TNPSC Current Affairs -January 31, 2018

Date:31 Jan, 2018

TNPSC Current Affairs -January 31, 2018

 We Shine Daily News

ஜனவரி 31

தமிழ்

உலக செய்திகள்

 • குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடைபெற இருந்த கலாச்சார விழாவில், தென்கொரியாவுடன் சேர்ந்து பங்கேற்க போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது.

 

 • கனடாவில் கடந்த ஆண்டு தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 40000ஐ தாண்டியுள்ளது என்று அந்நாட்டு கூட்டாச்சி அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

 • சீனாவில் தற்போது பெய்து வரும் பனியால் ஜியுஹூவா தீவின் கடல் பகுதி முழுவதுமாக பனிகட்டியாக மாறியுள்ளது.

 

 • சுவிட்சர்லாந்தில் வரலாற்றிலேயே 2018, ஜனவரி மாதத்தில் தான் அதிகமான வெப்பம்(6 டிகிரி) பதிவாகியுள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 

 • தமிழகத்தை சேர்ந்த நீதிபதி மூ.புகழேந்தி எழுதிய ‘வெள்ளை தாண்டவம்’ என்ற நூல் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது.

 

 • இந்தியாவின் கால் டாக்சி நிறுவனமான ஓலா, ஸ்திரேலியாவில் கால் டாக்சி சேவையை தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியா, ஓலா நிறுவனம் தனது சேவையை துவங்கும் 2வது வெளிநாடாகும். ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு பங்களாதேஷில் தனது சேவையை தொடங்கியது.

 

 • ரஷிய அதிபர் புதினின் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள 114 அரசியல்வாதிகள், 96 தொழில் அதிபர்களை பொருளாதார தடை விதிப்பதற்கு உகந்தவர்கள் என்று அமெரிக்க நிதித்துறை பட்டியலிட்டுள்ளது.

 

 • எரித்ரியா நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

 

 • உலக அளவில் மொத்த சொத்துகளின் அடிப்படையில் நியூ வேர்ல்டு வெல்த் என்னும் நிறுவனத்தின் அறிக்கையின் படி பணக்கார நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் 1, 2, 3வது இடத்தில் உள்ளது

 

 • நீதிபதிகளுக்கு 200 சதவீதம் சம்பளம் உயர்வு(ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி) அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

 

 • இந்தியாவில் ‘தூக்கு தண்டனை விதிக்கப்படுவது 2017-இல் 27 சதவீதம் குறைந்து விட்டது என தேசிய சட்ட பல்கலைக்கழகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது

 

 • குடியேற்றச் சோதனை அவசியம் என்ற வகையில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு ஆரஞ்சு நிறத்தில் கடவுச்சீட்டுகளை(பாஸ்போர்ட்) வழங்குவது என்ற தனது முடிவை கைவிடுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

 • டெல்லி மாநகராட்சி, சாலைகள், தெருக்களில் கார் நிறுத்துபவர்கள் இனி மாநகராட்சியில், கட்டணம் கட்டி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற புதிய நடைமுறையை அமல்படுத்தவுள்ளது

 

 • அஞ்சலக ஊழியர்களுக்கு புதிய சீருடையை(யூனிபார்ம்) மத்திய தொலை தொடர்பு துறை இணை அமைச்சர் மனோஜ்சின்கா அறிமுகப்படுத்தினார்

 

 • அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பொதுசுகாதார பள்ளி ஆய்வு நடத்தியது. இதில் இந்தியா முழுவதும் நீரிழிவு நோயால் சுமார் 6 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது

 

 • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பலான ‘கரஞ்ச்’ நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் மும்பையில் நடைபெற்றது

 

 • நடிகர் மோன்லால் மற்றும் தடகள வீராங்கனை பி.டி உஷா ஆகியோருக்கு கோழிக்கோடு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் போட்டியில் சரத் கமல்(தமிழகம்) 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்

 

 • ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 21வது காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 27 பேர் (வீரர் மற்றும் வீராங்கணைகள்) கலந்து கொள்கின்றனர்

 

 • ஆடவருக்கான ஆசிய ஹாக்கி தொடர் மஸ்கட்டில் அக்டோபர் மாதம் துவங்கும் என்று ஆசிய ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது

 

 • டெல்லி டேட்டெவில்ஸ் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக சுபாதிப் கோஷ்(அசாம் மற்றும் ரெயில்வெஸ் முதல் தர வீரர்) நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • ஆஸ்திரேலியாவில் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்று புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது

