September 20

Date:20 Sep, 2017

September 20

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 20

                                          தேசிய செய்திகள்

 

 

 

 • பிரதமர் அலுவலகத் துறையின் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் முதன்முறையாக பென்ஷன் ஆதாலத்தை நாளை(செப்டம்பர் 21) தொடங்கி வைக்கிறார். மேலும் பென்ஷனர்களின் இணையதளத்தில் சேவைகளை பெறுவதற்கு ஒரு மொபைல் அப்பையும் தொடங்கி வைக்க உள்ளார்.

 

 • பணப் பயன்பாட்டு அட்டைகள் மற்றும் இவாலெட் ஆகியவற்றில் இருந்து பணத்தை நூதன முறையில் திருடும் இணைய வழி(சைபர்) குற்றங்களைத் தடுக்கும் விதத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

 

 • அரசு அதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளுக்கு உயர்த்தப்படும் போதும் பதவி உயர்வு அளிக்கப்படும் போதும் கடைசி கட்டத்தில் அவர்கள் மீது ஊழல் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று மத்திய ஊழல் கண்கானிப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது

 

 • இந்திரா காந்தி தேசிய கலைகளுக்கான மையம் (ஐஜிஎன்சிஏ) சார்பில் கர்நாடகா இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்பு லெட்சுமியின் பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் “குறையான்றும் இல்லை என்னும் தலைப்பில் எம்.எஸ். சுப்பு லெட்சுமியின் வாழ்க்கை மற்றும் இசைப்பயணம் குறித்த கண்காட்சி நேற்று(செப்டம்பர் 19) புது டெல்லியில் நடைப்பெற்றது. “கர்நாடக இசை உலகின் சகாப்தம்” என எம்.எஸ். சுப்பு லெட்சுமியை துணை குடியரசு தலைவர் புகழாரம் சூட்டினார்

 

 • தமிழகத்தில் கூடுதல் மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • பண்டிகைகளுக்காக அடுத்த 40 நாட்களுக்கு 4000 சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளதாக இரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

 

 • தமிழகத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய வகையில் பாடத்திட்டம் கொண்டு வர இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

 

 • சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நேற்று(செப்டம்பர் 19) ‘தூய்மையே சேவை’ திட்டத்தை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில் தேசிய அளவில் மனநல சேவையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று கூறினார்.

 

 • வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிபதிகள் அமர்வு முன்பு கோரிக்கையை வைக்க வேண்டும், மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகக் கூடாது என்று சென்னை உயர் நீதிமனறத்தின் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

 • தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு இரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று இரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • உலகின் நீளமான சறுக்கு சுரங்கம் லண்டனில் அமைந்துள்ளது.

 

 • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் டுவிட்டர் நிறுவனத்தின் செயலி தயாரிப்பில் மூத்த இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • டொமினிகாவை(ரோசாவ்) வலிமை வாய்ந்த “மரியா” புயல் தாக்கியது.

 

 • அமெரிக்க நாட்டில் தங்கி பணி செய்வதற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வழங்கப்படும் எச் – 1 பி விசா பற்றிய பரிசீலனை தொடங்கியது.

 

 • “பாரிஸ் பருவ நிலை மாற்றம்” ஒப்பந்தத்தை உலக நாடுகள் அமல் செய்ய வலியுறுத்திய ஐ.நா. பொதுச் செயலர் குட்டரேஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் இயற்கை சீற்றங்களால் மிகவும் பாதிக்கப்படும் மூன்றாவது நாடு இந்தியா என தெரிவித்துள்ளார்.

 

 • உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் உத்தரவை மீறி வடகொரியா செயல்படுவதால் உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டிலுள்ள வடகொரிய தூதர்களை வெளியேறுமாறு வலியுறுத்தி வருகின்றனர். தற்போது ஸ்பெயின் தங்கள் நாட்டிலுள்ள வடகொரிய தூதரை வெளியேறுமாறு கேட்டு கொண்டுள்ளது.

 

 • குறட்டை விடுவதை தடுக்கும் புதிய கருவியை(பெரிய அளவிலான புல்லாங்குழல்) சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களுக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில்(அமெரிக்கா) வைத்து ஐ.ஜி. நோபல் பரிசு (மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் சாதனைக்கு) வழங்கப்பட்டது.

 

 • கடலுக்கு அடியில் ஆக்டோபஸ்களின் நகரம் ஒன்றை “Alaska Pacific University” யை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • வங்க தேசம் சென்ற ரோஹிங்யா அகதிகளை திரும்ப ஏற்க தயார் என மியான்மர் தலைவர் ஆங் சான் சூ கீ தெரிவித்துள்ளார்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • பிரிட்டனைச் சேர்ந்த மார்க் பியோமாண்ட் என்பவர் சைக்கிள் மூலம் 79 நாட்களில் உலகத்தை வலம் வந்து புதிய உலக சாதனை(கின்னஸ்) படைத்துள்ளார்.

