JULY20

Date:20 Jul, 2017

JULY20

                                                                                                                                                                                                   

                                                                                                                                                                                                                       We Shine Daily News

                                                           தமிழ்  

                                                        ஜூலை 20

                                                         தேசிய செய்திகள்

 

 

 • பள்ளி மாணவ மாணவிகளின் புத்தகச் சுமையைக் குறைக்கும் விதமாக, இனி 5ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கிடையாது என்று தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 • மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டால் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படும். எனவே மது விற்பனைக்குத் தடை விதிப்பது சாத்தியமல்ல என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

 

 • பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு மானிய விலையில் 4.820 மெட்ரிக் டன் பருப்பு வகைகளை விநியோகிக்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. மாநில பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அவற்றை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அம்மாநில உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

 

 • குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த நாட்களில் நடைபெற்றது. இன்று(20.07.2017) வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகின்றன. இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் யார் என்ற செய்தி இன்று மாலை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 • நாகலாந்து முதல்வராக டி.ஆர்.ஜீலியாங் மீண்டும் பதவியேற்றுள்ளார்.

 

 • திறன்களை வளர்க்க விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தி உள்ளார்.

 

 • ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.15000 ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

 • புதுவை மாநிலத்தின் ஒரே பறவைகள் சரணாலயமாக திகழும் ஊசுட்டேரியில் விஷம் வைத்து பறவைகளை வேட்டையாடுவதால் இனப் பெருக்கத்திற்காக இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைகிறது என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

                                                                                                                 பன்னாட்டு   செய்திகள்

 • அமெரிக்கா, வாஷிங்டன் நகரில் முதலாவது உலகலாவிய ‘ரோபாட்டிக்ஸ்’ போட்டி நடந்தது . இதில் 157 நாடுகள் கலந்து கொண்டன. இந்திய மாணவர்கள் இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று ஜாங் ஹெங் என்ஜினீயரிங் டிசைன் விருதினைப் பெற்று சாதனை படைத்தனர்.

 

 • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற 115 பில்லியன் டாலர்களை கொடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் லீ மெயர் தெரிவித்துள்ளார்.

 

 • பயங்கரவாதம் குறித்த வருடாந்திர அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை தயார் செய்துள்ளது. இதில் பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், ஈராக், லிபியா, ஏமன் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன என்றும் இதனால் இந்தியா பலவிதமான சிக்கல்களை சந்தித்து வருகிறது என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

 

 • வடகொரியாவில் தொழிற்சாலையிலிருந்த தாமிரங்களை திருடி விற்றவர்கள் மற்றும் தென் கொரியாவில் தயாராகிற பத்திரிக்கைகளை விற்பனை செய்தவர்களுக்கும் பொது இடத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளும் மரண தண்டனையை அந்நாட்டு அரசு நிறைவேற்றியுள்ளது.

 

 • மாஸ்கோவில் தற்போது பாதுகாப்புத் துறை துணை அமைச்சராக உள்ள ‘அனடோலி அண்டோநோவ்’ என்பவரை அமெரிக்காவிற்க்கான புதிய தூதராக ரிஷிய அரசு நியமித்துள்ளது.

 

 • விண்வெளி, கணினி பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திடம் செனட் அவைக் குழு வலியுறுத்துகிறது.

 

 • பாகிஸ்தானுடன் தற்போது சீனா கைக்கோர்த்துவிட்டது. இனி இந்தியாவை தாக்குவதற்கு சீனா தயாராகி விட்டதாகவும் சமாஜவாதி கட்சியின் நிறுவனறும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான முலாயம் சிங் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 • 5 ஆம் தலைமுறை போர் விமானம் தயாரித்தலில் 2 –ஆவது கட்டப் பணியை தொடங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவும் ரஷியாவும் விரைவில் கையெழுத்திட உள்ளன என்று ரஷிய அரசு நிறுவனமான ரோஸ்டக்கைச் சேர்ந்த அதிகாரி செர்ஜி செமிஜோவ் கூறியுள்ளார்.

 

                                                                                                      விளையாட்டு செய்திகள்

 

 • காமன்வெல்த் யூத் ஜுடோ போட்டியில் இந்தியா 1 தங்கம், 3 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்கள் வென்றுள்ளது.

 

 • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வின் 2 வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 2 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

 

 • 10 அணிகள் இடையிலான 4 வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது என்று சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 • இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென்ஆப்பிரிக்கா நாடுகள் பற்கேற்கும் பிரிக்ஸ் விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் சீனா அணிகள் மோதிக்கொண்டன . இந்த கூடைப்பந்து போட்டியில் இந்தியா சீனாவிடம் தோல்வியை சந்தித்தது.

 

 • 5 வது புரோ கபடி லீக் போட்டி வருகிற 28ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் சென்னை நகரை மையமாகக் கொண்ட தமிழ் தலைவாஸ் என்ற அணி முதல் முறையாக களம் காணுகிறது. இவ்வணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டார்.

 

 • பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

 • டிஎன்பிஎல் 2வது சீசன் போட்டிகள் வருகிற 22ம் தேதி முதல் தொடங்குகிறது. இவ்வாட்த்திற்க்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகின்றன.

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவிசாஸ்திரியுடன் பணியாற்றுவது சுமூகமான முறையில் செல்லும் என்று எதிர்ப் பார்ப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளர்.

 

                                                                                                       பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 • மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் ஆல் இந்தியா ரேடியோவிற்கு ரூ.10 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 • ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் (ஹெச்பிசிஎல்) 51 சதவீத பங்குகளை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) நிறுவனத்துக்கு விற்பனை செய்வதாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • ஏப்எம்சிஜி துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் யுனிவேர் (ஹெச்யுஎல்) நிறுவனத்தின் ஜுன் காலாண்டு நிகர லாபம் 9 சதவிதம் அதிகரித்து. ரூ1.283 கோடியாக உயர்ந்துள்ளது.

 

 • பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் நிகரா லாபம் 9.9 சதவீதம் உயர்ந்து ரூ.251.60 கோடியாக இருக்கிறது என்று அவ்வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 • வங்கிகள் தங்களது வாரக்கடனில் 60 சதவீதத்தை தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிஸில் கூறியுள்ளது.

 

 • பொதுத்துறையை சேர்ந்த மிகப் பெரிய பொது காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியாவின் (ஐபிஓ) பொதுப்பங்கு வெளியீடு வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளர்.

 

 • சரக்கு மற்றும் வேவை வரி காரணமாக பொருட்களின் விலை 4 சதவீதம் முதல் எட்டு சதவீதமாக குறையும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளர்.

          Current Affairs

 • Britain’s first women Sikh member of Parliament who recently elected to be Home Affairs select committee is – Preet Kaur Gill .

 

 • The country in which India recently launched a solar Electrification project to electricity a remote village named Agaween is – Egypt.

 

 • The state that recently decided to develop eco – bridges for the movement of tigers is – Telangana..

 

 • Swami Smarananandaji appointed as the president of Ramakrishna math and mission.

 

 • Paranjoy Guha Thakura resigned as the Editor of Economic and Political Weekly ( EPW)

 

 • Madhya Pradesh has implemented Shaala Siddhi Protsahan Yojana in 25 thousand government school.

 

 • The United States of America has successfully tested the world’s first ever active laser weapons system.

 

 • LK Adwani receives lifetime Achievement contribution award in Lok Sabha..

Call Now