September 16

Date:16 Sep, 2017

September 16

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 16

                                          தேசிய செய்திகள்

 

 

 • ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண் விரைவில் இணைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

 

 • செப்டம்பர் 15 டெல்லியில் “டிஜிட்டல் ஹரியானா மாநாடு” நடைபெற்றது.

 

 • பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உளவியல் மதிப்பீடு அளிக்கவும் சிபிஎஸ்இ தன் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு அறிவித்துள்ளது.

 

 • வயதான பெற்றோர்களைப் பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அரசு ஊழியர்களின் ஊதியம் 10 சதவீதம் பிடிக்கப்படும் என்ற மசோதா அஸ்ஸாம் சட்டப்பேரவையில் நேற்று(செப்டம்பர் 15) நிறைவேற்றப்பட்டது.

 

 • தொலைதூர இலக்குகளை துல்லியமாகத் தாக்கவல்ல அதிநவீன ‘அஸ்திரா’ ஏவுகணையானது வங்கக் கடல் பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

 

 • நீண்ட விடுமுறையில் வெளியூர் செல்ல விரும்புவோர், வழங்கல் துறை இணையதளத்துக்கு சென்று, தற்காலிகமாக ரேஷன் பொருள்கள் வேண்டாம்’ என்று பதிவு செய்யும் புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. www.tnepds.gov.in எனும் இணையதளத்தில் Give it up கொடுக்க வேண்டும்.

 

 • செப்டம்பர் 14ம் தேதி இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.

 

 • மொபைல் போன் மற்றும் லேண்ட் லைன் என்ற தரைவழி தொலைபேசி இணைப்பு பயன்பாட்டில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.

 

 • பெண்கள் தங்களை தாங்களே பாதுகாக்கும் வகையில் பலமாக உதைத்தால் மின்சாரம் பாயும் அளவில் ‘மின் காலனியை’ ஹைதராபாத் மாணவர் கண்டுபிடித்துள்ளார்.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 

 • உலகில் மன அழுத்தம் குறைவானவர்கள் வாழும் நாடுகள் பட்டியல் அறிக்கையை Zipjet என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டது. இதில் Stuttgart(ஜெர்மனி) முதலிடத்தில் உள்ளது.

 

 • உலகின் வயதான நபர் (2017) Violet Mosse – Brown (117) (ஜமைக்கா) கின்னஸ் சாதனை படைத்தவர் நேற்று(செப்டம்பர் 15) காலமானார்.

 

 • ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமை ‘டோக்சுரி’ என்கிற புயல் தாக்கியது.

 

 • இராணுவ ரீதியிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா) காபூலில்(ஆப்கானிஸ்தான்) நடைபெற்றது. ‘பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” என்று 3 நாடுகளும் உறுதியளித்தன.

 

 • 12 ஆண்டுகளாக விண்வெளியில் சனிக் கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினிக் விண்கலம் செப்டம்பர் 15 தனது செயல்பாட்டை இழந்தது.

 

 • இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஜப்பான் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இப்பகுதிகளில் ஜப்பான் உள்பட அயல் நாட்டு முதலீடுகளை அனுமதிக்க முடியாது என்று சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

 • வாஷிங்டனில்(அமெரிக்கா) உலக வங்கி அதிகாரிகள் முன்னிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையே உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

 • நியூயார்க்கில் 9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களை விழுங்கும் திறன் உடைய முதலை இனத்தை அமெரிக்க தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • அஞ்சல் துறையினருக்கான 31வது அகில இந்திய கபடி போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • 44வது மாநில ஜுனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி சங்ககிரியில் செப்டம்பர் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும்

 

 • கொரியா சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கணை பி.வி சிந்து மற்றும் ஹிபிங்ஜியா(சீனா) மோதுகின்றனர்.

 

 • புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய போட்டியில் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் சமீர் வர்மா, சாய் பிரணீத் ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேறி 16 மற்றும் 25வது இடத்தில் உள்ளனர்.

 

 • இந்திய அணிக்கு எதிரான ஹாக்கி ஆட்டத்தில் டென் போஷ் அணி வெற்றி பெற்றது.

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • சரக்கு மற்றும் சேவை வரியை தவிர்க்கும் நிறுவனங்கள் மீது அடுத்த வாரம் முதல் சோதனை நடத்த வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

 

 • மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது விற்பனையாளர்களுக்கு சிறுகடன் வழங்க திட்டமிட்டுள்ளது.

 

 • நாட்டின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 10.29 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டின் இறக்குமதி 21.02 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

 • எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுக்காக மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 55000 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

 

 • நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை முதல் காலாண்டில் ரூ. 92950 கோடியாக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 

Current Affairs

 

National News

 

 • President of India launches Swachhta Hi Seva campaign form Uttar Pradesh.

 

 • India and Japan sign $76mn loan deal for a project to upgrade the environment management plan at Alang – Sosiya ship at Gujarat.

 

 • Assam government employees who dump parent will loge part salary.It passed a bill “The Assam Employees parental responsibility and Norms for Accountability and Monitoring (PRANAM) Bill.

 

 • New Delhi’s Connaught place has been ranked as the tenth most expensive office Market in the world.

 

 

International News

 

 • The German Nationality has been named the best in the world for the sixth year in a row India was ranked 101 among 159 countries in the quality of National Index.

 

 • A recent study in United Nations has claimed that after a steady decline, global hunger level of people have risen which is affecting 11% of people world’s population.

 

 • A Memorial for the world’s oldest captive panda – ‘Basi’

 

 • The UN has announced $25 million award to the Global fund to end modern slavery for transformational programs.

 

 

Science and Technology

 

 • Scientist from Brown University in US have created the first map of water trapped in the uppermost layer of the Moon’s soil using data from Chandrayaan – 1

 

Sports

 

 • Hyderabad Wins Kalpathi AGS – Buchi Babu All India Invitation cricket tournament.

 

Appointment

 

 • UN Secretary General appoints Peter Thomson as first special envoy for the oceans. 

 

 

 Awards

 

 • 74th Venice film festival Awards 2017 –Golden Lion – Best Movies – The shape of water

 

Important Days

 

 • India Days of Democracy – 15 September

 

Call Now