January 17

Date:31 Jan, 2017

January 17

We Shine Daily News

 

jkpo;

[dthp 17

We shine News 1

நிலவில் காலடி எடுத்து வைத்த இறுதி விண்வெளி வீரர் அமெரிக்காவின் ஜின் செர்னன் (82) மரணமடைந்தார்.    செர்னன் 1972ல் அமெரிக்காவில் நிலவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு செலுத்தப்பட்ட “அப்பலோ 17” விண்கலத்துக்கு தளபதியாக இருந்தவர்.

We shine News 2

  வாக்காளர்கள் தங்கள் வாக்கை சரிபார்த்து கொள்ளும் விதமாக வாக்கு எந்திரத்தில் சரிபார்ப்பு ஒப்புகைச் சீட்டு (Vote Verifier Paper Audit Trail- VVPAT)  வழங்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் சரியான நபருக்கு சரியாக அளிக்கப்பட்டுள்ளனவா என சரிபார்த்துக் கொள்ள முடியும்.

We shine News 3

ஜனவரி 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடைபெறுகிறது.
We shine News 4

பொது மக்களுக்கான அரசு சேவைகளை ஆன்லைனில் அளிப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலம் 26வது இடத்திலும் தமிழகம் 5வது இடத்திலும் இருப்பதாக மத்திய அரசின் இணையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

We shine News 5

பூமியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை பாதுகாப்பாக அகற்ற ஆளில்லா குட்டி விமானத்தை குஜராத் அகமதாபாத்தை சேர்ந்த மாணவன் ஹர்ஷவர்தன் ஜாலா(14) உருவாக்கியுள்ளான்.

We shine News 6

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ. 39565 கோடி வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.