May 6

Date:06 May, 2017

May 6

We Shine Daily News

jkpo;

மே 6

தேசிய செய்திகள் :

 • தெற்காசிய நாடுகளுக்கு இந்தியா பரிசாக வழங்கியுள்ள ‘ஜிசாட் 9’ செயற்கைக் கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி – எஃப்09 ராக்கெட் மூலம் நேற்று மாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 

 • காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை நிலவுகிறது. இந்நிலையில் காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்ட வரைவு இறுதி அறிக்கை இன்னும் ஒரு சில தினங்களில் இறுதி செய்யப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

 

 • வராக்கடன்களை கையாளுவதில் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

 

 • விமானத்தில் தகராறு செய்யும் பயணிகள், விமானத்தில் பயணம் செய்ய 3 மாதங்கள் முதல் வாழ்நாள் வரை தடை விதிப்பதற்கான புதிய வரைவு விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • ஆந்திர அரசு திருப்பதியை உலகத் தரம் வாங்ந்த மருத்துவ மையமாக மாற்ற பல மருத்துவமனைகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி டாடா குழுமம் திருப்பதியில் புற்றுநோய் மருத்துவமனையை ஏற்படுத்த உள்ளது. இதில், ரூ.100 கோடி டாடா நிறுவனமும், ரூ.40 கோடியை நன்கொடை மூலம் வசூல் செய்ய உள்ளதாகவும் தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.

பன்னாட்டு செய்திகள் :

 • தூய எரிவாயுக்காக ஐஸ்லாந்து நாடு அந்நாட்டின் மிக முக்கிய நகரான ரெய்க்ஜாலித் அருகிலுள்ள கிராஃப்ளா எரிமலையைத் தோண்டும் பணி தொடங்கியுள்ளது. இந்த எரிமலைப் பகுதிகளில் நடத்தப்படும் இந்த பரிசோதனை திட்டம் வெற்றியடைந்தால் 10மடங்கு அதிக எரிவாயு அல்லது கச்சா எண்ணெய் எடுக்க முடியும் என்று ஐஸ்லாந்து எரிசக்தி நிறுவனமான ர்ளு ஓர்காவின் பொறியியலாளர் ஆல்பர்ட் அல்பெர்ட்ஸ்சன் தெரிவித்துள்ளார்.

 

 • உள்நாட்டில் நிலவும் வறுமையும், பசியுமே அகதிகள் அதிகரிக்க காரணம் என்று ஐநா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

 • கடலில் கரைந்துள்ள பிராணவாயு அளவைக் கொண்டுதான் கடலின் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது. துருவங்களில் பனி உருகி வருவது மிக வேகமாக நடந்து வருவதால் கடல்களில் புதிய நீர் சேகரமாகிறது. இதனால் கடல்நீர் அதிகமாக வெப்பமடைந்து இது பிராணவாயுவை அழித்து வருகிறது என்று அமெரிக்க ஆய்வு எச்சரித்துள்ளது.

 

 • சீனாவின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஜெட் விமானம் பறக்கத் தயாராகிறது. 158 பேர் அமரக்கூடிய சி919 எனும் பெயர் கொண்ட இந்த விமானம் தனது சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளது.

 

 • அமெரிக்க ஜனாதிபதி டெனால்டு டிரம்ப், வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுபடுத்த எச்1பி விசாவில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்தார். அதன் படி அமெரிக்கா விசாவை பெறுவதற்கு பேஸ்புக், டிவிட்டர், இ-மெயில், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

 

 • ரஷ்யா உலகின் மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் சதந் 2 என குறிக்கும் வகையில் உலகின் கனமான மற்றும் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை 11,000 மைல்கள் சென்று தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

 • ஸ்மார்ட்போன், டேப்லட் உள்ளிட்ட மின்னனுக் கருவிகளை குழந்தைகள் பயன்படுத்துவதால் அவர்களின் பேசும் திறன் தாமதமாகலாம் என்று கனடா விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

 

 • அமெரிக்க அதிபராக ஒபாமா பொறுப்பு வகித்த காலத்தில் இயற்றப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்களான சிவா தாபா, சுமித் சங்வான் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

 

 • மலேசியாவில் நடைபெறும் சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் இந்தியா மலேசியாவிடம் தோல்வியடைந்தது.
 • குஜராத்துக்கு எதிராக 9 சிக்சருடன் 97 ரன்கள் விளாசிய டெல்லி வீரர் ரிஷாப் பான்ட்டை சச்சின் தெண்டுல்கர் பாராட்டி புகழாரம் சூட்டினார்.

 

 • தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடந்தது. இந்த ஆண்டுக்கான 2-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் வீரர்கள் பதிவுக்கான விண்ணப்பம் இன்று முதல் வினிpயோகம் செய்யப்படுகிறது.

 

 • பன்னாட்டு கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகையை பத்து மடங்கு அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 43.76 டாலராக சரிந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அச்சத்தின் காரணமாக பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டதாக சந்தை வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் சரிவைக் கண்டன.

 

 • பிஎஸ்இ நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 3 மடங்கு உயர்ந்து ரூ.72.66 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.20.24 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் மொத்த வருமானம் சிறதளவு உயர்ந்திருக்கிறது

 

 • ஐஷர் மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம் 34.5 சதவீதம் உயர்ந்து ரூ.460 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.342 கோடியாக நிகர லாபம் இருந்தது.

 

 • பொதுத்துறை நிறுவனமான ஹட்கோவின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) வரும் 8ம் தேதி முதல் தொடங்குகிறது. 11ம் தேதி வரை இந்த நிறுவன பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஐபிஓ மூலம் ரூ.1224 கோடி திரட்ட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. 2,04,058,747 பங்குகளை விலக்கிக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி நடப்பு நிதி ஆண்டில் வருவாயை ரூ.20000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. நாடு முழுவதும் சங்கிலித் தொடர் உணவகங்களை அமைக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

 • பொதுத்துறையைச் சேர்ந்த பொதுக் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நான்காம் காலாண்டு லாபம் 22மூ அதிகரித்தது.

 

 • உள்நாட்டில் கலப்பட பஞ்சு விற்பனையால் இறக்குமதி பஞ்சு வரத்து 3 மடங்கு அதிகரித்துள்ளது.

Call Now
Message us on Whatsapp