்சத்து இல்லாமல் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஐ.நா அவையின் குழந்தைகளுக்கான நிறுவனமான யுனிசெப் தெரிவித்துள்ளது.

We shine News 6

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க மத்திய அரசு இலவச வைபை ஹாட்ஸ்பாட் வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சுமார் 1050 கிராமங்களில்  இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை கட்டமைக்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் அடுத்த 6 மாதங்களுக்குள் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென இண்டர்நெட் வழங்க சிறப்பு டவர்கள் கட்டமைக்கப்படுகின்றன.

We shine News 7

இந்திய அஞ்சல்துறை இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க் என்ற பெயரில் வங்கி சேவையை துவங்க உள்ளது. முதலில் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலும், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியிலும் வங்கி சேவைகள் துவங்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 4.5% வட்டியும், 50 ஆயிரம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 5% வட்டியும், 1 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 5.5ம% வட்டியும் பெறலாம். நாடு முழுவதும் 650 வங்கி கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது என தலைமை செயலதிகாரி ஏ.பி.சிங் கூறினார்.

Call Now