September 23

Date:23 Sep, 2017

September 23

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 23

                                          தேசிய செய்திகள்

 

 

 • இந்தியாவில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட அதிநவீன நீர்முழ்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ்(ஆழ்கடல் டைகர் சுறா) கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

 • இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்(ஐஆர்சிடிசி) இணையதளம் மூலம் 7 வங்கிகளைச் சேர்ந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு மட்டுமே இரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று இரயில்வேத் துறை அறிவித்துள்ளது.

 

 • பி.எஸ்.எல்.வி. ராக்கெட், கடந்த மாதம் (ஆகஸ்ட்) விண்ணில் ஏவப்பட்டு தோல்வியில் முடிவடைந்த நிலையில் வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் மீண்டும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

 

 • இராமபிரான் வாழ்க்கையை விவரிக்கும் சிறப்பு தபால்தலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்டம்பர் 22) வாரணாசியில் வெளியிட்டார்.

 

 •  பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டப்படும் புதிய மருத்துவமனைகளுக்கு அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • உத்திரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை மேற்பார்வையிடுவதற்கு கூடுதல் மாவட்ட நீதிபதிகள் 2 பேரை(பாஸ்தி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி -“இர்பான் அகமது” மற்றும் பைசாபாத் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி- “அமர்ஜித் திரிபாதி”) அலகாபாத் நீதிமன்றம் நியமித்துள்ளது. 

 

 • இந்தியாவிலேயே சுற்றுலாத் துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவகிறது என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

 

 • தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மேம்பாட்டு திட்டம் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இணைந்து கள்ளக் குறிச்சியில் ஏழை இளம்பெண்களுக்கு இலவச கணினி, மொபைல்போன் பயன்பாடு மற்றும் பழுதுநீக்க பயிற்சி வகுப்புகளை தொடங்கியது

 

 • இராமேஸ்வரம் அருகே பாம்பன் சாலைப் பாளத்தில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் விதமாக சோலார் தானியங்கி சிக்னல்கள் பொருத்தப்பட்டன

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனையில் ஈடுபடும் வடகொரியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும், எண்ணெயை குறைக்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது

 

 • உலகத்தின் பல்வேறு இடங்களில் “ஊபர்” என்ற கால்டாக்ஸி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஊபர் நிறுவனத்துக்கு லண்டனில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • உலகின்மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் 14ம் இடத்தில் இருக்கும் லில்லியன் பெட்டென்கார்ட்(94) வயோதிகம் காரணமாக காலமானார் 

 

 • எயிட்ஸ் நோய்க்கு காரணமான எச்ஐவி வைரஸ் கிருமிகளை 99 சதவீதம் அழிக்கக்கூடிய மருந்து ஒன்றை அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வக மருத்துவ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

 

 • அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயற்படும் விண்வெளி ஆய்வு மையமான நாசா “குறைந்த விலையில் குறைந்த எடைக் கொண்ட தூசுப் படலங்களை கண்டறியும் சென்சார்” தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் நபருக்கு சுமார் 100,000 டாலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. (2018ம் ஜனவரி 31ம் தேதிக்கு முன்னர் சென்சாரை நாசாவிடம் ஒப்படைக்க வேண்டும்)

 

 • இந்தோனேசியாவின் பாலித் தீவில் உள்ள மிகப் பெரிய எரிமலை 50 ஆண்டுகளில் முதன் முறையாக வெடிப்புக்கு தயாராகி வருவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேறியுள்ளனர். இதுவரை 100க்கும் மேற்பட்ட சிறிய நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

 

 • உலகில் முதல் முறையாக துவங்கப்பட்ட வெப்துனியா போர்ட்டல் செப்டம்பர் 23 இன்று தனது 18வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

 

 • முதன் முறையாக பாரிஸின் அனைத்து பகுதிகளிலும் மகிழுந்துக்கு(கார்களுக்கு) தடை விதிக்கப்பட உள்ளது. இனி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ம் தேதி – “மகிழுந்துக்கள்(கார்கள்) இல்லாத நாளாக அனுசரிக்கப்படும்”

 

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நவம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் ஆட்டத்தில் “அட்லெடிகோ டி கொல்கத்தா” அணியும் “பிளாஸ்டர்ஸ் கேரள” அணியும் மோதுகின்றனர். இந்த ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறும்

 

 • உலக பேட்மின்டன் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பி.வி. சிந்து இரு இடங்கள் முன்னேறி 2வது இடத்தில் உள்ளார்.

