September 30

Date:30 Sep, 2017

September 30

We Shine Daily News

தமிழ்

செப்டம்பர் 30

தேசிய செய்திகள்

 

 

 

 • தமிழகத்தின் புதிய மற்றும் முழு நேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • லக்கோ(உத்தர பிரதேசம்) – சாலைகளில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு ரூபாய் 50000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாக அதிகாரி உதயராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

 

 • இரயில் விபத்துக்களைத் தடுக்க இஸ்ரோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

 • ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியைக் கண்டுபிடிக்க புதிய நடைமுறையை (மாவட்ட அலுவலங்களில் இருந்து ஊழியர்களின் சான்றிதழ்களின் நகல் தேர்வு துறைக்கு அனுப்பப்படும் தேர்வுத் துறை அதிகாரிகள் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து சான்றிதழ் வழங்குவர்) தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

 

 • தமிழகத்தில் ஹிந்தி எதிர்பால் துவக்க முடியாமல் முடங்கி கிடந்த நவோதயா பள்ளிகள் 30 ஆண்டுகளுக்கு பின் தொடங்கப்பட உள்ளது. இதற்கான தடையில்லா சான்றிதழை நவம்பர் 20க்குள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

 • திருமண பதிவுக்கு மணமக்கள், பெற்றோர், சாட்சிகளின் ஆதார் அட்டையையும் ஆவணமாக்க தமிழக அரசு அதிகாரபூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

 • நடிகர், இயக்குநர் மற்றும் எழுத்தாளரும் பத்ம ஸ்ரீ விருது வென்றவருமான “டாம்அல்டொ” (வயது 67) இன்று(செப்டம்பர் 30) இன்று காலமானார்

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 • 40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது

 

 • ஈராக் அரசை எதிர்த்து : தனி நாடு கோரி குர்திஸ்தான் மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்தினர். இதன் காரணமாக அப்பகுதிக்கு செல்ல வேண்டிய மற்றும் அங்கிருந்து வெளியேற வேண்டிய சர்வதேச விமானங்களை ஈராக் ரத்து செய்தது.

 

 • இலங்கையில் முதலாவது மும்மொழி தேசிய பள்ளிக்கூட பணிகளை அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (செப்டம்பர் 29) தொடங்கி வைத்தார்.

 

 • சவுதி அரேபிய அரசுக்கான பிரதான ஆலோசனைக் குழு “ஃபத்வா” என்ற சமய தீர்ப்பை பெண்கள் வழங்குவதற்கு முதன் முறையாக உரிமை வழங்கியுள்ளது.

 

 • இந்தோனிஷியாவின் பாலித் தீவில் உள்ள ‘ஆகங்’ என்ற எரிமலை 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெடிக்கும் நிலையில் உள்ளது.

 

 • நிதி சேவைகள் நிறுவனமான Allianz 2016ம் ஆண்டிற்கான உலகின் பணக்கார நாடு பட்டியலை வெளியிட்டது. இதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

 

 • “ரெண்ட் கேப்” ஆன்லைன் இணையதள நிறுவனம் (அதிக பணம் பெற்று கொண்டு குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும்) மோசமான நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இஸ்தான்புல்(துருக்கி) முதலிடத்தில் உள்ளது.

 

 • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சூரியனை ஆராய “Parker Solar Probe” என்ற விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

 

 • Oxford, Munster மற்றும் Exeter பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையைப் போல செயற்படக் கூடிய மைக்ரோ சிப் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

 

 

 • வெள்ளைநிற ஒட்டகச்சிவிங்கி (கென்யா) வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது. “லியூசிசிம்” எனும் நிறமி காரணமாக விலங்குகளில் சில இவ்வாறு முழுவதும் வெள்ளை நிறத்தை பெறுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 • பிரெக்ஸிற் தேர்தலுக்குப் பின் அயர்லாந்தின் இரட்டைக்குடியுரிமையை பெற்றுக் கொள்ள முனையும் பிரத்தானிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆடையில் உள்ள ஸ்டார்கள் இதுவரை இந்திய அணி 3 முறை உலக கோப்பையை (1983, 2007 (டி20), 2011 (50 ஓவர்) )வென்றுள்ளது என்பதை குறிக்கிறது

 

 • இந்தியாவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

 

 • வெஸ்ட் இண்டீஸ்சுக்கு எதிரான 5வது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

 

 • ஐல் ஆப் மேன் செஸ் தொடரின் 6வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், விதித் சந்தோஷ், சுவப்னில் ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.

 

 • டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் ஆசிஸ் தொடர் மிகவும் பிரபலமானதாகும். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடர் நவம்பர் 23ம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 7ம் தேதி வரை நடக்கிறது.

 

 • சென்னையில் புரோ கபடி போட்டி இன்று (செப்டம்பர் 30) தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • ICICI வங்கி வீட்டுக் கடன் வசதியில் கேஷ் பேக் (உதாரணமாக : 30 லட்சம் ரூபாய் கடனை 30 மாதத்தில் திருப்பிச் செலுத்தும் நபருக்கு மாதம் தலா 1 சதவீதம் மொத்த காலத்தில் ரூ 801 சேமிக்கப்படுகிறது) சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது

 

 • ஜிஎஸ்டி தொடர்பான மறு ஆய்விற்காகவும் புதிய வரி விதிப்பின் செயல் பாடுகள் குறித்தும் ஏற்றுமதி வர்த்தகர்களை மத்திய நிதி அமைச்சர் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்தார்.

 

 • முதலாம் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி சரிவு, சில்லரை பணவீக்கம் உயர்வது உள்ளிட்ட காரணங்களால் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்காது என இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • நீர்மின் உற்பத்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ள பொதுத் துறையைச் சேர்ந்த என்ஹெச்பிசி நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்ட அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

 

 • ஆர்ஜியோ நிறுவனம் 1500 ரூபாய் டெபாசிட்டில் ஆர்ஜியோ பியூச்சர் போன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பின் இந்த போனை ஒப்படைத்து டெபாசிட்டை திரும்பப் பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

 

 

 

Current Affairs

 

 

National News

 

 • Centre examining report on new laws to deal with hate speech on internet. 

 

 • Nirmala Sitharaman inaugurated Pratham Shyok Bridge that will link leh to Karakoram.

 

 

 

International News

 

 • China has announced commissioning its first radar evading J – 20 stealth fighter Jets.

 

 • Saudi Arabia allows women to issue fatwa, following a vote in Saudi’s advisory Council.

 

 

Economy

 

 

 • Gout keeps interest rates unchanged on small saving scheme for Q3.

 

 

Appointment

 

 • President Ram Nath Kovind appoints five new governors for States and Lieutenant Governor for Andaman.
  • The appointments are
  • B.D.Mishra – Governor of Arunachal Pradesh
  • Banwarilal Purohit – Governor of Tamil Nadu.
  • Satya Pal Malik –  Governor of Bihar.
  • Jagdish Mukhi – Governor of Assam
  • Ganga Prasad  – Governor of Meghalaya.

 

 • Devendra Kumar Joshi – Lieutenant governor of Andaman and Nicobar Island

 

Obituary

 

 

 • Padma Shri Awardee and Veteran film actor Tom Alter has passed away

 

Call Now