May 8

Date:08 May, 2017

May 8

We Shine Daily News

jkpo;

மே 8

தேசிய செய்திகள் :

 • உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயரில் புதிய மாம்பழம் ஒன்றை அம்மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் அந்த மாம்பழத்துக்கு ‘யோகி மாம்பழம்” எனப் பெயர் சூட்டியுள்ளார்.

 

 • மனிதர்களை உடல்ரீதியாக சித்திரவதை செய்வதற்கு எதிரான ஐ.நா உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

 

 • தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காக நடுக்கடலில் இலங்கை எல்லைப் பலகை ஒன்றை வைத்துள்ளது. இலங்கையில் இருந்து 5வது மணல் திட்டில் இலங்கை கொடியுடன் இது வைக்கப்பட்டுள்ளது.

 

 • குஜராத் மாநிலத்தில் தனது உடலை ரப்பர் போல் வளைக்கும் இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

 • ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கூட்டாக வடிவமைப்பது தொடர்பாக இந்தியா-ரஷ்யா இடையே, 2007 ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு பல்வேறு விஷயங்கள் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளால், இந்த பணி தாமதமானது. இந்நிலையில் அனைத்து கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்பட்டு விட்டதால், இந்த போர் விமான வடிவமைப்பு தொடர்பாக இரு நாடுகளிடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

பன்னாட்டு செய்திகள் :

 • ஜெர்மனியில் 2ம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஹேனோவர் நகரிலிருந்து பொதுமக்கள் 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். லோயஸ் சாக்சன் மாகாணத்தில்; உள்ள அந்த நகரில் 1943ம் ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இவற்றில் வெடிக்காமல் புதைந்து போன சில வெடிகுண்டுகள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

 

 • இங்கிலாந்தில் உள்ள தி சண்டே டைம்ஸ் என்ற பத்திரிக்கை 2017ம் ஆண்டுக்கான பணக்காரர்கள் 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்த் இந்துஜா மற்றும் கோபிசந்த் இந்துஜா சகோதரர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

 

 • பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதிச் சுற்றில் அமோக வெற்றி பெற்ற ஆன் மார்ச் கட்சியைச் சேர்ந்த இமானுவல் மேக்ரான் அந்நாட்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களுருவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றியைப் பெற்றது.

 

 • சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் சர்வதேச அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

 

 • கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 9வது அகில இந்திய ஹாக்கி போட்டியின் 3 வது நாளில் ஒடிஸா அணி வெற்றி பெற்றது.

 

 • ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி வில்லாரியல் அணியை வீழ்த்தியது.

 

 • அஸ்லான் ஷா கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 43 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

 

 • அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் நீச்சல் ஜாம்பவானான அடோல்ப் கீபெர் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • அமெரிக்காவில் பணிபுரிய தற்காலிகமாக அனுமதிக்கப்படும் பிற நாட்டு திறன்மிகு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசாவை ஏப்ரல் 3 முதல் நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை உலக அளவில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

 • இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 78 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 267.41 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 78.22 புள்ளிகள் உயர்ந்து 29937.02 புள்ளிகளாக உள்ளது.

 

 • இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ.64.25 காசுகளாக உள்ளது.

 

 • மொபைல் அழைப்புகள் தரமாக உள்ளதா, இல்லையா என தரத்தை பதிவு செய்ய மொபைல் ஆப் அறிமுகம் செய்ய டிராய் முடிவு செய்துள்ளது.

 

 • தெற்காசிய நாடுகளுக்காக டெல்லியில் ஆசிய மேம்பாட்டு வங்கியின் கிளை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கியிடம் (ஏ.டி.பி) இந்தியா வலியுறுத்தியுள்ளது.

 

 • ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமைக்க வேண்டும், இந்தியாவில் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அழைப்பு விடுத்துள்ளார்.

Call Now
Message us on Whatsapp