 

 • இந்தியாவில் முதல் முறையாக அக்டோபர் 6ம் தேதி 17  வயதிற்குட்பட்டோருக்கான இளையோர் உலகக் கோப்பை கால்பந்து தொடங்குகிறது.

 

 • நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

 

 • தென்னிந்திய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்துப் போட்டி ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இன்று(செப்டம்பர் 23) தொடங்குகிறது.

 

 • ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான தில்லி அணியின் கேப்டனாக இருந்த கௌதம் கம்பீர் தனது பதவியை நேற்று(செப்டம்பர் 22) ராஜினாமா செய்தார். 

 

 • இந்தியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் “பேட் கம்மின்ஸ்” விலகியுள்ளார்.

 

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • மும்பையில் நடைபெற்ற 70ம் ஆண்டு பொதுக் கூட்டத்தில், வங்கிகளுக்கு தேவையான முதலீடுகளை அளிப்பதற்கான ஆதாரங்களை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

 

 • நாட்டின் மிகப்பெரிய எப்எம்சிஜி நிறுவனமான டாபர் இந்தியா நிறுவனம் தனது ஆயுர்வேத பொருட்களை ஆன்லைனில் விற்பதற்காக அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

 • ஆதித்ய பிர்லா குழுமம் தனது “அபோப் டாட் காம்” இ-காமர்ஸ் நிறுவனத்தை மூட திட்டமிட்டுள்ளது. 

 

 • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைந்த 6 துணை வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது எனவே வாடிக்கையாளர்கள் “இந்திய பினான்சியல் சிஸ்டம்” (IFS) கோட் கொண்ட புதிய காசோலைப் புத்தகத்தை பெற்றுக் கொள்ளுமாறு எஸ்பிஐ அறிவித்துள்ளது

 

 • ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் 2020ம் ஆண்டு வரை (6 மாதத்திற்கு ஒரு முறை) புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது என்று அந்நிறுவனத்தின் இலகு ரக வர்த்தக வாகன விற்பனைப் பிரிவின் தலைவர் நிதின் சேத் தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் அதிகரித்துள்ளது என உலக உருக்கு கூட்டமைப்பு அறிக்கையில் தெரிய வருகிறது.

 

 • மத்திய அரசு : நாட்டின் பொருளாதார மந்த நிலையை கருத்தில் வைத்து (ரூபாய் 50000 கோடி) ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து பரீசிலித்து வருகிறது.

 

 

 

Current Affairs

 

 

National News

 

 • India dreams for high horse power locomotive moved closer to reality with the arrival of the first body shell of 12000 Hp loco from Alstom France at Kolkata port 
 • Himachal Pradesh first hill state in the country to run electric busses from Manali Rohtang highway

 

 • Union Textiles Minister Smirti Irani inaugurated the 6th edition of the four – day International textile and apparel fairVASTRA” in Jaipur

 

 • Recently – released black comedy film ‘Newton starring “Rajkumar Rao” is India’s official entry to the 90th Academy Awards ceremony

 

 

Inter National News

 

 • Fifty countries have signed a treaty to ban nuclear weapons, a pact that the world nuclear powers Spurned but Supporters hailed as a historic agreement

 

 • China re – launches ‘The World’s fastest Bullet Train’ Fusing between Beijing and Shanghai

 

 • Scientist create world’s firstMolecular Robot’ to Build new drugs

 

 

Banking & Finance

 • SBI card, the second  largest credit card selling company is all set to offer pre – approved cards to Customers to its parent State Bank of India

 

 • Fino payment Bank launchers mobile Banking app called Bpay

Call Now