January 18

Date:31 Jan, 2017

January 18

We Shine Daily News

 

jkpo;

[dthp 18

We shine News 1

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.

We shine News 2

தீரச்செயல் புரியும் சிறுவர், சிறுமிகளுக்கு “பாரத் விருது” மற்றும் சஞ்சய் சோப்ரா- கீதா சோப்ரா பெயரில் தேசிய விருதுகளை  மத்திய அரசு வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டுக்கான விருதுக்கு 13 சிறுவர்கள், 12 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

We shine News 3

வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தேர்தல் ஆணையம் மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் அடையாள சீட்டுகள் ஆகியவற்றையும் வாக்காளர்கள் தாங்களாகவே நகல் எடுக்க முடியும் இதற்கு ECI ஆப் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

We shine News 4

மும்பையை சேர்ந்த பெண் ஒருவரின் வயிற்றில் வளரும் 24 வார கருவில் (அனென்சிஃபாலி) என்ற குறைபாடு உள்ளதால் கபாலம் இல்லாத குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதால் அக்கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

We shine News 5

வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் ரகசியமாக முதலீடு செய்திருப்பதாகவும் வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு “பனாமா லீக்ஸ்” என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியிட்ட தகவல்கள் உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

We shine News 6

இந்தியாவில் ரூ.55 கோடி முதலீட்டில் செல்லிடப்பேசி ‘சிப்’ களை வடிவமைக்கும் கூடத்தை அமைக்க உள்ளதாக குவால்கோம் நிறுவனம் தெரிவித்துள்ளது.