 

 • அஷ்காபாத்(துர்க்மேனிஸ்தான்) நகரில் 5வது ஆசிய உள்ளரங்க மற்றும் தற்காப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 3000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லெட்சுமணன் தங்கப்பதக்கம் வென்றார்.

 

 • 2007ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் “யுவராஜ் சிங்ஒரு ஓவரில் வீசப்பட்ட 6 பந்துகளையும் சிக்கஸராக அடித்தார். அத்தகைய சாதனையை 10 ஆண்டுகள் ஆகியும் இது வரை யாரும் நிகழ்த்தவில்லை 

 

 • ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் 8 இடங்கள் பிடிக்கும் அணிகள் மட்டும் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆட்டத்தில் விளையாட தகுதி பெறும். 2019ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றது. 

 

 • பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான இந்திய அணிக்கு அமர்ஜித் சிங் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

 • தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணி இடையிலான கிரிக்கெட் தொடர் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும்.

 

 • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக வெளிவரவுள்ளது.

 

 • ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணி சார்பில் சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து கலந்து கொள்கின்றனர்.

 

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • மொபைல் போன்களுக்கான அழைப்பு இணைப்பிற்கான கட்டணத்தை டிராய் குறைத்துள்ளது. 2020ம் ஆண்டு முதல் அழைப்பு துண்டிப்பிற்கு கட்டணம் இல்லை என டிராய் அறிவித்துள்ளது.

 

 • பெண் தொழில் முனைவோர் தங்களது தொழிலை மேலும் விரிவுப்படுத்தவும் புதிய பெண் தொழில் முனைவோருக்கு நிதி உதவி அளிக்கவும் ரூ.160 கோடி முதலீட்டில் நிதியம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது என்று முதலீட்டு நிபுணர் சீமா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

 

 • மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ஓட்டுநர் தேவைப்படாத டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது.

 

 • மருந்து தயாரிப்பில் முன்னணியில் உள்ள கெடிலா ஹெல்த்கேர் நிறுவனம் ரஷியாவைச் சேர்ந்த ஃபார்ம் எய்ட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

 • பொதுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் ஒருவர் மட்டும் இருப்பார். அந்த பதவியை பிரிப்பது குறித்து செபி ஆலோசித்து வருகிறது.

 

 • ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பின் தமிழகத்தின் வருவாய் 5000 கோடி ரூபாயை தாண்டியது

 

 • “கர்நாடக இசை உலகின் சகாப்தம்”எம்.எஸ். சுப்பு லெட்சுமியின் பிறந்த நாள் விழாவில் அவரின் உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 மற்றும் ரூ.10 நாணயங்கள் வெளியிடப்பட்டன.

 

 

Current Affairs

 

 

NATIONAL NEWS

 

 • Vice president of India Shri M. Venkaiah Naidu released a Commemorative coin on Bharat Ratna Dr. M.S. Subbulakshmi and inaugurated an exhibition entitled “Kurai onrum illai MS: Life in music” on the occasion of Birth Centenary Commemoration of Dr. M.S. Subbulakshmi.

 

 • Singapore will set up a skill centre at Guwahati to the entire North Eastern region.

 

 • Jharkhand Government launched the ‘Shaheed Gram Vikas Yojana” during a programme at Ulihatu in khunti district of Jharkhand.

 

 • The Puducherry Government decided to ban manufacture and use of plastic packing material than 51 microns.

 

 • India to conduct the first ‘BIMSTEC’ Disaster Management Exercise – 2017 from October 10-13.

 

 

SPORTS

 

 • India has won its first athletics gold through Purnima Hembram in women’s pentathlon (4062) points in the fifth Asian Indoor and Martial Arts games held at Ashgabat, Turkmenistan.

 

 • Mark Beaumont, a British Cyclist has broken the world record for cycling around the world in 79 days – 44 days shorter than the previous record.

 

APPOINTMENTS

 

 • Rajni Kant Mishra appointed as the new Chief of Sashastra Seema Bal (SSB)

 

AWARDS

 

 • SS Rajamouli receives ANR award for his contribution to the Telugu film industry

 

 • Akshay Kumar appointed Uttarkhand Swachh Bharat Mission Brand Ambassador.

 

 • Union government to launch mobile app for retrieving govt. staff.

 

 • India’s zero Hunger programme to be launched on World Food Day Oct 16 with focus on agriculture, nutrition and health in symbiotic manner.

 

 

INTERNATIONAL NEWS

 

 • The US Army and the Israel Defense forces (IDF) inaugurated a permanent base in Israel.

 

 • Union petroleum minister to co-chair 13th Inter Governmental commission meeting at Astana, Kazakhstan

 

 • Hurricane Maria has “devasted” the Caribbean Island of Dominica.

Call Now