April 13

Date:16 Apr, 2017

April 13

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 13

தேசிய செய்திகள் :

 • அருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் குறித்து ‘வெள்ளை வெளிச்சம்’ என்றதலைப்பில் கவிஞர் வைரமுத்து கோவையில் உரையாற்றஉள்ளார்.

 

 •  2016ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

 

 •  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல்,டீசலுக்கு விலைநிர்ணயம் செய்யும் நடைமுறை மேமாதம் 1ஆம் தேதிமுதல் அமலுக்கு வரஉள்ளது. இந்த புதிய நடைமுறை 5 நகரங்களில் முதல் கட்டமாகஅமலுக்குவரஉள்ளது.

 

 •  உயர் நீதிமன்ற நீதிபதிகளின்  கோடை விடுமுறையில் சிலநாள்களில் மட்டும் தங்கள் விருப்பத்தின்; பேரில் பணியாற்றலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ் கேஹர் அழைப்புவிடுத்துள்ளார்.

 

 •  ஆதார் எண்ணை அளிக்க வேண்டியதற்கான காலஅவகாசத்தை ஏப்ரல் 30ம் தேதிவரை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு நீட்டித்துள்ளது.நாடுமுழுவதும் சுமார் 4 கோடிக்கு மேற்பட்டோருக்கு வருங்கால வைப்புநிதி கணக்குஉள்ளது.

 

 •  ஏழைக்குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு கல்வி மற்றும் திருமணத்துக்கு உதவும் வகையில் ரூ.50,000 வளர்ச்சிநிதிப் பத்திரம் வழங்குவதற்கான ‘பாக்ய லஷ்மி திட்டம்’ என்ற புதியதிட்டத்தை உத்திரபிரதேச அரசு அமல் படுத்தியுள்ளது.

 

 •  புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துகொள்ள உதவும் பிரபலமான இன்ஸ்டாகிராம் செயலியில் (ஆப்) அதிகமானோர் பின்தொடரும் சர்வதேசச் தலைவராகபிரதமர் மோடிவிளங்குகிறார். அவரை 69 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர். அமெரிக்கஅதிபர் டிரம்ப் 2வது இடமும்,போப் பிரான்சிஸ் 3வது இடத்திலும் ;உள்ளனர்.

 

 •  ராமாயணம் தொடர்புடைய இடங்களைமேம்படுத்தும் மத்தியஅரசின் திட்டத்தில் சீதைபிறந்த இடமானபீகார் மாநிலம்,சீதாமர்ஹியும் அடங்கியுள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

 • இங்கிலாந்தை சேர்ந்த அல்ஃபி பிராட்லி இரண்டு ஆண்டுகள் உழைப்பில் ‘கத்திதேவன்’ சிலையை உருவாக்கியுள்ளார். 24 அடிஉயரத்தில் இருக்கும் இந்தசிலையை காவல் நிலையங்களால் கைப்பற்றப்பட்ட 1 லட்சம் கத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

 •  அமெரிக்க வெளியுறவு துணை மந்திரியாக மேரிலேண்ட் அட்டார்னி ஜெனரல் ஜான்.ஜே சுல்லவனை நியமிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவுசெய்துள்ளார்.

 

 •  சென்னை வளர்ச்சிக் கழகமும் உலகத் தமிழர் பொருளாதார மையமும் இணைந்து நடத்தும் 4 வது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு இணையதளம் தொடக்கம் மற்றும் விளக்க ஏடு வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் ஏப்ரல் 13 ல் நடைபெறஉள்ளது.

 

 •  இந்நிகழ்ச்சியில் 10 பன்னாட்டு சமூக ஆர்வலர்களுக்கு சமூகஆர்வலர் மாமணி விருதுவழங்கப்படஉள்ளது.

 

 •  சிரியாதொடர்பான ஐ.நா பாதுகாப்புக் குழுவின் வரைவுத் தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் நிராகரித்தது.

 

 •  இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி வருகை புரிவது இஸ்ரேலுக்கு வரலாற்று விஜயமாக இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ட்விட்டரில் கூறியுள்ளார்.

 

 •  2015 ம் ஆண்டுஅக்டோபர் மாதம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இஸ்ரேல் பயணம் மேற்கொண்டார். இஸ்ரேலுக்கு இந்திய ஜனாதிபதி பயணம் மேற்கொண்டது அதுவே முதல் தடவையாகும். இஸ்ரேல் அதிபர் இந்தியாவுக்குகடந்தஆண்டு 2016 ல் வருகைதந்தார். 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு இஸ்ரேல் அதிபர் ஒருவர் வருகைதருவது 2 வதுதடவையாகும்.

 

 •  சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தின் எல்லையில் 334 சகிமீட்டர் பரப்பளவு கொண்டு மிகப்பெரிய உல்;லாசநகரம் அமைக்கப்படஉள்ளது. இந்த உல்லாச நகரத்தின் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் வருமானத்தை மட்டுமே சார்ந்திருப்பதை குறைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இலக்குகளை கொண்ட விஷண் 2030 ஆகியவைகளுக்கு ஓரு பகுதியாக சவுதிஅரசு இதை நிறைவேற்றியுள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்யாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணிசன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியைதோற்கடித்தது.

 

 •  இந்தியபாட்மிண்டன் சங்கதலைவர் அகிலேஸ்ரீ; தாஸ் குப்தாமரணமடைந்தார்.

 

 •  மினிஉலககோப்பை  என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபிகிரிக்கெட் போட்டிக்கான தூதர்களாக இந்தியாவின் மூத்தசுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன்சிங் உள்பட 8 பேரை  ஐசிசி  நியமித்துள்ளது.

 

 •  சிங்கப்பூர் ஒபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துகாலிறுதிக்குமுன்னேறியுள்ளார்.

 

 •  லாலிகாபோட்டியில் பார்சிலோனாஅணியின் மலாகாவுக்கு எதிரானபோட்டியில் 2 முறைவிதிமீறலில் ஈடுபட்டதற்காகநெய்மருக்கு 3 போட்டிகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • நடப்புநிதியாண்டில் ரூ.13000 கோடி மதிப்புக்கு பங்குதாரர்களிடமிருந்து பங்குகளைதிரும்பபெற இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4ம் காலாண்டில் ரூ3603 கோடி நிகரலாபம் ஈட்டியது.

 

 •  பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘மோரிஸ் லூப்ரிகன்ட்ஸ்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘பேட்டர்சன் லூப்ரிகன்ட்ஸ் இந்தியா’ நிறுவனம் கார்,பைக் போன்ற வாகனங்களுக்கானஎஞ்ஜின் ஆயில் விற்பனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

 

 •  நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 6000 மெகாவாட் காற்றாலைமின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என இந்திய காற்றாலை மின்சார உற்பத்தியாளர் சங்கதலைவர் சர்வேஷ்குமார் தெரிவித்துள்ளார். இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் சமீபத்தில் டென்சென்ட், மைக்ரோசாப்ட் மற்றும் இபே ஆகிய நிறுவனங்களிலிருந்து 9000 கோடி ரூபாய் நிதியை திரட்டியது.