May 7

Date:08 May, 2017

May 7

We Shine Daily News

jkpo;

மே 7

தேசிய செய்திகள் :

 • நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் முதல் பெண் தலைமை நீதிபதியாக பணியாற்றிய லீலா சேத் (86) டெல்லியில் நேற்று காலமானார்.

 

 • இந்திய விமானப்படையில் பெண்கள் எளிதில் இணைய வேண்டும் என்பதற்காக புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தேசிய சாரணர் படையில் (என்சிசி) பயிற்சி பெற்று சி சான்றிதழ் வைத்திருந்தால் நேரடியாக நேர்முகத் தேர்வில் பங்கேற்க முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 • உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயிலுக்கு சென்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டின் நலனுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

 

 • திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் பதவிக்காலம் முடிவடைந்ததால், வட இந்தியாவைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில்குமார் சிங்கால் அந்த பதவிக்கு பணியமர்த்தப்பட்டார்.

 

 • புதிய ரயில் பாதை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பயணியர் குறைகளைத் தீர்க்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்படும் என்று கூறினார்.

 

 • காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

 

 • அகில இந்திய அளவிலான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இந்தத் தேர்வை நாடு முழுவதும் 11.35 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

பன்னாட்டு செய்திகள் :

 • உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்டோர் மென்ஸா நுண்ணறிவுத் திறன் போட்டியில் 160 மதிப்பெண்கள் பெற்றனர். இந்நிலையில் கடந்த மாதம் நடந்த மென்ஸா தேர்வில் பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி ராஸ்கவுரி பவார் 162 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

 

 • இந்தியா-ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து 5-வது தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கவுள்ளன. இது தொடர்பான விரிவான வடிவமைப்புத் திட்டத்தை இறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் விரைவில் யையெழுத்திட உள்ளன.

 

 • பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நாளை முதல் கராச்சி – மும்பை இடையிலான விமானத்தை இயக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கராச்சி – மும்பை இடையிலான விமான சேவை நிறுத்தப்பட்டாலும் லாகூர் மற்றும் டெல்லி இடையிலான விமானங்கள் விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

 • பிரான்ஸ் நாட்டில் ஒல்லியான தேகவாகு கொண்ட மாடல் அழகிகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்த சட்டம் இப்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் படி மாடல் அழகிகள் மாடலிங் செய்வதற்கு டாக்டர்களிடம் உடல் தகுதி சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

 

 • உலகின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு குறித்து உலக தண்ணீர் கவுன்சில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் இந்தியாவில் கடந்த 5 வருடங்களில் குடிநீரின் தரம் உயர்ந்துள்ளது என உலக தண்ணீர் கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

 • பாலஸ்தீனிய போராளி இயக்கமான ஹமாஸ்சிற்கு புதிய தலைவராக ஹனியே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐ.பிஎல் கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் உனட்கட்டின் ‘ஹாட்ரிக்’ சாதனையால் புனே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் 8-வது வெற்றியை பெற்றது.

 

 • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி தேர்வு நாளை நடைபெறக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 • மலேசியாவில் உள்ள இபோவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி வென்று 3-ம் இடம் பிடித்தது.

 

 • ஐ.பி.எல் கிரிக்கெட்டில் டெல்லியை 66 ரன்களில் சுருட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

 

 • புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் கால்பந்து போட்டிகள் கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன. இன்று இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் புதுவை நகராட்சி அணி, மாகி அணி மோதுகின்றன. பெண்கள் பிரிவில் உழவர்கரை நகராட்சி அணி வில்லியனூர் அணி மோதுகின்றன.

 

 • ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 60 கிலோ உடல் எடைப் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஷிவதபா வெள்ளிப்பதக்கம் வென்றார். மேலும் ஆசிய குத்துச்சண்டையில் தொடர்ச்சியாக 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • போஷ் நிறுவனத்தின் பெங்களுரு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸ் காரணமாக இந்த ஆலையை மூடுவதாக நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

 

 • ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னர் இடைக்கால வெளி வர்த்தகக் கொள்கைகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

 

 • ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வறுமையை அகற்றுவதை நோக்கமாக கொண்டு ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) செயல்பட்டு வருகிறது. இதனுடன் நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி ஆகிய துறைகளில் ஆசிய வளர்ச்சி வங்கி கவனம் செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

 • கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டு வர்த்தகச் செயல்பாடு விவரங்களை, ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் லாபம் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைவிட 76.6மூ உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

 • நடப்பு நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்றாவது காலாண்டில் புராக்டர் ரூ கேம்பிள் நிறுவனம் ரூ.624.28 கோடி வருவாய் ஈட்டியது.

Call Now
Message us on Whatsapp