May 9

Date:09 May, 2017

May 9

We Shine Daily News

jkpo;

மே 9

 

தேசிய செய்திகள் :

 • தமிழகத்தில் விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயல் திட்டங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 • சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு முன்பு சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படைவீரர்கள் 25 பேரை நக்சலைட்டுகள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து நக்சலைட்டுகளை ஒடுக்க மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று முதல் மந்திரிகள் கூட்டத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

 

 • சென்னை டெல்லி இடையே விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிக அகலமும், கூடுதல் இருக்கைகளும் கொண்ட பி.777 என்ற புதிய நவீன ரக விமானத்தை ஏர் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இந்த விமான சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

 

 • ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படையினருக்கு ஊதிய உயர்வு மற்றும் அங்க ஊனம் அடைந்தவர்களுக்கான முந்தைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. அதன்படி 7வது சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாதம் (மே) முதல் பாதுகாப்பு படையினருக்கு ஊதிய உயர்வை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவராக பதவி வகித்து வரும் சுஷில் சந்திரா சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இப்பதவியில் இருந்து வருகிறார். புதவி நீட்டிப்பு அடுத்தாண்டு மே 31 ஆம் தேதி வரை நிலைத்திருக்கும். வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இந்த நீட்டிப்பு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • திரிபுராவின் குர்கானாகர் கிராமத்தில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 127 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டுகள் அனைத்தும் 1971 ம் ஆண்டில் நடந்த போரில் பயன்படுத்தப்பட்ட கையெறி குண்டுகளாக இருக்கலாம் என்று அங்கு வசிக்கும் மக்கள் கூறியுள்ளனர்.

பன்னாட்டு செய்திகள் :

 • உலக உணவு பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராக எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர் டாக்டர் மதுரா சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 • பாகிஸ்தான் – ஈரான் நாட்டு எல்லையில் ஜெய்ஷ் அல் – அட் என்ற தீவிரவாத அமைப்ப செயல்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஈரானுக்குள் போதைப் பொருட்களைக் கடத்துகின்றனர். இதைக் கட்டுப்படுத்த ஈரான் ராணுவம் எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 • வடக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் 2011-ம் ஆண்டு சூடானிலிருந்து பிரிந்தது. அதன் பின்னர் இனவாரியாக பிளவுப்பட்ட தெற்கு சூடான் உள்நாட்டுப் போர் காரணமாக கடும் பஞ்சம் நிலவுகிறது. இந்த நிலையில் தெற்கு சூடானில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக 10 லட்சம் குழந்தைகள் அகதிகளாக உள்ளதாக ஐநா அறிவித்துள்ளது.

 

 • இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றி வரும் அப்துல் பாசித்தின் 3 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையிலான புதிய தூதராக சொகைல் மக்மூத் நியமிக்கப்படுகிறார்.

 

 • மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 712 கிலோ அளவிலான எறும்புத்தின்னி செதில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 2 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13 கோடி) அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 • பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக ‘என் மார்ச்சே’ என்ற இயக்கத்தின் தலைவர் இமானுவேல் மேக்ரான் வெற்றி பெற்றார். மேலும் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

விளையாட்டுச் செய்திகள் :

 • இந்தியன் பவுண்டேசன் பனிச்சறுக்கு மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் ஹிமாச்சல பிரதேசம் சிம்லாவில் 6-வது தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்றன. இதில் கும்பகோணத்தைச் சேர்ந்த தர்னேஷ் மற்றும் விஸ்வலட்சுமி முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்து சாதனை படைத்தனர்.

 

 • சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி, தொடக்க வீரர் ரோஹித் சர்மா, முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

 

 • கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 9வது அகில இந்திய ஹாக்கி போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் பெங்களுரு, ஒடிஸா, செகந்திராபாத் அணிகள் வெற்றி பெற்றன.

 

 • பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த அமல்ராஜ் தோல்வியடைந்தார்.

 

 • தஞ்சாவூர் கமலா சுப்பிரமணியம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 17 வயதுக்குள்பட்டோருக்கான 28வது மாநில அளவிலான செஸ் போட்டி தொடங்குகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, சேலம், கன்னியாகுமரி உள்பட 29 மாவட்டங்களைச் சேர்ந்த 23சிறுவர்கள் மற்றும் 90 சிறுமிகள் பங்கேற்றுள்ளனர்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • இன்றைய வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 76 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 67.35 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 76.39 புள்ளிகள் உயர்ந்து 30002.54 புள்ளிகளாக உள்ளது.

 

 • இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் சரிந்து ரூ.64.51 காசுகளாக உள்ளது.

 

 • அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆப்பிள் உள்ளிட்ட அந்நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல் அதிகாரிகளை சந்தித்து தன்னுடைய மாநிலத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

 

 • மத்திய அரசின் புதிய திட்டங்கள் அடிப்படையில் ரூ.30 லட்சத்துக்குள் வங்கிக் கடன் பெறும் நடுத்தர மக்களுக்கான வீட்டுக்கடன் வட்டி விகிதம் 0.25 சதவீதத்;தை ஸ்டேட் பாங்க் குறைத்துள்ளது.

 

 • புதிதாக தொடங்கவுள்ள தொழிற்சாலைகளுக்கான அனுமதியை ஆன்-லைனில் வழங்கும் முறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

 

 • கடந்த நிதியாண்டில் 3.20 கோடி டன் சரக்குகள் கையாண்டு ரூ.681 கோடி மொத்த வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. இதில் ரூ.460 கோடி நிகர லாபமாக இருக்கும்.

 

 • இந்தியாவில் அமலாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையால் பொருள்களின் விலை உயராது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Call Now
Message us on Whatsapp