September 21

Date:21 Sep, 2017

September 21

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 21

                                          தேசிய செய்திகள்

 

 

 

 • வங்காள தேசத்தில் ரோப்புர் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது என்று அணுசக்தி ஆணையத்தின் தலைவர் சேகர் பாசு கூறியுள்ளார்.

 

 • சபரி மலையில் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க விமான நிலையம் அமைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டது. இதையடுத்து இத்திட்டத்திற்கு ஆலோசகர் ஒருவரை கேரள மாநில அமைச்சரவை நியமித்துள்ளது.

 

 • சென்னை அருகே பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக ஜெய்ந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

 

 • விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தை மத்திய அரசு சேர்த்துள்ளது. 2020ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாய் இரு மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 • 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல் பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுபிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் 3-10ம் வகுப்பு வரை கணினி பாடம் கட்டாயமாக்கப்படும்

 

 • தமிழகத்தில் டிசம்பருக்குள் ஒரே நாளில் இடைத் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

 

 • சென்னை சென்ட்ரல் உள்பட, ஆறு இரயில் நிலையங்களில், முன்பதிவு பட்டியலை ஒட்டும் நடைமுறை விரைவில் கைவிடப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக இரயில்வேயில் நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன என தெற்கு இரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

 • பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பணிக்கு வராத நாட்களுக்கான சம்பளத்தை பிடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அரசு பணியாளர் நடத்தை விதிகளில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

 

 • வீடு மாறி செல்வோர் மற்றும் பல்வேறு காரணங்களால் வெளியூர் செல்வோர் எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை தொடங்க உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

 

 • உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கில் ஈடுபட தொழில்நுட்பக் குழுத் தலைவராக சுப்ரமணியனை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

 

 • பொன்னேரி அருகே உள்ள பஞ்செட்டி வேலம்மாள் தொழில் நுட்பக் கல்லூரியில் இனாவேட் 2017 மற்றும் ரொபாடிக்ஸ் (இயந்திரவியல்) 2017 கண்காட்சி மற்றும் போட்டிகள் அக்டோபர் 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறுகின்றன. இந்த கண்காட்சியில் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், தெலுங்கானா, ஆந்திரம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த மாணவ மாணவியரும் கலந்து கொள்கின்றனர்.

 

 • தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அளிக்கப்படும், நடப்பாண்டு முதல் மாணவர் கலைத் திருவிழா நடத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • அமெரிக்க செனட் சபையில் 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள 2018ம் ஆண்டிற்கான பாதுகாப்பு செலவின மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் இந்தியாவிற்கு முன்னுரிமையும், பாகிஸ்தானிற்கு நிபந்தனையுடன் கூடிய நிதியுதவியும் இடம் பெற்றுள்ளன.

 

 • சீனாவில் “கைஸொவ்” மகாணத்தில் உள்ள “சான் டா யா” என்ற மலை உள்ளது. அந்த மலை 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை முட்டை வடிவில் கற்கள் வெளியேற்றுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

 • வாட்ஸ் அப், ஸ்கைப் போன்ற இன்டர்நெட் அழைப்பு அப்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்திருந்தது தற்போது அந்த தடையை நீக்கியுள்ளது.

 

 • பிரிட்டன் – சவுதி அரேபியா இடையே பாதுகாப்பிற்கான இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

 

 • சிங்கப்பூரில் குழந்தைகள் கற்பதற்கு உதவும் வகையில் மழலையர் பள்ளிகளுக்கு முன் கற்களால் செய்யப்பட்ட ரோபோ பொம்மைகள் வைக்கப்படுள்ளது

 

 • மனிதாபிமானம் அடிப்படையில் வடகொரியாவுக்கு 8 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்பட உள்ளது என தென் கொரியா அரசு தெரிவித்துள்ளது.

 

 • பருவநிலை மாறுபாடு பிரச்சனையை சமாளிக்க ஐ.நா.வில் பாரீஸ் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. சுற்றுசூழலைப் பாதுகாக்க இந்த ஒப்பந்தத்தை விட அதிகமாக செயல்படுவோம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஐ.நா வில் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து சர்வதேச சோலார் கூட்டணியை உருவாக்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • கலை, இலக்கியம், விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த (2017) ஆண்டிற்கான பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் சிபாரிசு செய்துள்ளது.

 

 • இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

 

 • ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் சாய்னா மற்றும் பி.வி. சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.

 

 • இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று(செப்டம்பர் 21) இன்று தொடங்குகிறது.

