September 25

Date:25 Sep, 2017

September 25

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 25

                                          தேசிய செய்திகள்

 

 

 • மத்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) தலைவராக ராஜிவ் மெகரிஷி இன்று(செப்டம்பர் 25) பதவியேற்றார்.

 

 • மொபைல் போனில் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

 

 • அக்டோபர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வளர்ச்சி, தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்

 

 • உர விற்பனையின் முறைகேட்டைத் தடுக்க மற்றும் விவசாயிகள் தேவைக்கு அதிகமாக உரம் வாங்கி வெளி சந்தையில் விற்பதைத் தடுக்கவும் ஒவ்வொரு விவசாயிக்கும் எத்தனை ஏக்கர் நிலம் இருக்கிறது, அந்த நிலத்தின் வளம் என்ன என்பதை ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் மண் வள அட்டை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • சென்னையில் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து பகுதிகளிலும் தானியங்கி சிக்கல்களை அமைக்க மற்றும் விதிமீறல் வாகனங்களை அடையாளம் காண முக்கிய சாலைகளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

 • அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக 1000 தேர்வு மையங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்படும். நீட் உள்ளிட்ட மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சி மையங்கள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து செயல்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

 • பொதுப்பணித் துறையில் இருந்து நீர் வளத்துறையை பிரித்து பிரத்யேக துறையாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

 • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள “தளி (பெரிய ஏரி)” 12 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியுள்ளது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

 

 • மெட்ரோ ரயில் சேவைக்காக (வண்ணார்ப் பேட்டை முதல் கொருக்குப் பேட்டை வரை) 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சுரங்கப்பாதை பணி நிறைவடைந்தது.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • ஜெர்மனில் நடைபெற்ற பொது தேர்தலில் தொடர்ந்து 4வது முறையாக ஏஞ்சலா மெர்கல் பிரதமர் ஆகிறார்

 

 • நியூசிலாந்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் (பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் மற்றும் கன்வல்ஜீத் சிங்) தேர்வு செய்யப்பட்டனர் 

 

 • மெக்சிகோவில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து அங்குள்ள “பொப்போகேட்பெட்டி” எரிமலை சாம்பலை கக்கியது. இந்த சாம்பல் மெக்சிகோவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 • ரோஹிங்கயா அகதிகளுக்கு செல்போன் மற்றும் சிம் கார்டுகளை விற்பனை செய்ய வங்கதேசம் தடை விதித்துள்ளது.

 

 • சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சாட், வடகொரியா மற்றும் வெனிசுலா ஆகிய 8 நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை விதித்துள்ளார்.

 

 • வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் விளையாட்டு அரங்கில் பெண்கள் முதல்முறையாக அனுமதிக்கப்பட்டனர். 

 

 • ஐக்கிய நாடுகளின் எச்சரிக்கையை மீறி குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை ஈரான் மேற்கொண்டது. இந்த சோதனை வெற்றியில் முடிந்து

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • பத்ம பூஷன் விருதுக்காக பிவி சிந்துவின் பெயரை விளையாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

 

 • ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

 

 • சிங்கப்பூரில் நேற்று (செப்டம்பர் 24) நடைப்பெற்ற “ஆசியன் பைட்டிங் சாம்பியன் ஷிப்” குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற பிரதீப் சுப்பிரமணியன்(தமிழர்) உயிரிழந்தார். 

 

 • பெல்ஜியம் ஜுனியர் ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி ரெட்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • அக்டோபர் 29ம் தேதி லக்னோவில் (உத்தரப்பிரதேசம்) நடைபெற இருந்த இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கான்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது என பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி தெரிவித்துள்ளார்.

 

 • மான் தீவில் (அயர்லாந்து) நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டி தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகா துரோணவள்ளி ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் டோனி ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெலை ஸ்டெம்பிங் செய்தார். இது இந்திய அணிக்கு டோனி செய்த 100வது ஸ்டெம்பிங் ஆகும்

 

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • விமான நிலையங்களில் பயன்படுத்தப் படாத விமான இடங்களை காலிசெய்து அதன் மூலம் செலவை குறைப்பதற்கு ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று நிர்வாக இயக்குநர் ராஜிவ் பன்சால் தெரிவித்தார்.

 

 • உலக அளவில் 2வது மிகப்பெரிய தொலைத் தொடர்பு சந்தையைக் கொண்ட நாடு இந்தியா. இந்த சந்தை இணையத்தளம் பயன்படுத்துவதில் உலகின் 2வது மிகப் பெரிய சந்தையாகும். ஸ்மார்ட்போன் பயன்பாட்டிலும் இந்தியா 2வது இடத்தை பெறுகிறது.

 

 • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஹாமர் நிறுவனம் பேட்டரி மோட்டார் சைக்கிளை வடிவமைத்துள்ளது.

 

 • சொகுசு பஸ் மற்றும் டிரக்கு உற்பத்தி : முன்னணியில் உள்ள ஸ்கானியா நிறுவனம் பெங்களுரில் பஸ் உற்பத்தியை தொடங்கியுள்ளது. பெங்களுர் நாசா பகுதியில் உள்ள நவீன ஆலை ஆண்டுக்கு 1000 பஸ்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்

 

 • டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனம் எடியோஸ் கிராஸ் எக்ஸ் எனும் புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • ரீடெல் துறையைச் சேர்ந்த ஷார்ப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் ரூ.179.29 கோடி முதலீடு செய்திருக்கிறது.

 

 

 

Current Affairs

 

National News

 

 

 • Government plans new project aiming a ‘lab on boat’ on Brahmaputra River for biological analysis of the river, Dibrugarh, Neemati, Tezpur and Guwahati in Assam  

 

 • The Indian coast Guard has commissioned two high speed interceptor boats C-433, C-434 fitted with a 12 .7 mm Machine Gun at Dighi Port in Mumbai   

 

 • India will host world congress on Adolescent Health, billed as the biggest global event. Theme : Investing in Adolescent Health the Future is Now’  

 

 • The Centre has extended the benefits of the interest subsidy Scheme on home loans under Pradhan Mantri Awas Yojana fill march 2019  
   

   

International News

 

 

 • Saudi Arabia allows women into Sports stadium for the first time to attend the Kingdom’s 87th National day celebration

 

 

 

Banking

 

 • NABARD – National Bank for Agriculture and Rural Development has sanctioned a loan of about Rs. 119 crore to construct seven bridges and improvement of one rural road project in five districts in Haryana 
   

   Sports

 

 • Kuldeep Yadav becomes 1st   Indian spinner to take hat – trick in ODIs  

 

 • East Bengal registered a record by winning 8th consecutive Calcutta football league title   

 

 • Indian Shuttler Vaishnavi Reddy has won the women’s singles U – 19 titles at the Belgian junior open after defeating top seed Vivien Sandorhazi at Herstal, Belgium  

   

   

   Appointment

 

 • India TV chairman and editor in chief Rajat Sharma has been appointment as the new president of the News Broad caster association 
   

   

   

 

Awards

 

 

 • Odia poet and Short Story writer Banaj Devi will be honoured with the 38th edition of prestigious Sarala award for her story “Kathapua” 

   

  Important days

   

 • World Rivers Day : 24 September
   

 

Obituaries

 

 

 • Assamese film icon Abdul Majid passed away  

 

 • Young Shuttler Niharendu Mallick passed away  

Call Now