September 22

Date:22 Sep, 2017

September 22

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 22

                                          தேசிய செய்திகள்

 

 

 • மத்திய அரசு ஊழியர்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு விடுமுறை கால சலுகை வழங்கப்படுகிறது. தற்போது விடுமுறை கால பயணத்தின் போது தினப்படி வழங்கப்பட மாட்டாது என்று பணியாளர் நலன், பயிற்சி துறை உத்தரவிட்டுள்ளது.

 

 • உத்தர பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

 

 • மேற்கு வங்காளத்தில் துர்கா சிலைகளை கரைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 • கேரளாவில் முதல் பெண் டி.ஜி.பி.-யாக சிறைச்சாலை இயக்குநர் ஸ்ரீலேகா பதவி ஏற்க உள்ளார்.

 

 • தமிழக அரசின் தொழலக பாதுகாப்பு துறை இயக்குனராக காளியப்பன் பொறுப்பேற்றார்.

 

 • தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 6 ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த ஆண்டு(2017) முதல் “கனவு ஆசிரியர்” என்ற விருது மற்றும் ரூபாய் 10000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

 

 • வேலை நிறுத்தத்தில்(ஜாக்டோ–ஜியோ) ஈடுபட்ட அரசு ஆசிரியர்களின் சம்பளத்தை பிடிக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

 

 • தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு(2017) 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டது.

 

 • தமிழகத்தில் மதுரை மாவட்டம் மேலூரில் “டிஜிட்டல் ஆல்” திட்டம்(கிராம மக்களுக்கு இணையதளம் மூலமாக கணினி பயன்பாடு, இணைய தேடல்கள், இமெயில் பயன்பாடு, ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்குதல்) இன்று(செப்டம்பர் 22) தொடங்கப்பட்டது.

 

 • 1914ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி (இன்று) சென்னை கோட்டையை ஜெர்மனை சேர்ந்த “எம்டன்” போர்கப்பல் தாக்கிய தினம்

 

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • வடகொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதால் ஐ.நா சபை அணு ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் புதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தியது. இதில் 50 நாடுகள்(தாய்லாந்து, வாடிகன், அயர்லாந்து,அல்ஜீரியா போன்ற நாடுகள்) கையெழுத்திட்டுள்ளன. இருப்பினும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

 • உலகின் அதிவேக புல்லட் இரயில் சேவையை பிஜீங் – ஹாங்காய் இடையே சீனா தொடங்கி வைக்கிறது. மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த புல்லட் இரயிலின் வாழ் நாள் 30 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • நியூயார்க்கில் நடைபெற்ற புளும்பெர்க் சர்வதேச வர்த்தக மாநாட்டில், உலக வங்கி தலைவர், ஜிம் கிம் இந்த ஆண்டு(2017) சர்வதேச பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பொருளாதாரம் சிறந்த முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பாராட்டியுள்ளார் 

 

 • இங்கிலாந்தில் நுரையீரல் புற்றுநோய் உள்ள நோயாளிகளுக்கு வாழ்நாளை அதிகரிக்க செய்யும் “நிவலூமாப்(nivolumab)” என்னும் மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்து சிறுநீரக புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோயின் பொதுவான வகைகள் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

 

 • உலகில் வாழும் 100 மிகப்பெரிய தொழில் அதிபர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இதில் இந்தியாவை சேர்ந்த 3 பேர்(ரத்தன் டாடா, லஷ்மி மிட்டல், வினோத் கோஷ்லா) இடம்பெற்றுள்ளனர்

 

 • இலங்கை ஒரே நாடாக இருக்க வேண்டும் என்ற புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சி குழுக்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரின் குறைகள் தீர்வு காணப்படும் என்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

 

 • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ லூயிஸ் டா கோஸ்டா ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

 • மியான்மரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரத்தில் வலுவான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். 