 

 • பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீஃபுக்கு 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • 28வது தென் மண்டல ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 16 வயதிற்குட்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கணை தபிதா தங்கப்பதக்கம் வென்றார்

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • ஜிஎஸ்டியின் கீழ் வரிதாக்கல் : ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 80000 ஜிஎஸ்டிஆர் – 3பி வரித்தாக்கல் படிவங்கள் ஆன்லையன் மூலமாக பதிவேற்றப்பட்டு வருவதாக ஜிஎஸ்டிஎன் தலைவர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்

 

 • தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் சர்க்கரை விலை உயராது என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

 

 • பங்கு பரிவர்த்தனை ஒழுங்குமுறை அமைப்பான செபி 114 நிறுவனங்கள் மீது பங்கு வர்த்தகம் மூலம் வரி ஏய்ப்பு செய்வதாக குற்றம் சாட்டி, செயல்பாட்டுக்கு தடை விதித்திருந்தது தற்போது அந்த தடையை நீக்கியுள்ளது.

 

 • இந்தியாவின் மிகப் பழைமையான தனியார் வங்கி சேவை அளிக்கும் நிறுவனமான தமிழ்நாட்டைச் சேர்ந்த லெட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட் (எல்.வி.பி) இன்று(செப்டம்பர் 21) முதலாவது ஆதார் பதிவு மையத்தைத் திறந்துள்ளது. மேலும் செப்டம்பர் இறுதிக்குள் 54 ஆதார் பதிவு மையங்களை திறக்கத் திட்டமிட்டுள்ளது.

 

 • மேட்ரிக்ஸ் என்ற தொழில்நுட்ப நிறுவனம் தற்போது ஆதார் பயோமெட்ரிக் சாதனத்துடன் தொலைத் தொடர்புத்துறை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஒன்றிணைக்கும் விதமான புதிய கருவியை வெளியிட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப கருவியின் மூலமாக ஆதார் உடன் முழு விவரங்களும் ஒன்றிணைக்கப்படும்

 

 • நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதம் சரிவடைந்ததை அடுத்து வளர்ச்சியைப் பெருக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

 • மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் துருக்கியைச் சேர்ந்த எர்குந்த் குழுமத்தின் டிராக்டர் மற்றும் பவுண்டரி பிரிவை கையகப்படுத்தியுள்ளது.

 

 

Current Affairs

 

National News

 

 

 • Cabinet approved the revamped Khelo India programme at a cost of Rs.1756. Cr for the period of 2017-18 to 2019-20.

 • Public Grievances and pensions Dr. Jitendra Singh inaugurated the “first pension Adalet” and a pension app for Central govt. employees in New Delhi.

   

   

 • India and Sri Lanka signed a MOU to upgrade Thondaman Vocational Training Centre at Hatton located in Nuwara Eliya district of Sri Lanka

   

   

 • India’s National Disaster Response Force (NDRF) is going to conduct a first BIMSTEC disaster management exercise in New Delhi.

   

   

 • Three state rap PSUs (National Aluminium Company (Nalco), Hindustan Copper (HCL) and MECL) signed a MOU to form Khanij Bidesh India Ltd.

   

   

 • Andhra Pradesh CM (Naidu) has released ‘People first’ mobile application for grievance redressal in Vijayawada Undo this app, people of Andhra Pradesh can dial 1100 to register complaints  

   

   

 • Deputy CM of Bihar (Sushil Kumar Modi) launched the “Bandhan app” to create awareness on resisting child. Marriage and will also provide aloha Scent girls saying no to the practice in the form of a sos button.

   

   

   

  International News

   

 • The world’s Biggest wealth fund Norway’s Sovereign wealth fund has reached the value of $1 trillion

   

   

   

Banking and Business

 

 • Peer-to-peer landing (P2P) platforms will be treated as Non Banking Financial Companies (NBFCs) and will be regulated by RBI

   

   

 • Three Indian entrepreneurial legends, Ratan Tata, Lakshmi Mittal and Vinod Khosla have been included in Forbes list of world’s “100 Greatest Living Business Minds

   

  Sports

   

   

 • India won gold at 5th Asian Indoor and Martial Arts Games with Lashmanan and P.U. Chitra in their respective events

   

   

   Appointments

   

   

 • Sanjeev Kapoor is brand ambassador for Food Street at the forthcoming world food India event

   

   

   

  Awards

   

   

 • Zannah Mustapha a Nigerian lawyer who helped  more than 100 schoolgirls kidnapped by Boko Haram was awarded the UN’s top prizes – UN peace prize

   

   

Call Now