September 19

Date:19 Sep, 2017

September 19

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 19

                                          தேசிய செய்திகள்

 

 

 

 • மக்களவை நெறிமுறைகள் குழுவின் (எதிக்ஸ் கமிட்டி) தலைவராக எல்.கே.அத்வானி நியமிக்கப்ட்டுள்ளார்.

 

 • தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைவராக ஒய்.சி.மோடி நியமிக்கப்ட்டுள்ளார்.

 

 • உத்தரபிரதேச சட்டமேலவை உறுப்பினராக முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று (செப்டம்பர் 18) பதவியேற்றார்.

 

 • புதுவையில் பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை 6 மாதங்களுக்கு பின் அமல்படுத்தப்படும் என்று சுற்றுச்சுழல் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

 

 • தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் போது அடையாள அட்டையை அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • சென்னை சென்ரல் இரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் விரைவு இரயில்களில் பயணிக்கும் பயணிகளின் பட்டியல் ஒட்டும் பணியை நிறுத்த இரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

 

 • பள்ளிகளுக்கு புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு, நவம்பரில் வெளியிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

 • வான் வெளி திட்டங்களை ஈர்ப்பதற்காக தமிழக அரசின் புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

 

 • சென்னையில் நடந்த ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தமிழக அரசுக்கு 49 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 • தூய்மை இந்தியா திட்டத்தை ஒவ்வொரு துறையிலும் நடைமுறைப் படுத்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அரசு தனியார் பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்களை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • ஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒளி தகவலை ஒலி வடிவில் மாற்றி சேமித்து வைக்கும் தொழில்நுட்பத்தைக் (போட்டோனிக் கம்ப்யூட்டரை) கண்டுபிடித்துள்ளனர்.

 

 • திபெத் வழியாக நேபாள எல்லையை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையை சீனா திறந்துள்ளது.

 

 • அமெரிக்காவில் சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான எம்மி விருது(வருடந்தோறும்) 19 ஆண்டுகளுக்கு பிறகு கறுப்பின நடிகரான ஸ்டெர்லிங் கே. என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 • சீனாவின் யு ஜியான்ஸியா(48) உலகின் மிக நீளமான இமை முடிகள் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.

 

 • தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 23ம் தேதி தமிழ் பள்ளி தொடக்க விழா நடைபெற உள்ளது என்று தைவான் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் ரமேஷ் பரமசிவம் தெரிவித்துள்ளார்.

 

 • அமெரிக்காவின் ஹில்ஸ் நகரில்(டெட்ராய்ட்) அமெரிக்க பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் பெரியாரின் 139வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களிடையே “யார் பெரியார், நான் பெரியார் பேசுகிறேன், பெரியாரின் சமூகப் புரட்சி, பெரியாரின் பெண்ணியம்” ஆகிய தலைப்புகளில் பேச்சு போட்டி நடைபெற்றது.

 

 • ஷாங்காய்(சீனா) நகரில் உள்ள 135 ஆண்டுகள் பழைமையான மற்றும் 2000 டன் எடைக்கொண்ட யுஃபூ புத்தர் ஆலயம் சுமார் 30.66 மீட்டர் நகர்த்தப்பட்டுள்ளது. மேலும் 1.05 மீட்டர் அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

 

 • மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் இராணவத்தின் மீது பொருளாதார தடைகள் விதிக்கவும், ஆயுத தடை சட்டத்தை அமல்படுத்தவும் மனித உரிமை அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 • தனி நாடு கோரி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த குர்து இன மக்களின் கோரிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஈராக் அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

 

 • இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறுகிறது.

 

 • மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதற்காக இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் வெய்ன் ரூனிக்கு 2 ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடை விதித்து இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

 • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கொல்கத்தாவில் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது.

 

 • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக ப்ளே ஆப் சுற்றில் கனடா வெற்றி பெற்றது.

 

 •  28வது தென் மண்டல ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலத்தில் நடைபெற்றது. இதில் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் விஷ்ணு தங்கப்பதக்கம் வென்றார்.

 

 • தென் மண்டல ஜுனியர் தடகள போட்டியில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான நீளம் தாண்டுதலில் பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை தபிதா தங்கப் பதக்கம் வென்றார்.

 

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • இந்தியாவில் மின்னணு பணப் பரிவர்த்தனை, புதிய தொழில்நுட்பத்துடன் உத்வேகம் அடையும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

 • மத்திய அரசுக்கு சொந்தமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு பங்கு சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி அனுமதி வழங்கியுள்ளது.

 

 • இந்தோனேசியாவிலிருந்து கடந்த சில மாதங்களாக தங்கம் இறக்குமதி அதிகரித்து வருவதால் அதனை கட்டுபடுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது என்று மத்திய அரசின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

 • காலணிகள் விற்பனை அங்காடிகளை நடத்தி வரும் காதிம் இந்தியா நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது.

 

 • போலி நிறுவனங்ளைத் தொடங்கி நிதி மோசடியில் ஈடுபட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் பட்டியலை மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

 • எலெகட்ரிக் வாகனங்கள் ஆராய்ச்சிக்காக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்கள் கூட்டு சேர்ந்துள்ளன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விநியோகம் மற்றும் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

 

 

 

Current Affairs

 

 

National News 

 

 

 • The ministry of women and child development will hold the first ever National Conference in New Delhi on mission mode to address under –  Nutrition in the country 

   

 • Tripura has become the first state in the country to set up family welfare district committees to deal with the issue of fake and biased complaints by women against their husbands 

   

 • India and Japan Singed a pact to start a postal service which will help Japanese people living in India to order food from Japan 

   

 • Astra the beyond visual range air to air missile is all set for production and later Induction into the armed Forces 

   

 • Assam skill city to have 10000 training seats may take 4-5 years to get functional 

   

 • The union minister Rajnath Singh launched full-fledged intelligence wing of Sashastra Seema Bal

   

Inter National News

 

 

 • External Affairs Minister Sushma Swaraj represented India at the annual UN General Assembly session in New York 

   

 • According to UNCTAD’s recently released Trade and Development Report 2017, India and China at their current levels of growth will not serve as “growth poles” in near future 

   

 • China has issued a commemorative Stamp in honour of world’s largest telescope located in guizhou province 

   

 • The International union for conservation of Nature has taken snow leopards off the ‘endangered’ list after as years 

   

 • International Yoga festival starts  in Kashmir 

   

 • Maharashtra CM Devendra Fadnavis plan to launch infrastructure projects entailing an investment of Rs 1 lakh crore this year   

   

 • The 13th  edition Yudh Abhyas 2017 a joint military exercise between India and US  held at joint base Lewis Mcchord, Washington 

  Economy

   

 • According to Japanese financial service major Nomura, India’s current account deficit is expected to widen to 1-5 percent of GDP in 2017,  from 0-6 percent in 2016 

   

  Sports

 

 

 • P V Sindhu wins Gold at Korea Open super series competition 

 

 • Hamilton wins Singapore Grant Prix 

 

 • Spain’s Ana Carrasco the first women to win an Individual world championship Motorbike race win by 0.053 sec 

   

  Appointments

   

   

 • Y.C Modi has been appointed as the new director general of the National Investigation Agency (NIA) 

  Peruvian president appoints Mercedes Araoz Fernandez as new prime minister(PM)

   

   

  Obituary

   

   

 • Dr K S Chugh the ‘Father of nephrology in India’ has passed away. He was a recipient of several national and international awards including the Padma Shri 

   

 • Ex – Karnataka minister Qamarul Passes away 

   

Call Now