 

 • ஈராக்கிலிருந்து பிரிந்து சுதந்திர நாடு கோருவது தொடர்பாக, குர்து மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று ஈராக், துருக்கி ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

 

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

 

 • துனிசியா(வட ஆப்பிரிக்கா) நாட்டில் அடுத்த மாதம் துவங்கவுள்ள மினி புட்பால் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடுவதற்கு ஊட்டியை (தமிழகம்) சேர்ந்த நார்தே குட்டன், நாஸ்முடி குட்டன் மற்றும் தருண்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

 • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் வலு தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை நிவேதா(சேலம்) 8 தங்கப் பதக்கங்களை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

 

 • ‘சைனாமேன்’ வகை பவுலரான இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஆட்டத்தில் “26 ஆண்டுகளுக்கு பிறகு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்” என்ற சாதனைப் படைத்துள்ளார்.

 

 • ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றும் பிரணாய் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • செயின்ட் பீட்டர்ஸ்பர்க்(ரஷ்யா) ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ் – பூரவ் ராஜா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது

 

 • விப்ரோ சென்னை மாரத்தான் போட்டி வரும் டிசம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது.

 

 • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் செப்டம்பர் 24ம் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது.

 

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • மத்திய வர்த்தக அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட “கேபக்ஸில்” ஏற்றுமதி முன்னேற்ற நிறுனவத்தின் தலைவராக தொழிலதிபர் ஜெம் வீரமணி தேர்வு செய்யப்பட்டார்

 

 • தைவானை சேர்ந்த ஹெச்டிசி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவை கூகுள் நிறுவனம் வாங்கியுள்ளது. 

 

 • தமிழகத்தில் 114 கிளைகளில் ஆதார் மையங்கள் அமைக்கும் பணியை இந்தியன் வங்கி மேற்கொண்டு உள்ளது

 

 • தோல் பதனிடும் முறையால் ஏற்படும் மாசுபாடுகளைக் குறைப்பதற்கு மத்திய தோல் ஆய்வு மையம்(சிஎல்ஆர்ஐ) புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தொழில்நுட்ப உரிமத்தை என்எஸ் எகோ சொல்யூஷன்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.

 

 • தனியார் முதலீட்டில் குறைந்த விலை வீடுகள் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் ரூ.2.50 லட்சம் வரை மத்திய அரசு உதவி செய்ய உள்ளது

 

 • ஹீரோ மோட்டார்ஸ் கம்பெனி மற்றும் ஜப்பானைச் சேர்ந்த கிரியு கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் திட்டத்தின் கீழ் ‘முஞ்ஜால் கிரியு இண்டஸ்ட்ரீஸ்” என்று புதிய ஆலை குஜராத்தில் அமைக்கப்பட்டது.

 

 

Current Affairs

 

National News

 

 • India collaborating with Russia to build the Rooppur nuclear power plant in Bangladesh the first Initiative under a Indo- Russia deal to undertake atomic energy projects in Three countries.

 

 • Andhra Pradesh chief minister N. Chandrababu Naidu declared that the year 2017 as e-Pragathi year

 

 

International News

 

 • WHO grants 175,000 USO for Rohingyas health care

 

 • The US will provide a humanitarian aid package worth $32 million to the Rohingya Muslim minority who have fled violence in Myanmar and crossed into neighboring Bangladesh.

 

 

Economy

 

 • Union Minister Nitin Gadkari has announced that the government is hopeful that the strategic chabahar port in Iran will be operational by the end of 2018.

 

 • India replaced China as top retail destination in 2017 as the part of the global retail development index, according to a study.

 

 • UN Secretary – General Antonia Guterres said that India ranked third among the countries that have faced the most natural disaster in the last half century.

 

 

Business

 

 • According to revised estimates published by the WTO, global Merchandise trade is expected to grow at a higher 3.6 %  in 2017.

 

 • Thyssenkrupp AG and Tata Steel Limited Ltd, reached a tentative deal to merge their European steel business in a bid to create the region’s second largest producer.

 

 

Sports

 

 • Asia Road Racing championship to start in Chennai, Tamil Nadu

 

 • Official slogan and Emblem of FIFA women’s World Cup France 2019. The tournament “Dare to Shine”

 

 

Appointment

 

 • B Samba Murthy Appointed as National Payments Corporation of India (NPCI)

 

 • Brazil gets first female prosecutor – general

 

Important Days

 

 • World Alzheimer’s day – 21 September. Theme : “Remember me”

Call Now