 

புதிய நியமனம்

 

 • சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் (சிபிசிஎல்) புதிய இயக்குநராக ஜி.அரவிந்தன்(சிபிசிஎல் – முதன்மை பொது மேலாளர்) நியமிக்கப்பட்டுள்ளார்

 

வர்த்தக செய்திகள்

 

 • சர்வதேச தோல் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது

 

 • எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி வரியில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது

 

 • பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையில், எல்.ஐ.சி நிறுவனம் 60 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது

 

 • நாடு முழுவதும் வங்கி, காப்பீடு விமான நிறுவனங்கள் போன்றவற்றுக்கு ஒரே ஜிஎஸ்டி பதிவு நடைமுறையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

 • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூன்றாம் காலாண்டில் 78.83 பில்லியன் டாலர் நிகர லாபம் பெற்றுள்ளது

 

 • எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 21 சதவீதம் அதிகரித்துள்ளது

 

 •  எமிரேட்ஸ் விமான நிறுவனம் 1,600 கோடி டாலர் மதிப்பில் 36 ஏர் பஸ் ஏ380 ரக விமானங்களை வாங்கவுள்ளது

 

இறப்பு செய்தி

 

 • கம்ப்யூட்டரில் தமிழ் எழுத்துருக்கள் மற்றும் மாற்றிகளை உருவாக்கி தந்தவர்களில் ஒருவரான கோபி(தர்மபுரி) காலமானார்

 

 

English Current Affairs

 National News

 • On 29th Jan 2018 Airports Authority of India (AAI) chairman. Guruprasad Mohapatra said that AAI has allocated 3400 crore for up gradation of airport in the North East region.

 

 • The Department of Presonnel and Training (DOPT) has issued an order to provide quota in Central Government jobs to people with autism mental illnesses, intellectual disability and victims of acid attacks.

 

 • Sammakka Saaralamma Maha Jathara, a tribal festival will begin on 31st Jan 2018 in Eturunagaram, Telangana.

 

 • Indian Coast Guard conducted a ‘Day at Sea’ event for children of fishing hamlets at Frazerganj in South 24 parganas district, West Bengal as part of its initiative for close interaction with the fishing community of coastal areas.

 

 • 19th India International watch and clock Fair “Samaya Bharati 2018” was held in

 

 • Uttar Pradesh CM Yogi Adityanath inaugurated the Mahesra Bridge at Sonauli – Gorakhpur National Highway

 

 • The Jammu and Kashmir Government has formed a committee to study the scope and definition of horticulture in Government of India and other States. The Committee is headed by the Chief Secretary of Jammu Kashmir Bharat Bhushan Vyas.

 

International Affairs

 • According to a report by new world Wealth India is sixth wealthiest country with total wealth of USD 8230 billion.

Top 5 Wealthiest Countries

 • US ($64584 billion)
 • China ($24803 billion)
 • Japan ($19522 billion)
 • UK ($9919 billion)
 • Germany ($9660 billion)

 

Banking and Finance

 • Paytm partners with Alibaba’s AGTech Holding to launch gaming app Gamepind in India, a mobile platform offering social and casual games.

 

 • Axis Bank launched the fourth edition of ‘Evolve’ and annual multi – city knowledge series for its Small and Medium Enterprise (SME) customers The edition Evolve has been titled “transform Your Family Business” into your dream company.

Business

 • Infosys signs MOU with Kailash Satyarthi children’s Foundation for a grant to create a child friendly village improving children’s health, providing education and creating a non – violent environment

 

 • Renault Nissan Mitsubishi automakers alliance has overtaken Volkswagen as the world’s biggest seller of light Vehicle in 2017.

 

 • As per a report by World Steel Association India has overtaken the US to become the world’s third largest crude steel producer.

 

Awards

 • Mohanlal lal – Malayalam actor and T. Usha were awarded honorary Doctorate of Literature (D. Litt) by Kerala Governor and Calicut University chancellor P. Sathasivam in Kozhikode

 

 • Vinod Paul, Member of NITI Aayog has been conferred the Ihsan Dogramaci family health foundation prize by the WHO

 

Science and Technology

 • Delhi Lieutenant Governor Anil Baijal launched the ‘311 app’ at the Raj Niwas which aims to increase involvement of citizens in resolving grievances and improving civic services in Delhi.

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube