November 02

Date:02 Nov, 2017

November 02

 

We Shine Daily News

தமிழ்

நவம்பர் 02

தேசிய செய்திகள்


 

 • கோவை- தில்லி இடையே வரும் 18 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி கே. ஷியாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.

 

 • உலக இந்திய கருத்தரங்கில், இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • கழிவுகளைச் சரியாக மேலாண்மைச் செய்யாததே, நாட்டில் டெங்கு, சிக்கன் குனியா போன்ற தொற்று நோய்கள் பரவி மக்கள் உயிரிழக்கக் காரணமாகி விட்டது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 • ஜம்மு – காஷ்மீர் மாநில பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பிரதிநிதி தினேஷ்வர் சர்மாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • இந்தியா – கியூபா இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியதாக வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

 

 • ஆளில்லா சிறியரக விமானங்களைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் குறித்த வரைவு அறிக்கையை உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் நவம்பர் 1ல் வெளியிட்டுள்ளது.

 

 • நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, கடந்த ஜூலை 25ஆம் தேதி பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நவம்பர் 1உடன் தனது நூறாவது நாளை நிறைவு செய்தார்.

 

 • அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா விருதுகள் பெற்றவர்களும் இனி தங்கள் வாழ்நாள் முழுவதும் ரயில்களில் சிறப்பு வகுப்பில் (எக்ஸிகியூட்டிவ் கிளாஸ்) கட்டணமின்றி பயணிப்பதற்கு ரயில்வே துறை சலுகைகளை நீட்டித்துள்ளது.

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 • நியூயார்க்கில் நடந்த தீவரவாத தாக்குதலில் தொடர்புடைய உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 2வது நபரை எப்.பி.ஐ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

 

 • ஸ்பெயின் நாட்டிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுவதற்கான பிரகடனம், கேட்டலோனியா பிராந்திய பாராளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

 • ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபிய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏமன் நாட்டில் 21 பேர் பலியாகினர்.

 

 • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு நேற்று அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

 

 • அமெரிக்காவின் வாஷிங்டன் நகர் வரை சென்று தாக்கும் நவீன கேஎன்-20 என்ற புதிய ஏவுகணை சோதனையில் வடகொரியா தற்போது ஈடுபட்டுள்ளது.

 

 • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவைச் சந்திக்க நவம்பர் 5 அன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

 

மாநில செய்திகள் 

 

 

 • ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக சபரிமலை வேட்டி, துண்டு வர்த்தகம் 30 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.
  யானைகள் நடமாட்டம் குறைந்ததால் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

 

 • தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியால் கரும்பு உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது என தமிழக அரசின் சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநர் எம்.செந்தமிழ் செல்வன் தெரிவித்தார்.

 

 • முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நவம்பர் 2 இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 3 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 புதிய ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கும் அடையாகமாக 12 வாகன சேவையை துவக்கி வைத்தார். மேலும் 108 ஆம்புலன்ஸ் செயலியை துவக்கி வைத்தார்.

 

 • மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீடித்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நம்பியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9.4 அடி உயர்ந்துள்ளது.

 

 • தமிழகத்தின் 2-ஆவது தேசிய வேளாண் விற்பனைச் சந்தை திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் நவம்பர் 1ல் தொடக்கி வைக்கப்பட்டது.

 

 

விளையாட்டு செய்திகள்

 


 

 • பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான ரபேல் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்டின் இறுதியை நம்பர் 1 இடத்துடன் நடால் நிறைவு செய்வது இது 4வது முறையாகும்.

 

 • காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2 தங்கம் உள்பட 5 பதக்கம் வென்றது. இந்தியாவின் ஷாஸார் ரிஸ்வி, பூஜா கட்கர் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

 

 • கோவையில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்டோருக்கான தேசிய அளவிலான செஸ் போட்டியின் மகளிர் பிரிவில் கோவையைச் சேர்ந்த கே.பிரியங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நவம்பர் 2ல் தொடங்குகிறது.

 

 • பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் பெயரை பத்மஸ்ரீ விருதுக்கு முன்னாள் மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் பரிந்துரை செய்துள்ளார். இவர் ஒரே ஆண்டில் 4 சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • தொழில் தொடங்க உகந்த சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை முதல் 50 இடத்துக்குள் கொண்டு வர 200 சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார்.

