January 19

Date:31 Jan, 2017

January 19

We Shine Daily News

 

jkpo;

[dthp 19

We shine News 1

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகம், கேரளம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மேலும் 78500க்கும் அதிகமான வீடுகளை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

We shine News 2

அமெரிக்காவை சேர்ந்த பாஸ்வேர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ‘கீப்பர் செக்யூரிட்டி’  நிறுவனம் நடத்திய ஆய்வில் 2016ம் ஆண்டு 123456 என்ற பாஸ்வேர்டை அதிகமாக பயன்படுத்தியுள்ளனர் என தெரிகிறது.

We shine News 3

பயன்பாட்டில் இல்லாத 105 மத்திய சட்டங்களை அரசமைப்பு சட்டத்திலிருந்து நீக்குவதாக மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

We shine News 4

சுவிட்சர்லாந்தில் இருந்து 540 ஜெர்சி இன பசுக்களை தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவை கதார் ஏர்வேஸ்க்கு சொந்தமான சரக்கு விமானத்தில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

We shine News 5

அகில இந்திய துறைமுக அணிகளிடையே கூடைப்பந்துப் போட்டி தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டியில் சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, தூத்துக்குடி ஆகிய 4 பெரிய துறைமுகங்களின் அணியினர் பங்கேற்கின்றனர்.

We shine News 6

‘இந்தியாவின் கருந்துளை மனிதர்’ என அழைக்கப்பட்ட விஞ்ஞானி சி.வி.விக்வேஸ்வரா(78) பெங்களுரில் காலமானார். அமெரிக்காவின் கொலாம்பியா பல்கலைக்கழகத்தில் அணுத்துகள் இயற்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் மேரிலேண்ட் பல்கலைக் கழகத்தில் கருந்துளைகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

Call Now