October 1

Date:01 Oct, 2017

October 1

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 01

தேசிய செய்திகள்

 • காஷ்மீரின் மிக உயர்ந்த “லே” பகுதியில் கட்டப்பட்ட “பிரதாம் – ஷியோக்” பாலத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

 

 • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடத்தப்படும் அனைத்து தேர்தல்களிலும் “விவிபாட்” (வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள்) பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

 • மகாத்மா காந்தியடிகளின் 149-வது பிறந்தநாள் விழா நாளை சென்னை மெரினா கடற்கரையில் கொண்டாடப்படுகிறது.

 

 • தமிழகத்தின் புதிய ஆளுநர் : “பன்வாரிலால் புரோஹித்” (77 வயது)

 

 • இந்தியாவிலேயே பாதுகாப்பான தலைநகரம் என்ற பட்டியலில் சென்னை முதல் இடம் பிடித்துள்ளது.

 

 • ஆசியாவிலேயே முதன் முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சை அமிர்தானந்தமயி மருத்துவமனையில் (கொச்சி) நடைபெற்றது.

 

 

 

 

பன்னாட்டு செய்திகள்

 • ஊழல் புகார் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள “டாம் பிரைஸ்” தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அந்த பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா வர்மா அல்லது பாபி ஜிண்டால் அமர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 • உலகிலேயே அதிக உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. பால் உற்பத்தியில் முதலாவது இடமும், காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் உலக அளவில் 2 ஆவது இடத்திலும் உள்ளது.

 

 • பேட்டரியில் இயங்கும் பயணிகள் விமானம் இன்னும் 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் இதற்கான முயற்சியில் லுக்தான்சா, ஏர்பிரான்ஸ்-கே.எல்.எம் மற்றும் விர்ஜின் அட்லாண்டிக் விமான நிலையங்கள் ஈடுபட்டு வருகின்றன.

 

 • இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட இந்திய அணி மறுத்து வருவதால் ரூ.457 கோடியை இழப்பீட்டாக தர வேண்டும் என்று ஐ.சி.சியிடம் முறையிடப்போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

 • அக்டோபர் 1(உலக முதியோர் தினம், இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்ட தினம், ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட தினம்)

 

 • துபாயில் செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பில் ஒரு மாதிரி உலகம் (ரூ.879 கோடி செலவில் 19 லட்சம் சதுர அடி பரப்பளவில் ராட்சத கூண்டு) உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு செவ்வாய் கிரக அறிவியல் நகரம் என பெயரிடப்பட்டுள்ளது.

 

 • உலகிலேயே அதிவேகத்தில் மணிக்கு (4,020 கி.மீ.,) செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 • சீனாவில் நடந்த யுஹான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதி போட்டியில் பிரான்சின் கரோலின் கார்சியா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

 • பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சனா மிர் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பிஸ்மா மாரூப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 102-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டான் 34-33 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியை தோற்கடித்தது.

 

 • பாகிஸ்தான் லாகூர் சங்கத்தின் கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த குலாம் ஹைதர் அப்பாஸ் என்ற இளம் கிரிக்கெட் வீரர் அணியில் தேர்வு செய்ய மறுத்ததாலும், லஞ்சம் கேட்டதாலும் மைதானத்திலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்

 

 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சில புதிய விதிகளை அமல்படுத்தியது. அதன்படி போலியாக பீல்டிங் செய்த குயின்ஸ்லாந்து (ஆஸ்திரேலியா) வீரர் மார்னஸ் லாபஸ்சேஞ்ச்-க்கு 5 ரண்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையிலும் குயின்லாந்து அணி வெற்றி பெற்றது.

 

 • சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 57வது தேசிய ஓபன் தடகள போட்டியில், ரயில்வே அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 • தொலை தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய், காலாண்டில்(ஜூன்) 25.49 சதவீதம் சரிவை கண்டது.

 

 • நடப்பு 2017-18 நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கு பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி நிதி கொள்கை ஆய்வில் வெளியாகியுள்ளது.

 

 • அம்பி பரமேஸ்வரன் “For God’s Sake” என்னும் புத்தகம் எழுதியுள்ளார்.டாடா குழுமத்தைச் சேர்ந்த வாட்ச், நகை உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் டைட்டன் நிறுவனத்திற்கு ஜிஎஸ்டியால் 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

 • நடப்பு ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட நிதிப்பற்றாக்குறை ஆகஸ்ட் மாத முடிவில் 96 சதவீதம் எட்டப்பட்டது.

 

 • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வைப்புத் தொகை புதிய விதிமுறை : நகர்ப்புறம் 5 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை, புறநகர் பகுதி 2 ஆயிரம் முதல் ஆயிரம் வரை ஆக குறைக்கப்பட்டுள்ளது.

 

 

 

Current Affairs

 

National News

 

 • President Ram Nath Kovind inaugurated Shirdi International Airport in Ahmed Nagar District of Maharashtra  

 

 • SMT. Maneka Gandhi inaugurated the 3rd edition of “Women of India Organic festival” at Dilli Haat (INA). Theme : Good for Women; Good for India; Good for you

 

 • Madhya Pradesh CM Shivraj Singh Chouhan launched ‘Single Click Pension Delivery’ Scheme

 

 • The Indian Renewable Energy Development Agency launched a new Green Masala Bond on the London Stock Exchange’s

 

 

International News 

 

 • Austria’s  law banning face veils such as burkas or niqabs comes into effect from (Oct 1)

 

 • The United Arab Emirates has begun collecting new “Sin” taxes on tobacco products, energy drinks and soft drinks

 

Economy 

 

 • India’s external debt amounted to $485.5 billion during the quarter ended June 17

 

 

Sports 

 

 • Max Verstappen has won the F1’s Malaysian Grand prix after beating Lewis Hamilton.

 

 • The U-17 world cup will set a record of sorts as it see for the first time a female assistant referee in a FIFA men’s competition this time.

 

 • FIFA has launched the official ball for U-17 football world cup and it will be called Krasava, a word generally used by Russian sports fan.

 

 

Awards 

 

 • A Ghana based Indian Entrepreneur Birendra Sasmal, CEO of Subah has bagged a prestigious business award in UK for his efforts to bring Innovative IT solutions to Africa

 

 

Obituary 

 

 • Radhika Mohan Bhagawati, Guwahati based Journalist has passed away

 

 

Important Days

 

 

 • International Day of older person : 1 Oct
  • Theme: “Stepping into the future: Tapping the Talents, Contribution and participation of older person in society.

 

 

Call Now