September 17

Date:17 Sep, 2017

September 17

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 17

                                          தேசிய செய்திகள்


 

 • கர்நாடகத்தில் போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு ஆண்டு தோறும் ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சிறப்பாக பணியாற்றிய ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா உள்பட 88 பேருக்கு ஜனாதிபதி பதக்கத்தை கவர்னர் வஜூபாய் வாலா வழங்கினார்.

 

 •  நர்மதா நதி மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். நர்மதை ஆற்றின் குறுக்கே ரூ 16000 கோடி செலவில் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை உலகின் 2வது மிகப்பெரிய அணையாகும். அண்மையில் இந்த அணையின் நீர்மட்டம் 138.68 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்தார் சரோவர் அணை 1961ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டது.

 

 •  அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்வதை வலியுறுத்தும் தூய்மையே சேவை இயக்கத்தை மத்திய அரசு செப்டம்பர் 15ல் தொடங்கி வைத்தது. இத்திட்டப்படி மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தூய்மையை பேண வேண்டும் என்கிற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

 

 •  பாகிஸ்தானுடன் நடந்த போரில் முக்கிய பங்கு வகித்த விமானப் படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் காலமானார். அர்ஜன் சிங் 1919, ஏப்ரல் 15ல் பாகிஸ்தானிலுள்ள லியால்பூரில் பிறந்தார். 1938ல் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 1939 ல் பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1965ல் பத்மபூஷண் விருது பெற்றார். சைன்ய சேவா பதக்கம் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். 1989 – 1990ல் டெல்லி கவர்னராக இருந்தார். கடந்த ஆண்டு அர்ஜன்சிங் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்காள மாநிலம் பனாகாரில் உள்ள விமானப்படை தளத்துக்கு அர்ஜன்சிங் பெயர் சூட்டப்பட்டது.

 

 •  இந்திய அணுசக்தித்துறை செயலர் சேகர் பாசுவின் பதவிக்காலம் மத்திய அரசால் செப்டம்பர் 2018 வரை 2வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

 • பிரதமர் நரேந்திர மோடியின் 67வது பிறந்த நாளை கொண்டாடும் முகமாக பாரதீய ஜனதா கட்சி சார்பில் நாடெங்கிலும் சேவா தினமாக இன்று கொண்டாடப்படுகிறது.

 

 •  கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 101ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தேவஸ்தானம் சார்பில் அவருக்கு இசை புஷ்பாஞ்சலி சமர்ப்பிக்கப்பட்டது.

 

 • இந்திய ஒன்றியத்தில் முந்தைய ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானம் இணைக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக நிஜமாபாதில் செப்டம்பர் 18ல் நடைபெறும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

 

 பன்னாட்டு   செய்திகள்

 

 

 

 • சிந்து நிதியில் கிஷன் கங்கா மற்றும் ராட்டில் என்ற 2 நீர்மின் நிலையங்களை அமைப்பதற்கு இந்தியா திட்டமிட்டது. இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே, 1960 ம் ஆண்டு உலக வங்கி உதவியுடன், சிந்துநதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சிந்துநதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

 

 •  ஆப்ரிக்க நாடான காங்கோவில் காமன்யோலா நகரில் உள்ள புருண்டி அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது போலிசாருக்கும் அகதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 அகதிகள் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

 

 •  எல்லையற்ற பொருளாதார தடைகளை தாண்டி அமெரிக்காவுக்கு இணையாக ராணுவ கட்டமைப்பை உருவாக்குவோம் என வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் சபதம் செய்துள்ளார்.

 

 •  படுகொலைகள், போர்க்குற்றங்கள், இனஅழிப்பு போன்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஐ.நா. பொதுச்சபையில் விவாதிக்க இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

 

 •  பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மென்மையாக்கலாம் என செய்திகள் வந்த போதிலும் தாங்கள் அந்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

 

 •  மியான்மரிலிருந்து வந்த அகதிகளைத் தங்க வைப்பதற்காக 14000 புதிய குடியிருப்புகளை அமைக்கப் போவதாக வங்கதேச அரசு அறிவித்திருக்கிறது.

 

 •  இராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2014ல் கைப்பற்றிய போது கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் நிலை குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை என இராக் பிரதமர் ஹைதர் அல் – அபாடி தெரிவித்தார்.

 

 •  சீனாவில் 88 சதவீத பள்ளிகள் இணையதள வசதி பெற்றுள்ளதாக சீனாவின் கல்வி அமைச்சகம் தெரிவித்தது.