 

 

நியமனச் செய்திகள்

 

 

 • ஜப்பானின் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாட்டின் 98-வது பிரதமரை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஷின்சோ அபே 151 வாக்குகளைப் பெற்று மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

 

 • பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக அஜய் பிஸாரியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை வெளியிரவுத் துறை அமைச்சகம் நவம்பர் 1 இரவு அறிவித்தது.

 

முக்கிய தினங்கள்

 

 • கேரள மாநிலம் உருவான 61-ஆவது ஆண்டு தினம் நவம்பர் 1 நேற்று கொண்டாடப்பட்டது. கேரள மாநிலம் கடந்த 1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் இரண்டாம் காலாண்டு இழப்பு ரூ 750.41 கோடியாக அதிகரித்தது.

 

 • ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நடுத்தர வகை சொகுசு காரான ஹோண்டா சிட்டி விற்பனை 7 லட்சம் என்ற மைல்கல்லை தாண்டி சாதனை படைத்துள்ளது.

 

 • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வீடு மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதத்தை 5 பைசா என்ற அளவில் குறைத்துள்ளது.

 

 • தொழில் புரிவதற்கான சாதனமான சூழல் இருக்கும் நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டது. அந்த பட்டியலில் இந்தியா முதன்முறையாக 100வது இடத்தைப் பிடித்தது. இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தைத் தொட்டன.

 

 • நடப்பு நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.5 சதவீதமாக இருக்கும் (ஜிடிபியில்) அல்லது 4000 கோடி டாலராக இருக்கும் என நொமுரா நிறுவனம் கணித்திருக்கிறது.

 

 • பொதுத் துறை நிறுவனமான டிரட்ஜிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

 

Current Affairs

 

National News

 

 • President Shri Ram Nath Kovind inaugurated the Global Clubfoot Conference being organised by the cure India in partnership, in New Delhi.

 

 • The maximum age of joining the National Pension System from the existing 60 years to 65 years.

 

 • The Haryana government announced lifetime monthly pension to the Hindi ‘Satyagrahis’ from the state who jailed during emergency – 1975.

 

 • Uttar Pradesh cabinet decided to make India’s first conservation reserve for black buck in Allahabad Meja.

 

 • Assam government signed Memorandum of understanding and Term of Reference with Singapore for skilling youth of state.

 

 • Troops of Indian and Kazakhsthan will engage in 14-day joint exercise ‘Prabal Dastyk’ 2017 in Bakloh belt of Himachal Pradesh.

 

 • The 210 mtr. High statue of Chhatrapathi Sivaji Maharaj has received environmental clearance making it the world’s tallest statue.

 

 • PM Modi Flaged off Run unity is New Delhi to mark the 142nd birth anniversary of Sardar Vallabhai Patel.

 

 • Union Minister of social justice and empowerment Ramdas Athawale launched the Pradhan Mantri Bhartiya Jan Aushadhi Pariyojana in Mumbai with an objective of making quality medicine at affordable prices at all.

 

 • World Vegan Day – Nov 1

 

 • Rashtriya Ekta Diwas (National Unity Day) celebrated as Oct 31.

 

 • Five States – Haryana, Madhya Pradesh, Kerala, Chhattisgarh and Karnataka as celebrating their Foundation Day on Nov 1.

 

Economy

 

 • The government gave ex-post facto clearance to implementation of the Special Banking Arrangement (SBA) of Rs.10,000 cr for payment of outstanding claims towards fertilizer subsidy in 2016-2017.

 

Sports

 

 • The Delhi and district cricket has named a gate of feroz shah kotta ground after former Indian opener Virender Sehwag.

 

 • Indian fast Bowler Jasprit Bumrah became the number one bowler in latest ICC 720 I taking Indian players.

 

 • Pakistan to host next Asian Cricket Council emerging nation’s cup in April 2018.

 

 • Martina Hingis – 25 time grand slam champion has announced her retirement from tennis.

 

Appointments

 

 • Y.C. Modi appointed as the National Investigation Agency new Director General.

 

 • Bharti Axa Life Insurance has appointed Vikas Seth as CEO.

 

 • Indian table tennis player Diya Chitale won a Silver in ITTF world cadet challenge in Suva, Fiji.

 

Obituary

 

 • Veteran Kannada writer and journalist Khadri Achyuthan died at 71.

 

Call Now