September 18

Date:18 Sep, 2017

September 18

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 18

                                          தேசிய செய்திகள்

 

 

 

 • பிரதமர் நரேந்திர மோடியின் 67வது பிறந்த நாள் (செப்டம்பர் 17) நாட்டில் சேவா தினமாக கொண்டாடப்பட்டது.

 

 • முன்பதிவு செய்யப்பட்ட இரயில்களில் பயணிகள் தூங்குவதற்கு 1 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது(10மணி முதல் 6 வரை) என இரயில்வே துறை தெரிவித்துள்ளது.

 

 • கோவாவில் பொது இடத்தில் மது அருந்துவதற்கு தடை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என அம்மாநில முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்

 

 • தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவராக பள்ளி கல்வி இயக்குநர் பி.மணி தேர்வு செய்யப்பட்டார்.

 

 • விமான நிலையங்களில் “போர்டிங் பாஸ் (நுழைவு சீட்டு)” ரத்து செய்ய மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) திட்டமிட்டுள்ளது.

 

 • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் வீடுகள் அல்லது தனியாக மையங்கள் அமைத்து மாணவர்களுக்கு தனிப்பயிற்சி வகுப்புகள்(டியூஷன்) எடுக்கக் கூடாது என்று கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 • இந்திய விடுதலைக்குப் பின்னர் அமைப்பட்ட முதல் தொழிற்சாலை – ஐ.சி.எஃப் (Integral Coach Factory) என்று அழைக்கப்படும் சென்னை பெரம்பூர் இரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • மூன்றாம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே இந்தியர்கள் பூஜ்ஜியத்தை பயன்படுத்தினர் என்பது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 

 • அமெரிக்காவில் இர்மா புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தினேஷ்குமார் என்பவர் அம்மா கிச்சன் என்ற பெயரில் குறைந்த விலையில் உணவு பொருள்களை வழங்கி வருகிறார். (தமிழகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகத்தைப் பின்பற்றி இந்த உணவகம் அமைக்கப்பட்டது)

 

 • ஓவ்வொரு குழந்தைகளுக்கும் வழங்கக்கூடிய தடுப்பு மருந்துகளை படிப்படியாக ஒரே ஊசியில் வழங்குகின்ற தொழில்நுட்பத்தை(சரியான நேரத்தில் சரியான அளவு மருந்தை வெளியேற்றும்) அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

 

 • பசுபிக் பெருங்கடலில் தாலிம் புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான சேவைகள் துண்டிக்கப்பட்டன. ஜப்பான் மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 • ககோஷிமாவில்(ஜப்பான்) உள்ள நபி தஜிமா(117) : உலகின் வயதான பெண்மனி என்ற கின்னஸ் சாதனைப் பெற்றுள்ளார்.

 

 • பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நவாஸ் மனைவி வெற்றி பெற்றுள்ளார்.

 

 • ஐ.நா. அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்த்திருத்தங்கள், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கும் வகையில் உலக அளவில் இருக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

 

 • உலகிலேயே அதிகமாக மது அருந்தும் நாடுகள் பட்டியலை (193 நாடுகளிடையே நடத்தப்பட்டது) உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் பின்லாந்து முதல் இடத்தையும், ஜெர்மனி 2வது இடத்தையும் பெற்றுள்ளது. (உலகிலேயே அதிகமாக மது அருந்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை)

 

 • சிங்கப்பூரில் நேற்று(செப்டம்பர் 17) தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று(செப்டம்பர் 17) நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.

 

 • சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனிர்வதேச போட்டிகளில் (டெஸ்ட் உள்பட) ஒட்டுமொத்தமாக 100 அரைசதம் அடித்தவர் என்ற சாதனைப் படைத்துள்ளார்.

 

 • வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான “ஒரே ஒரு 20 ஓவர்” சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

 

 • ஆந்திர மாநிலத்தை சேர்ந்த செர்குரி டோலி ஷிவானி(5) வில் வித்தையில் இரட்டை சாதனை படைத்துள்ளார். சிறுமியின் இத்தகைய முயற்சி “ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” மற்றும் “இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளது.

 

 • பார்முலா1 கார் பந்தயம் 14வது சுற்றில் ஹால்மில்டன்(சிங்கப்பூர்) முதலிடம் பிடித்துள்ளார்.

 

 • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர்களுக்கான(டாப்ஸ்) பட்டியலில் கூடுதலாக 107 பேரை மத்திய விளையாட்டு அமைச்சகம் சேர்த்துள்ளது

 

 • கொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து ஒகுஹராவை(உலக சாம்பியன்) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

 • துலிப் ஃடிராபி இறுதி போட்டிக்குள் இந்தியாவின் ரெட் அணி நுழைந்துள்ளது.

 

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • 2028ம் ஆண்டுக்குள் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என்று ஹெச்எஸ்பிசி நிதிச்சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற மாஸ் சேலஞ்ச் போட்டியில்(விவசாயத்திற்கான தொழில்நுட்பத் திட்டங்களை உருவாக்குவது) மிக உயரிய விருதான ‘டைமண்ட் வெற்றியாளர்’ விருதை இந்தியாவைச் சேர்ந்த “ஹேய்ட்டி ஸ்டாட்அப்” நிறுவனம் வென்றுள்ளது.

 

 • ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் இந்திய சாலைகளில் தங்களது பேட்டரிக் கார்களை சோதித்துப் பார்க்க திட்டமிட்டுள்ளது.

 

 • சேமிப்பு கணக்குகளில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகை இருப்பு வைத்திராத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்களை மறுபரிசீலினை செய்ய பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.

 

 • நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் நாட்டின் தங்க இறக்குமதி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

 

 

Current Affairs 

 

National News 

 

 

 • PM  Narendra Modi who celebrated his 67th birthday on 17 sep, inaugurated and Dedicated India’s Biggest and world’s second biggest dam Sarder  Sarovor in Kevadia, Gujarat

 

 • Indigenous artillery gun sets new record in range. ATAGS(Advanced Towed Artillery Gun System being jointly developed by DRDO and provide Sector is a 155mm, 52 calibre towed artillery gun

 

 • Japan releases postage stamps on India Yoga Experts Bishnu Charan Gosh and his family members in spreading Indian postural Yoga in Japan

 

 • Housing and Urban affairs minister Hardeep Singh Puri released new metro policy for expanding the metro network across various cities in the country

 

 

International News

 

 • Nepal has begun its first ever survey to remeasure mount Everest to check if the world’s tallest peak’s heights was altered by the 7.8 magnitude earthquake that Struck the country in 2015

 

 

Banking & Finance

 

 • Airtel Payments Bank (APB) has become the First payment Bank to integrate the Unified Payments Interface(UPS) on the digital platform 

  Sports

    

 • PV Sindu beats world championship winner to win Korea Open

 

 • Chris Gayle becomes first batsman to hit 100 sixes in T201’s

 

 

Resigns  

 

 • Iceland  Prime minister Bjarni Benediktsson resigned

 

 

Awards

 

 • Former DIG  D Roopa who exposed alleged jail irregularities conferred president’s medal 

 

 

Obituary

 

 • BJP MP from Alwar Mahant Chand Nath passes away at 61 

   

   

Call Now