 

 •  எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளப்பதற்கான நடவடிக்கைகளை நேபாள அரசு தொடங்கியது. எவரெஸ்டின் உயரம் 8848 மீட்டர் என்று இந்தியா 1954இல் மேற்கொண்ட அளவையிலிருந்து தெரிய வந்தது. எவரெஸ்ட் உயரத்தை புதிதாக அளப்பதற்கு நேபாள அளவை நிபுணர்களும் வெளிநாட்டு நிபுணர்களும் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் எவரெஸ்டில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

 

 

   விளையாட்டு செய்திகள்

 

 

 • டேவிஸ் கோப்பை உலக பிளே ஆப் சுற்றில் கனடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றார்.

 

 •  இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறுகிறது.

 

 •  டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் தென்னாப்ரிக்க ஆல்ரவுண்டர் ஜே.பி.டுமினி அறிவித்துள்ளார்.

 

 •  இலங்கை அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக முன்னாள் வீரர் க்ரீம் லேப்ராய் (53) தேர்வு செய்யப்பட்டார். லேப்ராய் 1986 முதல் 1992 வரை இலங்கை அணிக்காக 9 டெஸ்ட், 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

 

 •  கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பிவிசிந்து சீனாவின் ஹீபிங் ஜியோவுடன் மோதி சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 

            பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • நேரடி மானியத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு ரூ57000 கோடியை சேமித்துள்ளது என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

 

 • ஜிஎஸ்டி கீழ் வரித்தாக்கல் செய்வதற்கு மேற்கொண்டு கால நீட்டிப்பு ஏதும் வழங்கப்பட மாட்டாது என மத்திய வருவாய்த் துறைச் செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

 

 • சில பொதுத்துறை வங்கிகளை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மற்ற வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

 

 • தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மண்டல மகளிர் தொழில் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

 

 • உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் இந்தியாவில் ‘டெஸ்’ எனும் பேமெண்ட் செயலியை தொடங்க இருக்கிறது. இதற்கான அறிமுக விழா திங்கள் கிழமை நடைபெற உள்ளது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்த பேமண்ட் செயலியை அறிமுகப்படுத்த உள்ளார்.

 

 • அக்டோபர் மாதத்தில் நான்கு புதிய விமானங்களை அறிமுகப்படுத்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 3ம் தேதி இந்த விமான சேவை தொடங்க உள்ளது.

 

 • பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் விநியோக நிறுவனமான ஹெச்பிசிஎல் விரிவாக்க திட்டங்களுக்காக நடப்பு ஆண்டில் ரூ 7110 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

 

 

 

Current Affairs  

 

National news

 

 • West Bengal Transport department has introduced ‘Yatrik mobile phone’ app to help in the easy booking of traditional meter Taxis in Kolkata.

 

 • Suzuki to set up India’s first Lithium Ion battery unit with Toshiba Denso.

 

 • Vice president Venkaiah Naidu raids the foundation stone for a Regional vocational Training institute, Hyderabad.

 

 • Kerala to open India’s first clinics exclusively for transgender to provide sex change surgery.

 

 • Two Hydroelectric projects on Arunachal Pradesh to be commissioned in 2018.

 

 • India’s first centre for animal law Hyderabad Union minister for women and child development inaugurated the centre. It will create curriculum on animal welfare International news.

 

 • According to a study by zipjet, a UK based startup German city Stuttgart is the least stressed out city.

 

 • The most stressed city in the world is Baghdad.

 

 • International day for the preservation of the ozone layer – September 16

 

 • The oldest person in the world, Violet Mosse Brown has died in Jamaica at 117.

 

 • India’s Forex Reserves Top $400 billion for the first time.

 

 • India signs 76 million US Dollar Loan Deal with Japan International co-operation limited to upgrade Alang –  Sosiya Shipyard.

 

 • The DRDO has undertaken the design and development of Trawl system for the nine field area in the battle zone to meet operational requirements of India Army.

 

Economy

 

 • HDFC Bank is India’s most valuable Brand: BrandZ India Top 50.

 

 • India’s app growth likely to slip below 7 %  this fiscal : DBS

 

 

Appointments

 

 

 • Nagaraja Sharma appointed as United India Insurance Company’s CMD.

 

 • Former UN – General Secretary Ban Ki-moon elected as the chair of International Olympic committee (IOC) ethic commission.

 

Awards

 

 • The marine products Export Development authority (MPEDA) awarded National level Rajbasha Keerti award for the third consecutive year.

 

 • Salman Khan received a Global Diversity award at Britain’s House of common.

 

Sports

 

 

 • Ministry of sports and Youth affairs has decided to pay a monthly stipend of Rs.50, 000 to each athlete preparing for coming common wealth and Asian game.

 

Book

 

 • “UNSTOPPABLE: My life so far“ authored by tennis star Maria Sharapova.

 

Call Now